தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
......................................................
ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
...................................................
ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
................................................
நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
...........................................
ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
...............................................................
ஆண்: என்னோட மனைவியைக் காணோம்....................ஒரு அஞ்சுநிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண்: எதுக்கு?
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
...........................................................................
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
2 comments:
அருமை அருமை
ரசித்துப் படித்தேன்
படித்துச் சிரித்தேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நல்ல நகைச்சுவைத் தொகுப்பு.
Post a Comment