2013ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது. இதற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்கமுமே காரணமாகக் கூறப்படுகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சதவீத வளர்ச்சியும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் .

நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிப்பு:

                               இதற்கிடையே இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும். நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 சதவீதம் வரை இருந்தால் தாங்க முடியும். ஆனால், பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருப்பது கவலை தரும் விஷயமாகும்.



0 comments: