இன்றைய உலகில், பங்கு சந்தை என்பது சாதாரண பாமரனும் அறிந்து வைத்துள்ள ஒரு மந்திர வார்த்தை. எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதை முழுமையாக தெரியாவிட்டாலும் சந்தை ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்குமுகமாக உள்ளதா என்ற சின்ன செய்தியையாவது எல்லாரும் தெரிந்து வைத்துள்ளனர். ஒருபுறம் SHARE BROKERS தாங்கள் வணிகத்தை பெருக்க கையாளும் சந்தை பெருக்கம் இதனுடன் ULIP எனப்படும் முதலீட்டுடனான காப்பீடு முகவர்கள் செய்யும் மூளை சலவை.. எல்லா தொலைகாட்சி செய்திகளிலும் சந்தை பார்வைக்கு என்று சிறப்பிடம். இவை அனைத்தும் சேர்த்து இன்று சினிமா பாடல் வரிகளில் வரும் அளவு மக்களுடன் சேர்ந்து விட்டது நம் பங்குசந்தை.
சமுதாயத்தில் இதன் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக, பங்குச்சந்தை தொழிலை ஏற்போரும் அதிகரிக்கவே செய்துள்ளனர். மற்ற எந்த தொழிலை விடவும் SHARE MARKET இல் FRANCHISEE அல்லது SUB BROKERSHIP என்பது மிகவும் எளிமையான மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழிலாக மாறியிருப்பதே இந்த மிகப்பெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.
FRANCHISEE தொடங்குவது எந்தளவுக்கு எளிதான ஒன்றோ, அதை நடத்துவது என்பது மிகவும் பொறுப்பான ஒரு செயலாகும். சட்ட நடைமுறைகள் போக, பிறரின் முதலீட்டை கையாளுகிறோம் என்ற பொறுப்பு மிகவும் முக்கியமானது.
TRADE செய்வது மட்டுமே FRANCHISEE ஆரம்பிக்க போதுமான ஒரு திறமை ஆகாது. FRANCHISEE OWNER என்பவர் MANAGER , DEALER , BACK OFFICE ஆகிய மூன்று பேர்களின் பணியையுமே செய்ய கடமைப்பட்டவர்.
இது போக முதலீட்டாளர்களுக்கு சிறந்த சந்தை தகவல்களும், சரியான தரணத்தில் அளிக்கும் சேவைகளுமே ஒரு FRANCHISEE BUSINESS ஐ வெற்றிப் பெற செய்யும்.
ஒரு SHARE BROKING FIRM என்பது கீழ்கண்ட துறைகளை ஒருங்கிணைதத்தே:
1. MARKETING
2. DEALING
3. BACK OFFICE OPERATION
4. TECHNICAL ANALYSIS
4. TECHNICAL ANALYSIS
இந்த தொழில் வெற்றிபெற இந்த நான்கு துறை சேவைகளையும் முதலிட்டலர்களுக்கு சரியான முறையில் , சரியான தருணத்தில் வழங்கப்படவேண்டும்.
1 comments:
நல்ல தகவல் நண்பா.. ஒரு சின்ன வருத்தம்.. இந்தப் பதிவுக்கு மேலே உள்ள அந்த விளம்பரத்தை கீழே பிரசுரிக்கமுடியாதா??
Post a Comment