பணவீக்கம் 6.84 சதவீதமாக உயர்வு


ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கடந்த நான்கு மாதங்களாக குறைந்த வந்த பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் 6.62 சதவீதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 6.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை, வெங்காயம் மற்றும் பழவகைகளின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேமாதத்தில் பணவீக்கம் 7.56 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.