பங்குச்சந்தை, சரிவு காத்திருக்கிறதா ?


இந்திய பங்குசந்தைகள் resistance zone என்று சொல்லக்கூடிய 5950 புள்ளிகளை  தாண்ட  முடியாமல் திணறி  வருகின்றது. இதனை மேலே உள்ள படத்தில் காணலாம், இவை  சென்ற  வருடம் (2011) march  மற்றும்  april  மாதங்களில் வந்த உச்ச புள்ளிகளாகும் (pivot high )

sensex  மற்றும்  nifty ஆகிய இரண்டுமே  weekly  மற்றும் daily  சார்ட்டில் insideday pattern form ஆகி உள்ளது .nifty weekly  level  ஆன 5940-5820 , உடைக்கும் பக்கம் பங்குசந்தைகள் செல்லும் வாய்ப்பு அதிகம்  

ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா;வருகிறார் சைரஸ் மிஸ்ட்ரி

பாரம்பரிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்த டாடா குழும நிறுவனத்தை நூறு பில்லியன் டாலர் அளவுக்கான உலகளாவிய வர்த்தக சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை கொண்டவர் ரத்தன் டாடா. நாட்டிலும் உலக அளவிலும் புகழ் மிக்க நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நாளை வெள்ளிக் கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா. இந்தியாவின் மிகப் பழைமையான வர்த்தக சாம்ராஜ்யத்தில் அவருடைய 50 வருட தலைமை ஓட்டம் நாளையுடன் நிறைவை எட்டுகிறது.

தற்போது 75 வயதை எட்டும் ரத்தன் டாடா, தன்னுடைய பொறுப்புகளை 44 வயதான சைரஸ் மிஸ்ட்ரியிடம் ஒப்படைக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி சென்ற வருடம் தலைமைப் பொறுப்புக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ரத்தன் டாடா 21 வருடங்கள் குழும தலைவராக இருந்துள்ளார். 1991ம் ஆண்டு    ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தற்போது பொறுப்பேற்கும் மிஸ்ட்ரி, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் குடும்ப உறுப்பினர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% பங்குகளைக் கொண்டிருப்பவர்கள். இவர் ஐந்து நபர் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.


ரத்தன் டாடாவின் காலத்தில் டாடா குழுமம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நூறு பில்லியன் டாலர் அளவுக்கு (475,721 கோடி ரூபாய்) அளவுக்கு 2011-2012 கால கட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. 1991ல் இந்த நிறுவனத்தின் வருவாய் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது.

இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பட்டப் படிப்பை முடித்தார் ரத்தன் டாடா. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மையில் பட்டம் பெற்றார்.

டாடா குழுமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் உள்ளடக்கிய டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்துள்ளார் ரத்தன் டாடா. இவர் கடந்த 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். பல்வேறு சமூக சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது. இதற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்கமுமே காரணமாகக் கூறப்படுகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சதவீத வளர்ச்சியும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் .

நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிப்பு:

                               இதற்கிடையே இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும். நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 சதவீதம் வரை இருந்தால் தாங்க முடியும். ஆனால், பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருப்பது கவலை தரும் விஷயமாகும்.



தங்கம் மற்றும் வெள்ளி


கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி சர்வதேச சந்தைகளில் நல்ல இறக்கம் கண்டு வருகிறது



அமெரிக்கா அரசின்  நிதி கொள்கைகளால் இவ்விரண்டு உலோகங்களும் சில மாதங்களில்  நல்ல ஏற்றம் காணும் வாய்ப்பு உள்ளது



இறக்கத்தை பயன் படுத்தி முதலீட்டாளர்கள் வாங்கி  வைக்கலாம் 

அன்னிய நிதி நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு



நடப்பு டிசம்பர் மாதம், 3 முதல், 7ம் தேதி வரையிலுமாக அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 6,147 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,'செபி' தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில், மத்திய அரசு, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

கணக்கீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 20,314 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. விற்பனை:அதேசமயம், 14,167 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 6,147 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது போலவே, கடன் பத்திரங்களிலும் அதிகளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன. நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில், 31,155 கோடி ரூபாயை முதலீடு செய்துஉள்ளன.


துணை கணக்கு:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, இந்நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், நிகர அளவில், 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.சென்ற 7ம் தேதி வரையிலுமாக, 1,749 அன்னிய நிதி நிறுவனங்கள்,'செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,306 ஆக உள்ளன.

ஊழல் நிறைந்த நாடுகளில் 34-வது இடத்தில் இந்தியா

ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து ,டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும்.

உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில் பின்லாந்தும், நியூசிலாந்தும் உள்ளன.


 இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36 இடத்திலும், தொடர்ந்து சீனா 39 இடத்திலும், பாகிஸ்தான் 27 இடத்திலும் உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.