இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை வீடியோ காட்சிகள் மூலம் வெளி உலகுக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநர் கல்லம் மேக்ரே இந்தியா வர விசா மறுக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் நவம்பர் 7ம் தேதி லாபநோக்கற்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நவம்பர் 6ம் தேதி இந்தியா வர கல்லம் மேக்ரே திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், கல்லம் மேக்ரேவின் விசாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
தமிழீழ படுகொலைகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டது முதல் இறுதியாக விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பு பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டது வரை அனைத்தையும் வீடியோக்கள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த சேனல் 4 தொலைக்காட்சியின் இயக்குநருக்கு விசா மறுக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
1 comments:

Post a Comment