பிச்சைக்காரன்

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, “அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.

“அன்பரே.. நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்.” அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.

கணவான், “எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா?”.  என்று கேட்டார்

கோட் சூட் வாலிபன் சொன்னான், “நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்”.

“எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்”.

“அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். “நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா”, என்றான்.

அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன் பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம்!