நாட்டின் நிதி பற்றாக்குறை:
நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 5.3 சதவீதமாக இருக்கும். இது, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதமாக குறைக்கப்படும்.
நடப்பாண்டு பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகரித்து வரும் மானியச் செலவுகளால், நிதிப்பற்றாக்குறை அதிகரித்து, 5.3 சதவீதமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதார தர குறியீடு குறைப்பு குறித்த, பன்னாட்டு நிறுவனங்களின் அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.வரும், 2016 - 17ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 3 சதவீதமாக குறையும்
பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை
எதிர்வரும் 2013-14 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகளின் விற்பனை ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு குறையாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அப்போது, "பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவுமில்லை. அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறோம். வரும் நிதியாண்டிலும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை குறையாது என்பதில் அரசு நம்பிக்கையுடன் உள்ளது.
மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 % சதவிகிதத்துக்கு குறையாது. அதோடு எதிர்வரும் நிதி ஆண்டில் 6 முதல் 7 சதவிகித வளர்ச்சி அடையும் வகையில் முன்னேற்றம் காணும்" என்றும் கூறியுள்ளார். கடந்த 2011-12 நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
ரிசிர்வ் வங்கி வட்டி விகிதம்
வரும் செவ்வாய் அன்று நடைபெறவுள்ள ரிசிர்வ் வங்கி கூட்டத்தில் repo rate எனப்படும் வட்டி விகிதத்தை, இந்தியாவின் மத்திய வங்கி குறைத்து இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய பங்குசந்தைகள் தற்போது bull run எனப்படும் காளையின் பிடியில் உள்ளது ,அவை வரும் march மாதத்திற்குள் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது