கடலில் மிதக்கும் காற்றாலை

வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மின் சக்தியின் தேவையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பாரம்பரிய முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் அனல் மின்சாரம், நீர் மின்சாரம் ஆகியவற்றை விட காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், செலவு குறைந்ததாகவும், அணு மின்சாரத்தைப் போல அல்லாமல் கொஞ்சமும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வழிமுறையாகவும் இருந்து வருகிறது.


இதனால் நிலப்பகுதிகள் குறைந்த நாடுகளில் கூட காற்றாலைகளை புதிய உத்திகளுடன் பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கடலில் மிதந்து கொண்டே அங்கு வீசும் காற்றின் இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலை மின்சாரத் தொழில்நுட்பம். உலக சமாதனதுக்காக உழைக்கும் நோர்வே நாட்டிலும், போச்சுக்கல் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் பிரபலமடைந்து வருகிறது.


ஹைவிண்ட் (Hywind) என அழைக்கப்படும் 2.3 மெகா வாட் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் திறனுடன் கூடிய மிதக்கும் காற்றாலைகளை இந்த நாடுகளுக்கு 'சிம்மென்ஸ்'(siemens) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது நோர்வே நாட்டின் கடற்கரையோரங்களில் சோதனை முறையில் இயக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட அளவில் மின் உற்பத்தி பெறப்பட்டுள்ளதால், இந்த மிதக்கும் காற்றாலைகளை வட அமெரிக்கக் கரையோரங்கள் மற்றும் இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகளின் கடற்கரையோரங்களிலும் அமைப்பதற்கு பல பன்னாட்டு மரபுசாரா மின் உற்பத்தி நிறுவனங்கள் அனுமதி பெற்றுவிட்டன.

பொன்மொழிகள்

"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை.
தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். " -ஸ்பெயின்.


"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.

"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.

"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.

"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி."ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.

"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.

"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.

"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது."-ஜப்பான்

திருடி

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் .

 பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத் தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள்.

அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே, அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்