பங்குசந்தை: FUTURE TRADE என்றால் என்ன?

FUTURE TRADE என்றால் என்ன?

Future ஐ பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அன்றாட வாழ்க்கையில் FUTURE TRADE அடிப்படையில் நமக்கு தெரிந்த சில உதாரணங்களைப் பார்ப்போம்.

வீடு அல்லது நிலத்திற்கான ஒப்பந்தம்:

வீடு அல்லது நிலம் வாங்கும்போது பெரும்பாலும் உடனடி கிரயம் என்பது சாத்தியத்தில் இல்லை. வீட்டிற்கான விலையை வாங்குபவரும் விற்பவரும் முடிவு செய்தப்பின், வாங்குபவர் முன்பணம் செலுத்திவிட்டு மீதி தொகைக்கு குறைந்தது 2 மாத ஒப்பந்த பத்திரம் வரைவர். குறிப்பிட்ட இரண்டு மாத காலக்கட்டத்திற்குள் வாங்குபவர் மீதி பணத்தை செலுத்தி வீட்டை தனக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் அல்லது வேறு  யாருக்கேனும் மாற்றிக் கொடுக்கலாம்.
இடைப்பட்ட காலகெடுவுக்குள் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் விற்பவரை சாராது. ஒப்பந்தத்திற்கு பிறகு விலை ஏறினால் அந்த லாபம் வீடு வாங்குபவரே சேரும், விலை இறங்கினாலும் வாங்குபவரே ஏற்க வேண்டும். 
பெரும்பாலான வீட்டு தரகர்கள், ஒப்பந்தத்திற்கு பிறகு வீட்டை தன்பெயரில் பதியாமல், மற்றுமொரு பயனாளிக்கு விற்று விடுவார். விலை இறங்குமெனில் முழு விலையையும் செலுத்த வேண்டும் அல்லது அவர் செலுத்திய முன்பணத்தை இழக்க வேண்டும். இதுவே இவ்வர்த்தகத்தில் அவருக்கு இருக்கும் நஷ்ட அபாயமாகும்.

இதே போன்ற முன்பணம் செலுத்தும்  ஒப்பந்த முறையை  நாம் பல வர்த்தகங்களிலும் காணலாம்; ஏலம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும் முன்பணம் செலுத்தி பின்னரே முழுபணத்தையும் செலுத்துவர்.


இப்பொழுது பங்கு சந்தையில் FUTURE TRADE எவ்வாறு செயல் படுகிறது என்பதை பார்ப்போம்:
பங்கு சந்தையில் FUTURE INDEX அல்லது FUTURE STOCKS , "CONTRACT " என்ற சொல்லிலேயே அழைக்கப்படுகிறது. உதாரணமாக NOV RELIANCE FUTURE என்பதை NOV MONTH RELIANCE CONTRACT என்றும் அழைக்கலாம். 

பங்கு சந்தையில் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும், இவ்வாறு மூன்று மாதங்களுக்கான ஒப்பந்தங்கள் (CONTRACTS ) எல்லா பங்குகளிலும் காணப்படும். ( உம்- RELIANCE STOCK க்கான மூன்று ஒப்பந்தங்கள் - SEP28 , NOV26 , OCT 28 என்று அடுத்த மூன்று மாத ஒப்பந்தங்கள் இருக்கும்)

ஒவ்வொரு மாதத்திற்கான ஒப்பந்தமும், அந்த மாதத்தின் கடைசி வியாழகிழமை அன்று முடிவடையும். ( SEP 28 என்பது, செப்டெம்பர் மாதத்தின் கடைசி வியாழன் 28 ம் தேதி என்று பொருள்)

ஒருவர் காணப்படும் மூன்று ஒப்பந்தங்களில் எந்தொரு ஒப்பந்தத்தில் வேண்டுமானாலும் ஈடுப்படலாம். ( SEP மாதத்தில் இருக்கிறோம் என்று கொள்வோம், ஒருவரால் SEP , OCT , NOV இதில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடலாம்)  பொதுவாக நடப்பு மாத ஒப்பந்தமே பங்குசந்தையில் அதிகமாக கையாளப்படும்.
ஒவ்வொரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் முன், கண்டிப்பாக அதற்கான முன்பணம் செலுத்த வேண்டும். பங்குசந்தையில் முன்பணம் என்பது SPAN MARGIN என்று அழைக்கப்படும். ஒவ்வொரு CONTRACT க்கான SPAN MARGIN  எவ்வளவு என்பதை NSE தினமும் வெளியிடும்.

இப்பொழுது மறுபடியும் வீட்டிற்கான ஒப்பந்தத்துடன், பங்குசந்தை FUTURE CONTRACT ஐ ஒப்பிட்டு பாருங்கள். ஒப்பந்தம், முன்பணம் மற்றும் ஒப்பந்தத்திற்கான கடைசிநாள் அல்லது காலக்கெடு இவை அனைத்துமே ஒத்துவருவதைக் காணலாம்.

வீட்டிற்கான விலை ஏற்ற இறக்கம் என்பது  2 மாதத்திற்குள் பெரும்பாலும் மாற்றம் இருக்காது, ஆனால் பங்குசந்தையின் சிறப்பம்சமே தினசரி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே. 

பங்குசந்தையின் FUTURE TRADE இல் காணப்படும் மிகசிறந்த அம்சம் என்னவெனில், ஒருவரால் எந்தொரு CONTRACT ஐயும் வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.
 
ஆகவே FUTURE TRADE என்பது இருமுனையிலும் கூர் உள்ள கத்தி போன்றது; எவர் வேண்டுமானாலும் வாங்கி விற்கமுடியும் என்பதற்காக  அன்றி, இதை ஒரு கலை போன்று  பயில வேண்டும்.

சந்தையில்  ஈடுப்படும்முன் சிறந்த முறையில் அடிப்படை கூற்றுகளை அறிந்து கொள்ளல் வேண்டும்.

1 comments:

Unknown said...

இன்னும் விரிவாக எழுதுங்கள் .நன்றி