திருவாளர்.சந்தை அவர்கள்



பெஞ்சமின் பிராங்ளின், பங்கு முதலீட்டின் தந்தை எனக் கருதப்படுபவர், ஒரு முறை, தினசரி பங்கு விலையின் எற்ற இறக்கங்களை நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பின் வரும் மனோனிலையை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

"பங்கு விலையின் மூலத்தை நமக்குப் பரிட்சயமான நண்பர் திருவாளர்.சந்தை அவர்களிடம் இருந்து வருவதாகக் கற்பனை செய்வது கொள்வோம். ஒவ்வொரு நாளும் தவறாமல் நம்மிடம் இருக்கும் பங்குகளை அவர் வாங்க விரும்பும் விலையை முன் வைப்பார். அதே பொல அவரிடம் உள்ள பங்குகளை அவர் விற்க விரும்பும் விலையையும் எடுத்து வைப்பார்.

பங்குகளின் நிருவனங்களும், அவற்றின் செயல்பாடுகளும் நிலையானவையாக இருந்தாலும், சந்தை அவர்கள் அவற்றுக்குக் கூறும் விலை நாளுக்கு நாள் (ஏன் நிமிடத்திற்கு நிமிடம் கூட) மாறிக் கொண்டே இருக்கும். நண்பர் அடிக்கடி சஞ்சலப்படும் மனநிலை கொண்டவர்.

சில சமயங்களில் நல்ல மனநிலையில் இருக்கும் பொது, நிறுவனங்களின் நல்ல எதிர் காலம் மட்டுமே அவர் கண்களில் தென் படும். இது போன்ற தருணங்களில் நம்மிடம் இருக்கும் பங்குகளை வாங்க என்ன விலை வேண்டுமானலும் தரத் தயங்க மாட்டார். அவரது பயமெல்லாம் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வரும் இலாபத்தை நாம் அபகரித்து விடுவோம் என்பது மட்டுமே. எப்பாடு பட்டாவது நமது பங்கை கைப்பற்றுவதே அவரது குறிக்கோள்.

வேறு சில தருணங்களில் மிகவும் சோர்வடைந்தவராகக் காட்சியளிப்பார் சந்தை அவர்கள். நிறுவனத்திற்கும், உலகத்திற்கும் மிக மோசமான எதிர் காலம் மட்டுமே இருப்பதாகக் கருதுவார். நமது உடைமைகளை அவரிடம் தள்ளி விட்டு விடுவோம் என்ற அச்சத்தில், மிக மிகக் குறைவான விலைகளையே பங்குகளுக்கு முன் வைப்பார். தனது பங்குகளை எவ்வளவு குறைவான விலையாயினும் பரவயில்லை என்று நம்மிடம் விற்று விட முயல்வார்.

திருவாளர்.சந்தை ஒரு உன்னதமான கொள்கை உடையவர். நாம் அவரை உதாசீனப் படுத்துவதை அலட்சியப் படுத்தாத பண்பு அவருடையது. ஒரு குறிப்பிட்ட நாளில் அவர் குறிப்பிடும் விலை நமக்குச் சரி வரவில்லையெனிலும், அவர் உதாசீனப் படுத்தப்பட்டாலும், அடுத்த நாள் வெறொரு விலையுடன் வந்து நம் முன் காட்சியளிப்பார்.

இவ்வாறான ஒரு நபருடன் தொழில் செய்வது மிக எளிமையானது. நண்பரது மன நிலை குன்றியது போன்ற சமயங்கள் நமக்கு மிக உகந்தவை, பின் வரும் ஒரு செய்தியை மட்டும் மனதில் கொண்டோமேயானால்!!

திருவாளர்.சந்தை நமக்குச் சேவை செய்ய இருக்கும் நபர். ஒரு பொழுதும் அவர் நம்மை வழி நடத்த அனுமதிக்கக் கூடாது. அவரது முட்டாள் தனமான அனுகுமுறையைக் கண்டு அவரை அலட்சியப் படுத்தவும் செய்யலாம். அல்லது நமது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம். அவருடைய வழி நடத்துதலின் படி நடத்தல் சமங்களில் அபாயகரமாக அமையும்.

உண்மையை சொல்லப் போனால், ஒரு நிறுவனத்தையும் அதன் தொழில் முறையும் சந்தையை விட நாம் நன்கு புரிந்து கொள்வோம் என்று கூறி விட முடியாது. அது போன்ற நேரங்களில், நாம் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் தூர நின்று வேடிக்கை பார்ப்பது புத்திசாலித்தனம்"


from: http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_114657887648929090.html

சப்போர்ட் லெவல் , ரெஸிஸ்டென்ஸ் லெவல் என்றால் என்ன ?


ரெஸிஸ்டென்ஸ் லெவல்:

ரெஸிஸ்டென்ஸ் லெவல் என்பது ஒரு பங்கின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் போகாது (அது அப்போதைய சூழ்நிலையில்). அந்த விலையைத் ரெஸிஸ்டென்ஸ் லெவல் என்று சொல்கிறார்கள். முதலீடு செய்பவர்கள் ரெஸிஸ்டென்ஸ் லெவல் இறங்கினதும் வாங்கலாம். விற்று வெளிவர நினைப்பவர்கள் ரெஸிஸ்டென்ஸ் லெவல் தாண்டியதும் விற்கலாம்.

சப்போர்ட் லெவல்:


சப்போர்ட் லெவல் என்பது விலை இறங்கும் பங்கு அங்கு தட்டுப்பட்டு நிற்கிறது அல்லது அதற்கு கீழேயும் செல்ல முடியாமல் ஆதரவு இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவது. ஒரு பங்கு சப்போர்ட் தாண்டியும் கீழே விழும் பட்சத்தில் அதை விற்காமல் தொடர்ந்து கையில் வைத்திருப்பது புத்திசாலித்தனமில்லை.

பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன?

பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (What Causes Stock Prices To Change?)
சந்தையின் நிலையை பொறுத்து பங்குகளின் விலை மாறுபடும்.உதாரணமாக, அதிக மக்கள் ஒரு பங்கை (stock) வாங்க முன்வருகிறார்கள்என்றால் அப்பங்கின் விலை அதிகரிக்கும். அதாவது, வாங்குவதுஅதிகரித்து விற்பது குறைகிறது. (What causes stock prices to change)

அதிக மக்கள் ஒரு பங்கை வாங்குவதற்கு பதிலாக விற்கிறார்கள் என்றால்,அப்பங்கின் விலை குறையும். அதாவது வாங்குவது குறைவு, விற்பதுஅதிகம். (When the selling is more, price falls down)

சற்று எளிமையாக சொல்லப்போனால், மக்கள் அதிகளவில் வெங்காயம்வாங்குகிறார்கள் என்றால் அதன் தேவை அதிகரித்து, விலை ஏறும். அதேவெங்காயத்தின் தேவை குறைந்தால், விலையும் குறையும். அதேகதைதான் பங்குச்சந்தையிலும்.

சரி, முதலீட்டாளர்கள் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றும்,வேண்டாமென்றும் எவ்வாறு முடிவெடுக்கிறார்கள். (How investor decides to buy/not to buy particular stock) இதற்கு பல காரணங்கள் உண்டு. பெறும்பாலும் அதுமுதலீட்டாளரின் மன நிலையை பொறுத்து.

சரி சில காரணங்களைத்தான் பார்ப்போமே !

  • ஒரு கம்பனி மேல் கூறப்படும் செய்தி (what news is positive for a company and what news is negative). அது நல்ல செய்தியாகவும் இருக்கலாம், கெட்டசெய்தியாகவும் இருக்கலாம். பொதுவாக முதலீட்டாளர்கள் ஒருகம்பனியின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பொறுத்தே,அக்கம்பனியின் பங்கு ஏற்றத்தையோ, வீழ்ச்சியையோ சந்திக்கும்.
  • ஒரு கம்பனியின் சந்தை மதிப்பு. (Market capitalization)

ஒரு கம்பனியின் சொத்து, அதன் சந்தை மதிப்பை பொறுத்து.அதாவது ஒரு பங்கின் விலை * மொத்த பங்குகள். (price per share * no of shares)

உதாரணமாக, ஒரு கம்பனி (Company A) பங்கின் விலை $100 என்றுவைத்துக்கொள்வோம். மொத்தம் 1 Million பங்குகள் (shares) என்றால்அக்கம்பனியின் மதிப்பு என்பது $100 * 1 million shares = $100 millionஆகும்.

அதே மற்றொரு கம்பனி (Company B) பங்கின் விலை $50 என்றுவைத்துக்கொள்வோம். மொத்த 5 million பங்குகள் என்றால்,அக்கம்பனியின் மதிப்பு $50 * 5 million shares = $250 million ஆகும். அதாவதுமுன்பு கூறப்பட்ட (Company A) கம்பனியை வீட இதற்கு (Company B)சந்தையில் மவுசு அதிகம்.

  • கம்பனியின் ஆண்டு வருமானம். (Company Earnings)

ஒரு கம்பனி லாபகரமாகவும், அதிக வருமானம் ஈட்டுகிறது என்றால்சந்தையில் நீண்ட காலம் நிலைக்க கூடியது என்று அர்த்தம்.

அதே ஒரு கம்பனி நட்டத்தில் ஓடுகிறது என்றால், அக்கம்பனியின்பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். அவ்வறான நிறுவனங்கள்சந்தையில் நிலைக்க முடியாது.

இதற்காகத்தான் பொது நிறுவனங்கள் ஒவ்வொரு காலண்டிற்கும்லாபம்/நட்டங்களை வெளியிடுவார்கள். அவ்வாறான முடிவுகள்முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கு வகையில் இருந்தால்,அக்கம்பனி பங்குகளின் விலை ஏறும். அதே எதிர்பார்த்த அளவிற்குமுடிவுகள் இல்லாமல் அதிர்ச்சியை கொடுக்கும் என்றால் பங்குகளின்விலை இறங்கும்.

பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் கம்பனியின் காலாண்டுமுடிவுகளை (Quarterly results) மட்டும் சாராது, வேறு நிறைய காரணங்களும்அடங்கும். அவ்வாறான சில காரணங்கள் பின்வருமாறு,

  • நாட்டின் பொருளாதார நிலையை பொறுத்து.
  • பணவீக்க விகிதத்தை பொறுத்து. (Inflation)
  • நிதி அமைச்சகத்தின் பொருளாதார கொள்கைகள்.
  • அந்நிய முதலீடுகள். (Foreign Investments)
  • கச்சா எண்னை விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து. (Oil prices)
  • பருவ மழை பெய்ய வில்லை என்றால் தானிய உற்பத்தி குறைந்து,அதை சார்ந்த பங்குகள் பாதிப்படையும்.
  • ரிசர்வ் வங்கி வெளியிடும் செய்திகள். (Reserver Bank news)
  • புயல், சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள். (Natural disaster)
  • அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள். (American economical status)
  • மத்திய அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை.

என்று எவறுமே கனிக்க முடியாத நிறைய விசயங்கள் பங்குச்சந்தைபாதிக்கும். மேலே குறிப்பிட்டது போல இவை சில காரணங்களே.பங்குச்சந்தையின் நிலை கனிப்பது சற்று கடினமான விசயம் என்று நிறைஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.