ஜார்ஜ் சோரஸ் - இவரைத் தெரியுமா?




                                                          ஜார்ஜ் சோரஸ்

 #ஹங்கேரியில் பிறந்த இவர், நாஜிக்களின் காலத்தில் அங்கிருந்து வெளியேறினார். இப்போது அமெரிக்காவில் இருக்கும் இவருக்கு, உலகின் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர், சமூகசேவையாளர் என பல முகங்கள் இவருக்கு இருக்கிறது.

#லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸில் படித்தவர். படித்து பிறகு அமெரிக்காவில் உள்ள எப்.எம்.மேயர் புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

#அதன்பிறகு சில நிறுவனங்களில் வேலை செய்த சோரஸ் 1973-ம் ஆண்டு சொந்தமாக தன் பெயரில் ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

#1992-ம் ஆண்டு இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்தவர் என்றும் இவரை சொல்லுவார்கள்.

#அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி 100 கோடி டாலர் சம்பாதித்தார். வரலாற்றில் அது கருப்பு புதன்கிழமை என்று சொல்லுவார்கள்.

#Financial Turmoil in Europe and the United States, The Alchemy of Finance உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதி இருக்கிறார்.

#‘‘மக்களிடையே சென்று சேரவேண்டும் என்பதற்காகவோ, குற்ற உணர்ச்சியிலோ நான் சமூக சேவை செய்ய வரவில்லை. என்னால் பணம் செலவழிக்க முடிகிறது. அதனால் செய்கிறேன்” என்று சொன்னவர் இவர். 

ஜோசியம்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.

தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான். ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

 “அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

இசை பிரியா - கையால் ஆகாத காங்கிரஸ், திமுக,ஆதிமுக ........


இந்த நாய்களுக்கு பதிவி ஆசை தான் ஒரே இலக்கு ................


கொதித்து எழுந்திரிக்க வேண்டாமா ?????


ஏன் இன்னுமும் ஒருவர் கூட  ராஜினாமா செய்யவில்லை 


திமுக வின் கருத்து என்ன?


இந்திய அரசே,இலங்கை மீது போர் தொடு