பெட்டிக்கடை - "சின்ன கல்லு, பெத்த லாபம்"

ஒரே பரபரப்பா இருந்தது, நாஸ்டாக் நாகராஜ் கிட்ட போன்ல பேசின, "சார், உங்க அனுபவத்த எங்ககிட்ட பகிர்ந்துக்கணும், மக்கள் எதிர் பாக்கறாங்க'ன்னு சொன்னேன் . அதுக்கு அவரு," அனுபவத்தன்னா, எந்த அனுபவம்? டாஸ்மாக் ல சரக்கடிகறது கூடதா அனுபவம், ஊருக்கு போனா அனுபவம், வந்தா அனுபவம், உட்காந்தா, நின்னா, படுத்தா எல்லா அனுபவம் தா.... நீ எத பத்தி கேட்கிற தம்பி??". குபீர்னு வேர்த்துச்சு.. மறுபடியும் தெளிவா கேட்டேன், ' சார்..., உங்க பங்கு சந்தை அனுபவம் பத்தி கேட்டேன் சார்",, "ஓ!! அப்படியா! தெளிவா சொல்லன்னும்மில்ல!! படிச்ச புள்ள.. எதையும் வெவரம பேசணும்" அப்படின்னு சொல்லி என்ன அவினாசி ரோடு பெட்டிக்கடைக்கு வரசொல்லிட்டாறு.

நாஸ்டாக் நாகராஜ் சார எனக்கு முன்னாடியே தெரியும், நா கோயமுத்துர்ல வொர்க் பண்ணினபோ அவரு என்னோட client , trade ஏதும் பெருசா பண்ண மாட்டார், ஆனா அட்வைஸ் நெறையா பண்ணுவார். ரொம்ப நாள் ஆயிடுச்சி இடையில.. எப்படி மாறியிருப்பரோ?, என்னனென்ன சொல்லுவாரோ, என்கிட்டே ஏதாவது கேட்பாரோ?? பல கேள்விகள் மனசுக்குள்ள.. திட படுத்திக்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நா திருப்பூர் க்கு வந்து 5 வருஷம் ஆயிட்டதால கோயமுத்தூர் கொஞ்சம் புதுசாவே தெரிஞ்சது. கௌதம் சென்டர் ல வொர்க் பண்ணினது கண்ணுக்கு வந்து போச்சு.. யோசிச்சிகிட்டே இடத்த நெருங்கிட்டேன்.. அதே பெட்டிக்கடை.. ரோட்ட விரிவாக்கனதுள்ள கொஞ்சம் எடம் மாறிருக்கு. மத்தபடி அதே பையன்.. சுத்தி tea குடிச்சிட்டும், புக விட்டுட்டும் நம்ம clients .. 
கொஞ்ச நேரம் கழிச்சி வந்தார்.. அதே கெட்-அப், கொஞ்சமும் மாற்றமில்ல.. அதே MGR மீச.. DYE அடிச்ச தலைமுடி, TIGHT ஷர்ட், பான்ட்.. அதே பீடா மோகம்.. தூரத்திலேயே பார்த்துட்டார், அரசியல்வாதி மாதிரி ஒத்த கைய தூக்கி கும்பிடு போட்டுட்டே வந்தார்.. "என்ன பா ராஜேசு!! எப்படி இருக்க!! ரொம்ப நாள் ஆச்சில்ல.. ஆளு உடம்பு போட்டுட.. கல்யாணம் பண்ணிட்டியா??", கேள்வி கேட்டுகிட்டே போனவர மறிச்சி, ' உங்க கிட்ட சொல்லாமலா சார்.. இன்னியும் ஆகல!" பேசிக்கிட்டே சைகைல பீடா ஆர்டர் பண்ணிட்டார், பீடா போட்டுட்டு அவரு பேசுறது.... ஸ்டைலுனு இப்ப சொல்லிக்கிலாம். 

அவரே ஆரம்பிச்சார்," வெள்ளிகிழம கூப்பிடுர ?? !! வாரம் புல்லா (full ) ப்ரோகருக்கு சம்பாரிச்சு குடுத்துட்டோம், பாவம் அரசாங்கம் நஷ்ட்டத்துல இருக்குல.. அதா நேத்து சாயங்காலம் டாஸ்மாக் போயிட்டேன்", என்ன சொல்லணும் ஷேர் மார்க்கெட் பத்தி?? நா என்னப்பா சொல்ல போறேன்.." சுத்தியும் அப்படியே காட்டினவரு, " பாரு எல்லாத்தையும், ஏதோ வெட்டி முறிகிற மாதிரி இன்னைக்கும் ஆபீஸ் பக்கம் சுத்திக்கிட்டு இருக்காங்க!! இவங்களுக்கெல்லாம் வீடே இருக்காதா?? எப்ப பாத்தாலும் இங்கயே குப்ப கொட்டுறாங்க.. அவங்க கிட்ட கேளு!! உதய் முகர்ஜி தோத்தான் போ.. அவ்வளோ பேசுவாங்க.."
"ஆனா நீயும் கரட்டான இடத்துக்குதா வந்திருக்க.. இந்த பெட்டிகடையில வச்சி தெரிஞ்சுக்கிற விஷயம் வேற எங்கயும் காசு குடுத்தாலும் கத்துக்க முடியாது.. என்னோட ஒருத்தனோட அனுபவம் அப்படிங்கறது விட.. இது ஒரு அனுபவ கூடம். ப்ரோக்கர்கிட்ட விட்ட காசெல்லாம் இங்க பேசியே தீர்ப்பாங்க!!".
சரி வெள்ளி கிழமன்னு  சொல்லி சனி கிழமைதா வர்றோம்.. ரொம்ப பேச வேண்டாம்.. அடுத்த வாரம் மார்கெட்ட பத்தி கிழி கிழின்னு கிழிச்சரலாம்.. சரியா.."

பீடா வாய்ல நொம்பீடுச்சி, துப்ப புடிக்காம பேச்ச முடிக்கிர்றாரு, .. சரி வேறென்ன பண்ணன்னு மனசுக்குல நெனச்சுக்கிட்டேன். "சார்.. வந்ததுக்கு எதாவது கருத்து சொன்னிங்கன்னா.. நல்லாஇருக்கும்..." இழுத்தேன்!!

சரி எழுதிக்கோ," ஷேர் மார்க்கெட் மட்டும் தா உலகத்துலேயே, சின்ன முதலீட்டுல நெறைய காசு பாக்க முடியும், அதுதா எல்லாத்தையும் காந்தம் மாதிரி இழுக்குது.. ஆனா நம்ம சரியா பண்ணினோம்னா  காசு பாக்கலாம்.. அப்படி இல்லேன்னா ப்ரோக்கர வாழ வைக்கிலாம். எந்திரன் படத்த மொத  நாள் பாக்க ஆச படாம இருக்கற ஒரே department இந்த client department தா .. ஏன்னா இங்கதா, " சின்ன கல்லு... பெத்த PROFIT "

விடை பெற்றார்.. மீண்டும் சிந்திப்போம் ..