Trend Lord மூலம் BANK NIFTY யில் பணம் அள்ள

பணம் தரும் பங்குச்சந்தை வாசகர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கம்


VISTAFOREX.IN  மூலம் FOREX  வணிகர்களுக்கு மென்பொருள் சேவை வழங்கி வந்த   நாங்கள், வரும் புத்தாண்டு முதல் இந்திய  பங்குவனிகர்களுக்கு
TREND LORD   எனும் மென்பொருள் வாயிலாக வணிகம் செய்யும் சேவையை வழங்க இருக்கிறோம்

இந்த மென்பொருள்  BANK-NIFTY  யில் வணிகம் செய்வதற்கு எற்ற வகையில் வடிவமைத்து உள்ளோம்

இதன் மூலம் கடந்த 6 மாதத்தில் 4350 புள்ளிகளை லாபமாக ஈட்டி உள்ளோம்

எங்களது வணிக விபரங்களை அறிய இங்கே அமுக்கவம் 

இது SUB-BROKERS ,FRANCHISEE OWNERS மற்றும் SWING-TRADE செய்பவர்களுக்கு இது  மிகவும் உபயோகமான ஒரு மென்பொருள் ஆகும்


வணிக தொடர்புக்கு  ராஜாமணி -97510-25999உதவி

 ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பங்குச்சந்தை ரகசியம்
பணவீக்க உயர்வு

ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான்.

கடந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி குறித்த புள்ளி விபரத்தை மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில், ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த குறைவான வளர்ச்சி மற்றும் அதிகளவிலான பணவீக்கம், மத்திய வங்கியின் கொள்கைகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு தொழில்துறை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் வெகுவாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி, நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 1.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 2 சதவீதத்திற்குள் குறைவான வளர்ச்சியே இருந்துள்ளது.குறைந்த வருமானம், மக்கள் தொகை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 11.7 சதவீதமாகவும், நகர்புறங்களில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள தோல்வி காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது, நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கொண்ட வெறுப்பின் காரணமாகவே அக்கட்சிக்கு எதிராக வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளதற்கு காரணம். மத்திய வங்கியின் ஆதரவு மண்டலத்தை விட பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் நாட்டின் வளர்ச்சி குறைந்த அளவில் உள்ளதால், கொள்கை அளவிடுதலை கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சில வர்த்தக பரிமாற்ற முறைகளை கையாண்ட வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்க உயர்வு குடும்பதாரர்களின் பட்ஜெட்டை கடுமையாக பாதித்து வருகிறது. ஆனால்,பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் மத்திய அரசு, சந்தை சட்டங்களையும் சீரமைக்க மாநில அரசுகள் தவறியதே பணவீக்க உயர்விற்கு காரணம் என மாநில அரசுகளை குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது புதிய பணக் கொள்கையை அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இதனால் நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை அதிகரிக்க உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 9.9 சதவீதமாக இருந்த தொழில்துறை உற்பத்தி, நடப்பு ஆண்டு அக்டோபரில் 2 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி சுரங்க உற்பத்தியும் 3.5 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மின்துறை வளர்ச்சி மட்டும் 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 

மார்க் ஃபேபர் (MARC FABER)

 #முதலீட்டு ஆலோசகர், ஃபண்ட் மேனேஜர், எழுத்தாளர், பேச்சாளர் என இவருக்கு பல முகங்கள் உண்டு.

#ஸ்விட்சர்லாந்தில் பிறந்த இவர் 24 வயதில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (ஜூரிச் பல்கலைகழகத்தில்) பெற்றவர்.

#மாற்று சிந்தனையாளர் (contrarian) என முதலீட்டாளர்கள் இவரை அழைப்பார்கள்.

#The Gloom, Boom and Doom என்ற மாதாந்திர மாற்று முதலீட்டு அறிக்கையை இவர் வெளியிடுவார். மேலும் முன்னணி பத்திரிகைகள் மற்றும் கருத்தரங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.

#Tomorrow's Gold, 'Asia's Age of Discovery உள்ளிட்ட சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். இந்த புத்தகங்கள் அமேசான் இணையதளத்தில் பல வாரங்களாக விற்பனையில் முன்னணியில் இருந்தன. மேலும் கொரியா, தாய் மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

#1987ல் அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு, 1990ல் ஜப்பானில் ஏற்பட்ட சரிவு, 1997/98ல் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு போன்றவற்றை கணித்தவர் மார்க். 

அனலிஸ்ட்களுக்கு புதிய விதிமுறை: செபிபங்குச்சந்தை வர்த்தகத்தில் அனலிஸ்ட்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் கொடுக்கும் அறிக்கை சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை உயரும். ஒரு வேளை பாதகமான அறிக்கை வரும் பட்சத்தில் பங்குகளின் விலை சரியும் அபாயமும் இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறையினை செபி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பற்றி கருத்து கூறுவதற்கு புதிய விதிமுறைகளை கொண்டுவரப்போகிறது செபி. வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனம் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கூற முடியாது.

ஒருவேளை கருத்து கூற வேண்டும் என்றால் இந்தியாவில் ஓர் துணை நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் மூலம் விண்ணப்பித்த பிறகு தான் பங்குச்சந்தை கணிப்புகளைக் கூற முடியும்.

வெளிநாட்டு புரோக்கரேஜ் நிறுவனங்கள் இது போல சில அறிக்கைகளை வெளியிட்டு அதன்மூலம் பங்குகளின் விலை சரிந்ததால் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

கனடாவை சேர்ந்த வெரிட்டாஸ் நிறுவனம் டி.எல்.எஃப்., ரிலையன்ஸ், இந்தியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்களை பற்றி கூறிய கருத்துகள், அந்த பங்குகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாகவே செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

மேலும் சர்வதேச பங்குச்சந்தை அமைப்பும் (ஐ.ஓ.எஸ்.சி.ஓ) பங்குச்சந்தை அனலிஸ்களுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று செபியிடம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறையின் படி, முறையான சான்றிதழ் இல்லாமல் ஒருவரும் பங்குச்சந்தை அனலிஸ்டாக இருக்க முடியாது. அதே சமயத்தில் அனலிஸ்ட்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குலைக்கும் வகையிலோ, அல்லது அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்காக கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.மேலும் அனலிஸ்ட்கள் தங்களது முதலீடுகளை, நேரடி மற்றும் மறைமுக வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வெளியே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் ஒர் அனலிஸ்ட் தான் பரிந்துரை செய்த அல்லது நிறுவனம் பரிந்துரை செய்த பங்குகளில் 30 நாள்களுக்கு முன்பாகவோ அல்லது பரிந்துரை வெளியான 5 நாட்களுக்கு உள்ளாகவோ அந்த பங்கில் எந்தவிதமான பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை.