பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது.
சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை
வாங்கி, விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.

0 comments: