Showing posts with label பழம். Show all posts
Showing posts with label பழம். Show all posts

நாவல் பழம்

 மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது.



ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள்.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.

மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.


நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்

பேரிச்சம் பழத்தால் உண்டாகும் நன்மைகள்

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது.
அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போம்

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு உகந்தது:

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன.
இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.
ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும்.
ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு :

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற்சொத்தை:

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.