"புலியப்பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கதையாப் போச்சுப்பா .." என்றபடி வந்தார் சாந்தகுமார் . "என்ன யா புலி பூனைன்னு பொலம்பிக்கிட்டு வர்ர.. என்ன விஷயம்? என்றார் நாஸ்டாக் நாகராஜ்.
சாந்தகுமார் - ரொம்ப பொறுப்பான TRADER , சுனாமியே வந்தாலும் ஆபீசுக்கு வராம இருக்க மாட்டார். தான் வாங்கற STOCK மட்டும் இறங்கதாவும், மத்த எல்லா STOCK கும் ஏறரதாவும் எண்ணும் சராசரி TRADER .
புலியப்பாத்து பூனைன்னும் சொல்லல்லாம், பூனைகள்னும் சொல்லலாம்.."
என்னப்பா சொல்ல வர்ர?"
இந்த REALITY STOCKS பத்தி தா சொல்லறேன் பா .. கைல 200 DLF வச்சிருந்தேன், ரொம்ப நாள் பாத்துட்டு 335 ரூபாய்ல வித்துட்டுடேன் .. அவன் என்னடான்னா கடகட ன்னு ஏறிகிட்டே இருக்கா.. சரி அவன்தா ஏறி தொலைச்சுட்டான்.. மத்த REALITY எல்லாம் அப்படியே தான இருக்கான்.. அப்படீன்னு HDIL 280 ரூபாய்ல எடுத்தேன்.. இவன் 260 ரூவா வந்துட்டான்.. இதையதா சொன்னேன் புலிய பாத்து HDIL எடுத்த கதன்னு .." என்று பெருமூச்சு விட்டார் சாந்தம்..
"ஆமா.... இது என்னதா விஷயம்??, இவன் ஏறர்றான், அவன் இறங்கறான்.. DLF மட்டும்ந்தா ஏறிருக்கான்.. ஏ இப்படி? ஒண்ணும் விலங்கலப்பா!!" என்று மேலும் அங்கலாயித்தார்..
"அது ஊ ராசி, சரத்குமார் ராசி மாதிரி ... நீ எங்க போறியோ அது எதிர் கட்சி ஆயிடும்.. அப்படி ஒரு கலை உனக்கு.." என்று கலாய்த்தார் நாகராஜ்.. " சார், ஏன் சார் நீங்க வேற.. அவரே நொந்து பேசறார்.. அவருகிட்ட வம்பு பண்ணிட்டு.. சரி சொல்லுங்க REALITY STOCK அ வாங்கலாமா வேண்டாமா? என் கிட்டயும் நெறையா CLIENTS இதேதா கேட்குறாங்க.. உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.." என்றேன்.
" REALITY ல எவன் ஏறரான் எவன் இறங்கரான்னு தனி தனி விவரமெல்லாம் எனக்கு தெரியாது.. அது நீயே போயி தனி தனி BALANCE SHEET பாத்து தெரிஞ்சுக்கோ.. ஆனா NIFTY கூட REALITY ய COMPARE பண்ணி சொல்லுறேன் கேட்டுக்கோ.. NIFTY 6000 பாயிண்ட்ல இருந்து 2008 க்ராஷ்ல (CRASH ) 2500 போயிட்டு மறுபடியும் 6000 பாயிண்ட்ஸ்ன்னு போன வாரம் வந்துருச்சி.. ஆன்னா 90 % REALITY STOCKS இன்னியும் கிழேயே கிடக்குது.. 50 % RETRACEMENT ன்னு சொல்லுவாங்கல்ல, அதுவே இன்னியும் பாதி REALITY STOCKS வரல்ல.. இத நீ எப்படி பாப்ப?? மார்க்கெட் ஏறிகிட்டே இருக்கே REALITY எல்லாம் UNDER PERFORMED ன்னு சொல்லி வாங்குவியா? இல்ல மார்க்கெட் இவ்வளவு ஏறியும் இவன் ஏற மாட்டேங்குறான்.. இனி இவன் தேற மாட்டான் ன்னு ஒதுங்கீருவியா? நீயே சொல்லு" என்று சாந்தகுமாரை பார்த்தார்..
"இதல்லாம் யோசிச்சா நா DLF அ விக்குறேன்.. இல்ல HDIL ல வாங்குறேன்.. வருவான்னு வாங்குறேன், போயிடுறான்.. போவான்னு விக்குறேன்.. வாங்கு வாங்குன்னு வாங்கறான்.. என்ன செய்ய .. நீயே சொல்லுப்பா!!" என்று கர்சிப்ப எடுத்து முகத்த தொடச்சிகிட்டார்.
"அதா விஞ்ஞானம் அப்படீங்குறது.. தெரிஞ்சத சொல்லுறேன் எப்பவும் போல கேட்டுட்டு உன் பாட்டுக்கு நீ பண்ணறதே பண்ணிட்டு இரு !!..." ரெண்டு பேர்த ஒரு தடவ பாத்துட்டு தொடர்ந்தார் நாஸ்டாக் நாகராஜ்..
" என்ன பொறுத்த வரைக்கும் REALITY ங்கறது ஒரு SECONDARY INDUSTRY , இது எப்பவும் தானா PERFORM பண்ணாது, உதாரணமா 2003 ல இருந்து 2008 வரைக்கும் மான REALITY வளர்ச்சிய எடுத்துக்கிட்டேன்னா, இதே கால கட்டத்துல IT INDUSTRY யும் அத வச்சி FINANCIAL SERVICE INDUSTRY யும் கண்ணா பின்னான்னு ஏறிச்சு.. SALARY வாங்கற பல பேர் வீடு வாங்கற PURCHASE POWER ரோட இருந்தாங்க.. REALITY COMPANY யும் புது புது SCHEME ஸா கொண்டு வந்திட்டு இருந்தாங்க.. ஆனா 2008 RESISTANCE க்கு அப்புறம் இன்னக்கு வரைக்கும் புது வீடு வாங்கற SALARY PERSON ரொம்ப கம்மி..."
"அதால இனி REALITY SECTOR ரே அவ்வளவு தானா??" கையில் இருக்கும் HDIL ஐ நினைத்து இடைமறித்தார் சாந்தக்குமார்..
"அப்படி இல்லப்பா.. SALARY PERSON ன வச்சி ஒரு அபரிவிதமான வளர்ச்சி REALITY ல இருந்துச்சி அது இனி மறுபடியும் SHORT TERM ல வார்றதுக்கு CHANCE கம்மின்னு தோன்னுது.. நீ என்ன சொல்லுற ??" என்றவரிடம்
" ஆனா சார், REALITY ங்கறது வெறும் வீடு கட்டி விக்கற INDUSTRY மட்டும் இல்ல சார், அவங்களோட மெயின் AIM , GOVERNMENT PROJECT தா, இன்னைக்கும் GOVERNMENT PROJECT கை நெறைய வச்சிருக்கற LT - LIFETIME HIGH போகுத்துல்ல.. ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி மறுபடியும் SHARP HIGH எதிர்பாக்கறது கஷ்டம்தான்.. கூடவே RETAILERS அதிகமா PARTICIPATE பண்ணற ஒரு SECTOR இந்த REALITY SECTOR , SO RETAILERS மோகம் கொரயற வர கஷ்டம் தா .. ஆன்னா FII ஸ் அதிகமானா கண்டிப்பா REALITY மேல வரும்.. " என்றேன்
" நீயி ஏ டீலர் மாதிரியே பேசுற ??.. ஒண்ணா வரும்னு சொல்லு இல்ல வராதுன்னு சொல்லு.. பொறந்தா பொண்ணு தப்புனா பையன் ன்னு ஜோசியக்கார அடிச்சு சொல்லுற மாதிரி சொல்லுற.."
"நீ எப்படியோ போப்பா!! என்ன பொறுத்த வர REALITY பெருசா மேல வரணும்னா, அதுக்கு ஒரே வழிதா இருக்கு!!!" என்று புதிர் போட்டவரிடம் ," என்ன என்ன .. ன்னு ரொம்ப ஆவலா கேட்டார் சாந்தகுமார் ..
" நீயி போயி ரெண்டு LOT SHORT அடிச்சா போதும் உடனே அது மேலதா", என்று நக்கலுடன் பீடாவை வாயில் போட போனார் நாஸ்டாக் நாகராஜ்.
"சார், சார்.. இந்த சரத்குமார் ராசின்னு ஏதோ சொன்னிங்களே.. அது ??" விடாமல் வினவினேன்.
ஒ அதுவா!!! நம்ம நாட்டமையோட 10 வருஷ அரசியல் வாழ்க்க எதிர் கட்சியாவே போயிருச்சி பாவம்!! 5 வருஷம் எதிர்கட்சியா இருந்து ஆளும் கட்சிக்கு மனுஷன் மாறுனாருணா போதும்.. ஆளும் கட்சி வர்ர எலேச்சன்ல கண்டிப்பா எதிர் கட்சிதா... "
உதிரி தகவல கொடுத்துட்டு, தீர்ப்பு சொல்லி துண்டு ஒதரற சின்ன கவுண்டர் மாதிரி வாய்ல பீடாவ போட்டு சபைய கலைத்தார் நம்ம நாஸ்டாக் நாகராஜ்!!!
மீண்டும் சிந்திப்போம் !!