ஜார்ஜ் சோரஸ்
#ஹங்கேரியில் பிறந்த இவர், நாஜிக்களின் காலத்தில் அங்கிருந்து வெளியேறினார். இப்போது அமெரிக்காவில் இருக்கும் இவருக்கு, உலகின் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர், சமூகசேவையாளர் என பல முகங்கள் இவருக்கு இருக்கிறது.
#லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கானாமிக்ஸில் படித்தவர். படித்து பிறகு அமெரிக்காவில் உள்ள எப்.எம்.மேயர் புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
#அதன்பிறகு சில நிறுவனங்களில் வேலை செய்த சோரஸ் 1973-ம் ஆண்டு சொந்தமாக தன் பெயரில் ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
#1992-ம் ஆண்டு இங்கிலாந்து பொருளாதாரத்தில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி பேங்க் ஆஃப் இங்கிலாந்தை உடைத்தவர் என்றும் இவரை சொல்லுவார்கள்.
#அந்த வீழ்ச்சியை பயன்படுத்தி 100 கோடி டாலர் சம்பாதித்தார். வரலாற்றில் அது கருப்பு புதன்கிழமை என்று சொல்லுவார்கள்.
#Financial Turmoil in Europe and the United States, The Alchemy of Finance உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதி இருக்கிறார்.
#‘‘மக்களிடையே சென்று சேரவேண்டும் என்பதற்காகவோ, குற்ற உணர்ச்சியிலோ நான் சமூக சேவை செய்ய வரவில்லை. என்னால் பணம் செலவழிக்க முடிகிறது. அதனால் செய்கிறேன்” என்று சொன்னவர் இவர்.