சந்தை - சில விந்தைகள்


பொதுவாக சந்தையையும் கிரிக்கெட்டையும் அழகாக ஒப்பிடல்லாம்.. மைதானம், வானிலை நிலவரம் இவைகளை பொறுத்தே ஒரு பவுலரோ , பாட்ஸ் மேனோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எல்லாராலும் எல்லா ஆடுகளங்களிலும் ஒரே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. மாறும் ஆடுகளத்திற்கு தகுந்த மாதிரி வீரர் தனது ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவில்லையெனில் தோல்வியே மிஞ்சும்.


பங்குசந்தையும் தினமும் ஒரே மாதிரியான அல்லது ஒரே சீரான மாற்ற நிலையைக் கொண்டதல்ல. (Volatility frequency is not similar in Each-days). சந்தையின் போக்குக்கு தகுந்து வர்த்தககம் செய்யவேண்டும்.
பொதுவாக சந்தையின் VOLATILITY அடிப்படையாக கொண்டு சந்தையின் போக்கை 3 விதமாக பிரிக்கலாம்.
1. EQUIPOISE MARKET
2. RATIONAL MARKET
3. WILD MARKET
(Information from Mr.Ranjan - smartfinance.in)

மூன்றுவிதமான சந்தைபோக்கிலும் நாம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை  பயன்படுத்தவேண்டும். ஒரே விதமான அணுகுமுறை எல்லா காலக்கட்டங்களிலும் பொருந்தாது.


இந்த மூன்று விதமான சந்தைப்போக்கை எப்படி கண்டுகொள்வது, எவ்வாறு கணிப்பது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

We are expecting viewers' valuable comments. 

Franchisee தொழில் எளிதா?


இன்றைய உலகில், பங்கு சந்தை என்பது சாதாரண பாமரனும் அறிந்து வைத்துள்ள ஒரு மந்திர வார்த்தை. எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பதை முழுமையாக தெரியாவிட்டாலும் சந்தை ஏறுமுகமாக உள்ளதா அல்லது இறங்குமுகமாக உள்ளதா என்ற சின்ன செய்தியையாவது எல்லாரும் தெரிந்து வைத்துள்ளனர். ஒருபுறம் SHARE BROKERS  தாங்கள் வணிகத்தை பெருக்க கையாளும் சந்தை பெருக்கம் இதனுடன் ULIP எனப்படும் முதலீட்டுடனான காப்பீடு முகவர்கள் செய்யும் மூளை சலவை.. எல்லா தொலைகாட்சி செய்திகளிலும் சந்தை பார்வைக்கு என்று சிறப்பிடம். இவை அனைத்தும் சேர்த்து இன்று சினிமா பாடல் வரிகளில் வரும் அளவு மக்களுடன் சேர்ந்து விட்டது நம் பங்குசந்தை.

சமுதாயத்தில் இதன் ஈர்ப்பு அதிகமாக அதிகமாக, பங்குச்சந்தை தொழிலை ஏற்போரும்  அதிகரிக்கவே செய்துள்ளனர். மற்ற எந்த தொழிலை விடவும் SHARE MARKET இல் FRANCHISEE அல்லது SUB BROKERSHIP என்பது மிகவும் எளிமையான மற்றும் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழிலாக மாறியிருப்பதே இந்த மிகப்பெரும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

FRANCHISEE தொடங்குவது எந்தளவுக்கு எளிதான ஒன்றோ, அதை நடத்துவது என்பது மிகவும் பொறுப்பான ஒரு செயலாகும். சட்ட நடைமுறைகள் போக, பிறரின் முதலீட்டை கையாளுகிறோம் என்ற பொறுப்பு மிகவும் முக்கியமானது.
TRADE செய்வது மட்டுமே FRANCHISEE ஆரம்பிக்க போதுமான ஒரு திறமை ஆகாது. FRANCHISEE OWNER என்பவர் MANAGER , DEALER , BACK OFFICE ஆகிய மூன்று பேர்களின் பணியையுமே செய்ய கடமைப்பட்டவர். 

இது போக முதலீட்டாளர்களுக்கு சிறந்த சந்தை தகவல்களும், சரியான தரணத்தில் அளிக்கும் சேவைகளுமே ஒரு FRANCHISEE BUSINESS ஐ வெற்றிப் பெற செய்யும். 

ஒரு SHARE BROKING FIRM என்பது கீழ்கண்ட துறைகளை ஒருங்கிணைதத்தே:

1. MARKETING 
2. DEALING 
3. BACK OFFICE OPERATION
4. TECHNICAL ANALYSIS 


இந்த தொழில் வெற்றிபெற இந்த நான்கு துறை சேவைகளையும் முதலிட்டலர்களுக்கு சரியான முறையில் , சரியான தருணத்தில் வழங்கப்படவேண்டும்.





பங்குசந்தை: FUTURE TRADE என்றால் என்ன?

FUTURE TRADE என்றால் என்ன?

Future ஐ பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அன்றாட வாழ்க்கையில் FUTURE TRADE அடிப்படையில் நமக்கு தெரிந்த சில உதாரணங்களைப் பார்ப்போம்.

வீடு அல்லது நிலத்திற்கான ஒப்பந்தம்:

வீடு அல்லது நிலம் வாங்கும்போது பெரும்பாலும் உடனடி கிரயம் என்பது சாத்தியத்தில் இல்லை. வீட்டிற்கான விலையை வாங்குபவரும் விற்பவரும் முடிவு செய்தப்பின், வாங்குபவர் முன்பணம் செலுத்திவிட்டு மீதி தொகைக்கு குறைந்தது 2 மாத ஒப்பந்த பத்திரம் வரைவர். குறிப்பிட்ட இரண்டு மாத காலக்கட்டத்திற்குள் வாங்குபவர் மீதி பணத்தை செலுத்தி வீட்டை தனக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் அல்லது வேறு  யாருக்கேனும் மாற்றிக் கொடுக்கலாம்.
இடைப்பட்ட காலகெடுவுக்குள் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் விற்பவரை சாராது. ஒப்பந்தத்திற்கு பிறகு விலை ஏறினால் அந்த லாபம் வீடு வாங்குபவரே சேரும், விலை இறங்கினாலும் வாங்குபவரே ஏற்க வேண்டும். 
பெரும்பாலான வீட்டு தரகர்கள், ஒப்பந்தத்திற்கு பிறகு வீட்டை தன்பெயரில் பதியாமல், மற்றுமொரு பயனாளிக்கு விற்று விடுவார். விலை இறங்குமெனில் முழு விலையையும் செலுத்த வேண்டும் அல்லது அவர் செலுத்திய முன்பணத்தை இழக்க வேண்டும். இதுவே இவ்வர்த்தகத்தில் அவருக்கு இருக்கும் நஷ்ட அபாயமாகும்.

இதே போன்ற முன்பணம் செலுத்தும்  ஒப்பந்த முறையை  நாம் பல வர்த்தகங்களிலும் காணலாம்; ஏலம் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும் முன்பணம் செலுத்தி பின்னரே முழுபணத்தையும் செலுத்துவர்.


இப்பொழுது பங்கு சந்தையில் FUTURE TRADE எவ்வாறு செயல் படுகிறது என்பதை பார்ப்போம்:
பங்கு சந்தையில் FUTURE INDEX அல்லது FUTURE STOCKS , "CONTRACT " என்ற சொல்லிலேயே அழைக்கப்படுகிறது. உதாரணமாக NOV RELIANCE FUTURE என்பதை NOV MONTH RELIANCE CONTRACT என்றும் அழைக்கலாம். 

பங்கு சந்தையில் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும், இவ்வாறு மூன்று மாதங்களுக்கான ஒப்பந்தங்கள் (CONTRACTS ) எல்லா பங்குகளிலும் காணப்படும். ( உம்- RELIANCE STOCK க்கான மூன்று ஒப்பந்தங்கள் - SEP28 , NOV26 , OCT 28 என்று அடுத்த மூன்று மாத ஒப்பந்தங்கள் இருக்கும்)

ஒவ்வொரு மாதத்திற்கான ஒப்பந்தமும், அந்த மாதத்தின் கடைசி வியாழகிழமை அன்று முடிவடையும். ( SEP 28 என்பது, செப்டெம்பர் மாதத்தின் கடைசி வியாழன் 28 ம் தேதி என்று பொருள்)

ஒருவர் காணப்படும் மூன்று ஒப்பந்தங்களில் எந்தொரு ஒப்பந்தத்தில் வேண்டுமானாலும் ஈடுப்படலாம். ( SEP மாதத்தில் இருக்கிறோம் என்று கொள்வோம், ஒருவரால் SEP , OCT , NOV இதில் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடலாம்)  பொதுவாக நடப்பு மாத ஒப்பந்தமே பங்குசந்தையில் அதிகமாக கையாளப்படும்.
ஒவ்வொரு ஒப்பந்தத்தில் ஈடுபடும் முன், கண்டிப்பாக அதற்கான முன்பணம் செலுத்த வேண்டும். பங்குசந்தையில் முன்பணம் என்பது SPAN MARGIN என்று அழைக்கப்படும். ஒவ்வொரு CONTRACT க்கான SPAN MARGIN  எவ்வளவு என்பதை NSE தினமும் வெளியிடும்.

இப்பொழுது மறுபடியும் வீட்டிற்கான ஒப்பந்தத்துடன், பங்குசந்தை FUTURE CONTRACT ஐ ஒப்பிட்டு பாருங்கள். ஒப்பந்தம், முன்பணம் மற்றும் ஒப்பந்தத்திற்கான கடைசிநாள் அல்லது காலக்கெடு இவை அனைத்துமே ஒத்துவருவதைக் காணலாம்.

வீட்டிற்கான விலை ஏற்ற இறக்கம் என்பது  2 மாதத்திற்குள் பெரும்பாலும் மாற்றம் இருக்காது, ஆனால் பங்குசந்தையின் சிறப்பம்சமே தினசரி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கமே. 

பங்குசந்தையின் FUTURE TRADE இல் காணப்படும் மிகசிறந்த அம்சம் என்னவெனில், ஒருவரால் எந்தொரு CONTRACT ஐயும் வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.
 
ஆகவே FUTURE TRADE என்பது இருமுனையிலும் கூர் உள்ள கத்தி போன்றது; எவர் வேண்டுமானாலும் வாங்கி விற்கமுடியும் என்பதற்காக  அன்றி, இதை ஒரு கலை போன்று  பயில வேண்டும்.

சந்தையில்  ஈடுப்படும்முன் சிறந்த முறையில் அடிப்படை கூற்றுகளை அறிந்து கொள்ளல் வேண்டும்.

சந்தையின் போக்கு - 3

nifty 5967 range double bottom in daily charts

half hourly charts showing + ve divergence so a bounce expected

தமிழில் தொழில்நுட்ப விபரங்களை எழுதுவது கடினமாக இருக்கிறது

nifty levels daily swing levels :5967-5284

nifty hourly swing levels:5967-6151

ச்சும்மா!!!!!!






விரிவா நாள்ளைக்கு......................

தளபதி


பங்குசந்தையில் இடுபடும் (traders) ஒருவர் பல தகவல்களை ஒன்டிரிணைத்து போர்களத்தில் முடிவெடுக்கும் ராணுவ தளபதி போல் செயல்பட வேண்டும்

இன்றைய பங்கு வணிகம் அனைத்தும் கணினி மூலமே நடைபெறுவதால்

கணினி அறிவு

பங்குகளை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள்

இவை இரண்டும் மிக மிக அவசியம் ஆகும்

பங்கு வணிகர்கள் எப்போதும் சற்று longer time frame (30 minute and above ) charts உபயோகிப்பது சிறந்தது

மேலே குறிப்பிட்டவையாவும் for traders not for investors

nifty view:

untill nifty crosses 5165 decisively, nifty is technically in downtrend for extreme short term

read http://stoxtrends.blogspot.com/2010/10/nifty-views.html for more more views




தின வர்த்தகம்

nifty எங்களது வர்த்தக முறையை பயன்படுத்தி தின வணிகம் செய்ததை படம் மூலம் விளக்கி உள்ளோம்
nifty 5 day ATR 80 மேல் இருப்பதால் இது சாத்தியம் ஆகிறது


LEVELS TO WATCH IN EXTREME SHORT-TERM 5967-6127

வெற்றி பெற வாழ்த்துகள்



சந்தையின் போக்கு-2


கடந்த மாதத்தில் மிக பெரிய முன்னேற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள், சிறிது பின்னடைவை சந்திக்கின்றது

ஏற்கனவே முந்தைய பதிவில் (http://panamtharumpangusanthai.blogspot.com/2010/10/blog-post_15.html) குறிபிட்டது போலவே சந்தையானது இறக்கம் கண்டு வருகிறது

technically market is in short term downtrend

nifty 50 SMA (5791) உடைக்கபடும் வரை பெரிய வீழிச்சி என்று பயப்பட தேவை இல்லை

சிறு முதலீட்டாளர்கள் மிக கவனம் தேவை

VOLATILITY( marked as 5 day ATR in the charts) HAS BEEN INCREASING .


பெட்டிக்கடை!! - ஆட தெரியாதவனுக்கு மேடை கோண!!


வாப்பா வா!! என்ன சுத்தியும் யாரையோ தேடிக்கிட்டு இருக்க?? " பலத்த வரவேற்புடன் கேட்டார் நாஸ்டாக் நாகராஜ்..

எங்க சார்!! உங்க நண்பர்கள் யாரையும் பக்கத்துல காணோம்!! இருக்கற கொஞ்ச பேரும் ரொம்ப வெரப்பா இருக்காங்க, ஏ சார் என்ன பிரச்சன?

'வேற என்ன மார்க்கெட் அடிச்சி இருக்கில்ல!! அதா ரொம்ப மும்மரம்மா நாளைக்கு எப்படி இருக்கும்னு கவலைப் பட்டுகிட்டு இருக்காங்க!!'

"இதுல கவல பட என்ன சார் இருக்கு?? அதா 6250 கீழ இருந்தா மார்க்கெட் WEAK ன்னு முன்னமே சொன்னது தான!! தவிர மார்க்கெட் ங்கறது UP & DOWN ரெண்டுமே தான சார் .. நம்ம ஷேர் மார்க்கெட்ல மட்டும் தா, இறங்கும் போதும் காசு பாக்க முடியும்.. வேற எந்த வியாபாரத்துல பொருள் இல்லாம விக்க முடியும் சொல்லுங்க??.. மார்க்கெட் மேல போனா வாங்க வேண்டியது.. கீழ வந்தா விக்க வேண்டியது.. அவ்வளவு தான சார்.. "

" நீ என்னமோ நம்ம TRADERS எல்லாம் OXFORD ல படிச்சுட்டு TRADE பண்ணற மாதிரி EASY யா சொல்லிட்ட!! நம்ம என்ன மார்கெட்ட தெரிஞ்சிகிட்டு வந்தா TRADE பண்ணறோம்!!! வந்து மார்க்கெட் னா என்னன்னு தெரிஞ்சிக்கிறோம்.. ஆனா எப்படி TRADE பண்ணுன்னுதா தெரிஞ்சுக்க மாட்டிங்கறோம்!!!


SERIOUS ஆகவே பேச ஆரம்பித்தார்.. "மார்க்கெட் நிக்காம போயிகிட்டே இருந்தா, நீல நிறமா SCREEN ல தெரிஞ்சா போதும்.. TUBE LIGHT அ பாத்த விட்டில் பூச்சி மாதிரி கொய்ய்ங்ங்ஞ்ஞன்ன்னு  புரோக்கர் ஆபீஸ் ல மொய்க்கிறது... கொஞ்சமா சிவப்பு தெரிஞ்சா திராட்ச கிடைக்காத நரி மாதிரி முகத்த வச்சுக்க வேண்டியது!!" கஷ்டமாத்தா இருக்குப்பா இவங்கள பாத்தாலும்... என்னைக்கு  தா புரிஞ்சி நடக்கப் போறங்களோ??"  உண்மையான வருத்தத்துடனேயே மற்ற TRADERS ஐ பற்றி   அலுத்துக்கொண்டார் நாஸ்டாக் நாகராஜ்.

"என்ன சார்!! எப்பவும் நக்கலும் நையாண்டியுமா இருப்பீங்க?? இன்னைக்கு வருத்த ரேகை தூக்கலா  இருக்குதே..." 

'நீ என்னமோ நான் TRADERS க்கு எதிரி மாதிரியே பேசுற ?? தப்பா TRADE பண்றாங்கலேன்னு கோவம் தா.. வேற என்ன எனக்கு!! சரி அவங்க என்ன பண்றாங்கன்னு சொல்லுற கேளு!!"

"எனக்கு தெரிஞ்சி  வச்சிருக்க பைசாக்கு தகுந்த மாதிரிதா POSITION வச்சி இருக்கோமா? இல்ல EXTRA POSITION எடுத்திருக்கமான்னு புரிஞ்சு TRADE பண்ணற நண்பர்கள் ரொம்ப கம்மி.. எல்லாரும் DEALERS பார்த்துப்பாங்க, இல்ல MANAGER பார்த்துப்பார்ன்னு கொஞ்சம் அசால்ட்டாதா இருங்காங்க!! என்னைக்காவது ஒரு நாள் மார்க்கெட் அவங்களுக்கு எதிரா போகுதுன்னா அன்னைக்குதா கணக்கு வழக்கே பாக்கறது... அப்புறம் ஆட தெரியாதவனுக்கு மேடை கோணங்கர கதைதா!!! புரோக்கர் சரி இல்ல.. DEALER சரி இல்ல.. MANAGER SUPPORT பண்ணலன்னு .. ஆயிரம் நொட்ட சொல்லுறது..

இவங்கள பொறுத்த வர FUTURE ல இருக்கற எல்லா LOT மே ஒண்ணுதா, STER LOT ம் சரி TATAMOTORS LOT ம் சரி..  ORDER போட்டா உடனே போகணும்.. ACCOUNT ல எவ்வளவு BALANCE இருக்கு, எந்தெந்த LOT க்கு எவ்வளவு MARGIN தேவை படும்.. இதெல்லாம் ENTER ஆகும்போது கேட்கறதே இல்ல, வாங்கி லாபத்துல வந்தா ஒண்ணும் பிரச்சனை இல்ல.. வாங்கி கீழ போனதுக்கப்புறம், MARGIN SHORT ஆகி POSITION ன கட் பண்ண சொன்னதுக்கப்புறம் கேட்கறது ? எவ்வளவு MARGIN ?? நாளைக்கு ஒரு நாள் வச்சி பாக்க முடியுமா ??

"இதுல சில பேர்க்கு FUTURE TRADE , SPAN MARGIN அப்படினெல்லாம் என்னனு கூட தெரியாது, ஏதோ புரோக்கர் காசு கேட்கறாங்க அப்படின்னு சொல்லுறது, நம்ம POSITION நாம தா பாக்கனும்னு எண்ணம் இல்லாம .."

"உதாரணமா STER ஒரு LOT SIZE ( 1000 * 180 = RS 180000 ); TATAMOTORS LOT SIZE ( 500 * 1100 = 550000 ) எந்த  LOT அ எடுக்கணும்னாலும்  நம்மக்கு குறைஞ்சது 20 % MARGIN வேணும்; அப்படி பார்த்தா STER க்கு 36000 ரூபா இருந்தா போதும், தாராளமா POSITION அ ரெண்டு நாள் கூட வச்சுக்கலாம்.. ஆனா TATAMOTORS னா 110000 ரூபா இருந்தா தா POSITION பத்தியே நினைக்கணும் " 

அப்படி இல்லாம வெறும் 50000 ரூபா வச்சிக்கிட்டு TATAMOTORS ஒரு LOT எடுத்து 2 % விலை இறங்கினாலும் நம்ம INVESTMENT ல 22 % காணாம போயிரும்.. TATAMOTORS 2 % ங்கறது 22 ரூபா ( 1100 * 2 % ), ஆனா LOT ல 500 * 22 = 11000 ரூபா; நம்ம போட்ட 50000 ல 11000 ங்கறது 22 % .

இதுதா இந்த தொழிலோட அடிப்படை விஷயமே!! இத புரிஞ்சிக்கிட்டாத்தா பயமில்லாம TRADE பண்ணவே முடியும், அது இல்லாம நீ ஆயிரம் TECHNICAL சொல்லி குடுத்தாலும், அது ஓட்ட பானையில தண்ணி ஊத்தர மாதிரி.... சொர்ர்ரர்ர்ர் தான் போ !!! 

பதில் ஏதும் சொல்ல தோனவில்லை. சிந்திக்க வேண்டிய விஷயமாகவே பட்டது... 

மீண்டும் சிந்திப்போம் !!



சந்தையின் போக்கு

கடந்த இரண்டு நாட்களாக பங்கு சந்தையானது SELLING கண்டுவருகிறது.

NIFTY 6110 RANGE ல் என்று முடிவடையுமேயானால், NIFTY WEEKLY CHART இல் நான் படத்தில் காட்டியுள்ளது போல் SHOOTING STAR PATTERN உருவாகும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு BEARISH PATTERN ஆகும்.

இருப்பினும் 6000 புள்ளிகள் உடைக்காதவரை NIFTY BULLISH ஆகவே இருக்கும்.


இன்றைய கடைசி ஒரு மணி நேர trading மிகவும் முக்கியமானது



பட்டினத்தார்.

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது... குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலை வைத்துப் படுத்திருந்தார். ஒருத்தி, ""யாரோ மகான்'' என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தாள். மற்றொருத்தியோ, ""ஆமாம்... ஆமாம்... இவரு பெரிய சாமியாருக்கும்... தலையணை வைச்சுத் தூங்கற சுகம் மாதிரி வரப்பு மேல தலை வைச்சுத் தூங்கறான் பாரு... ஆசை பிடிச்சவன்'' என்று கடுஞ்சொல் வீசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், ""ஆஹா... நமக்கு இந்த அறிவு இது நாள்வரை இல்லையே'' என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து இறங்கிக் கீழே தலை வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, ""பார்த்தியாடி... நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு... இப்பவாவது ஒத்துக்கோ... இவரு மகான்தானே..!'' என்றாள்.
அவளோ, ""அடி போடி... இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேக்குறான்... அதைப் பத்திக் கவலைப்படறான் இவனெல்லாம் ஒரு சாமியாரா?'' என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை.

லாபம்


பங்குசந்தையில் மிகக்குறுகிய காலத்தில் லாபம் தரக்கூடிய யுக்தி btst (buy today and sell tomorrow ) ஆகும்

இந்த முறை வியாபாரத்தில் பங்குகளை கண்டுபிடித்து வாங்குவதில்தான் சூட்சமமும் உள்ளது

நேற்று நிபிட்டி btst trade செய்ததற்கான விளக்கம் எங்கள் மென்பொருள் மூலம் கிடைத்த chart

எப்போது வாங்குவது
















பங்குகளை எப்போது வாங்க வேண்டும் என்பது சிறுமுதலிட்டாளர்கள் என்றுமே சிரமம்தான் .

பலரும் என்னை இப்போது கேட்கும் கேள்வி இப்போது பங்குகளை வாங்கலாமா

நான் கொடுத்துள்ள அட்டவனையை பார்த்து முடிவு செய்து கொள்ளவு
ம்

அன்றாடங்காய்ச்சிகள்


நான் தினந்தோறும் சந்திக்கும் பல TRADERS கேட்கும் ஒரு போது விஷயம் DAY TRADING , மேலும் அதனையே வாழ்க்கையாகவும் கொண்டுள்ளனர் பலர்.

DAY TRADING மட்டுமே என்பது GAMBLING போன்றது ஆகும. இதனைத் தவிர்த்து முறையான கண்ணோட்டத்தில் SHORT TERM & MEDIUM TERM கருத்தைக் கொண்டு TRADE செய்வதே வெற்றிக்கு வழி வகுக்கும்.

DAY TRADERS உருவாக முக்கிய காரணம் BROKERS , அவர்களும் SHARE TRADING பற்றி முழுமையாய் அனுபவம் இல்லாமலேயே முதலீட்டாளர்களை MIS TUNE செய்து விடுகிறார்கள்.

TECHNICALS WITH FUNDAMENTALS மட்டுமே பங்கு சந்தையில் வெற்றிக்கான வழியாகும். இதுப் பற்றி அறியாமல் TRADE செய்தால் நிச்சயம் ஏமாந்து போவார்கள்.

அறிவே பலம்!! (KNOWLEDGE IS POWER )

வளர்ச்சியா, வீக்கமா?


எங்களது திருப்பதி பயணம் இனிதே முடிந்ததுஅயோத்தி தீர்ப்பினால் ஏதாவதுஅசம்பாவிதம்நடக்குமோ என்று பயந்தபடி இருந்தோம்.30.9.2010அன்று வீடு வரும்வரை இனிய பயணமாகஅமைந்தது . அயோத்தி தீர்ப்புபங்குசந்தைக்கும்முக்கியமானது ஆகும்.அமைதியும் , நல்லிணக்கமும் தேச வளர்ச்சிக்கும்அவிசியம்தேவை

பங்குசந்தைகள் மிக வேகமாக ஏறி வருகின்றது இதுவளர்ச்சியா அல்லதுசெயற்கையான வீக்கமா என்றுஆராய்வோம். நிபிட்டி pe இப்போது 25.54 என்ற புள்ளியில் உள்ளது 2008 january 8 தேதி அன்று 28.29 புள்ளி வரை சென்றது .இதனை வைத்து கனகிடும்போது நிபிட்டி இன்னும் ஏறும் வைப்பு உள்ளது .

fundamentally நிபிட்டி pe 22-23 தாண்டும் போது நிபிட்டி அதன் அதிக பட்ச விலையை தாண்டியதாக கொள்ள வேண்டும் . இந்திய பங்குசந்தைகள் இப்போது நீர்க்குமிழி போன்ற நிலையில் உள்ளது ஏதேனும் negative news flow வரும் போது மிக பெரிய fall ஏற்படும் வாயப்பு உள்ளது

காலாண்டு முடிவுகள் வரும் தருணம் இது ஆகவே, shortterm traders தங்களது புள்ளிகள் வரும் போது தகுந்த முடிவுகளை எடுக்கவேண்டும்

நீண்டகால investors லாபத்தை எடுக்கும் நேரமிது

பேராசையை தவீர்ப்பீர்

பெட்டிக்கடை -"பொறந்தா பொண்ணு தப்புனா பையன் "

"புலியப்பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கதையாப் போச்சுப்பா .." என்றபடி வந்தார் சாந்தகுமார் . "என்ன யா  புலி பூனைன்னு பொலம்பிக்கிட்டு வர்ர.. என்ன விஷயம்? என்றார் நாஸ்டாக் நாகராஜ்.
சாந்தகுமார் - ரொம்ப பொறுப்பான TRADER , சுனாமியே வந்தாலும் ஆபீசுக்கு வராம இருக்க மாட்டார். தான் வாங்கற STOCK மட்டும் இறங்கதாவும், மத்த எல்லா STOCK கும் ஏறரதாவும் எண்ணும் சராசரி TRADER .
புலியப்பாத்து பூனைன்னும் சொல்லல்லாம், பூனைகள்னும் சொல்லலாம்.."
என்னப்பா  சொல்ல வர்ர?"
இந்த REALITY STOCKS பத்தி தா சொல்லறேன் பா .. கைல 200 DLF வச்சிருந்தேன், ரொம்ப நாள் பாத்துட்டு 335 ரூபாய்ல வித்துட்டுடேன் .. அவன் என்னடான்னா  கடகட ன்னு ஏறிகிட்டே இருக்கா.. சரி அவன்தா ஏறி தொலைச்சுட்டான்.. மத்த REALITY எல்லாம் அப்படியே தான இருக்கான்.. அப்படீன்னு HDIL 280 ரூபாய்ல எடுத்தேன்.. இவன் 260 ரூவா வந்துட்டான்.. இதையதா சொன்னேன் புலிய பாத்து  HDIL எடுத்த கதன்னு .." என்று பெருமூச்சு விட்டார் சாந்தம்..
"ஆமா.... இது என்னதா விஷயம்??, இவன் ஏறர்றான், அவன் இறங்கறான்.. DLF மட்டும்ந்தா ஏறிருக்கான்.. ஏ இப்படி? ஒண்ணும் விலங்கலப்பா!!" என்று மேலும் அங்கலாயித்தார்..
"அது ஊ ராசி, சரத்குமார் ராசி மாதிரி ... நீ எங்க போறியோ அது எதிர் கட்சி ஆயிடும்.. அப்படி ஒரு கலை உனக்கு.." என்று கலாய்த்தார் நாகராஜ்.. " சார், ஏன் சார் நீங்க வேற.. அவரே நொந்து பேசறார்.. அவருகிட்ட வம்பு பண்ணிட்டு.. சரி சொல்லுங்க REALITY STOCK அ வாங்கலாமா வேண்டாமா? என் கிட்டயும் நெறையா CLIENTS இதேதா கேட்குறாங்க.. உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க.." என்றேன்.

" REALITY ல எவன் ஏறரான் எவன் இறங்கரான்னு தனி தனி விவரமெல்லாம் எனக்கு தெரியாது.. அது நீயே போயி தனி தனி BALANCE SHEET பாத்து தெரிஞ்சுக்கோ.. ஆனா NIFTY கூட REALITY ய COMPARE பண்ணி சொல்லுறேன் கேட்டுக்கோ.. NIFTY 6000 பாயிண்ட்ல இருந்து 2008 க்ராஷ்ல (CRASH ) 2500 போயிட்டு மறுபடியும் 6000 பாயிண்ட்ஸ்ன்னு போன வாரம்  வந்துருச்சி.. ஆன்னா 90 % REALITY STOCKS இன்னியும் கிழேயே கிடக்குது.. 50 % RETRACEMENT ன்னு சொல்லுவாங்கல்ல, அதுவே இன்னியும் பாதி REALITY STOCKS வரல்ல.. இத நீ எப்படி பாப்ப?? மார்க்கெட் ஏறிகிட்டே இருக்கே REALITY எல்லாம் UNDER PERFORMED ன்னு சொல்லி வாங்குவியா? இல்ல மார்க்கெட் இவ்வளவு ஏறியும் இவன் ஏற மாட்டேங்குறான்.. இனி இவன் தேற மாட்டான் ன்னு ஒதுங்கீருவியா? நீயே சொல்லு" என்று சாந்தகுமாரை பார்த்தார்..
"இதல்லாம் யோசிச்சா நா DLF அ விக்குறேன்.. இல்ல HDIL ல வாங்குறேன்.. வருவான்னு வாங்குறேன், போயிடுறான்.. போவான்னு விக்குறேன்.. வாங்கு வாங்குன்னு   வாங்கறான்.. என்ன செய்ய .. நீயே சொல்லுப்பா!!" என்று கர்சிப்ப எடுத்து முகத்த தொடச்சிகிட்டார்.
"அதா விஞ்ஞானம் அப்படீங்குறது.. தெரிஞ்சத சொல்லுறேன் எப்பவும் போல கேட்டுட்டு உன் பாட்டுக்கு நீ பண்ணறதே பண்ணிட்டு இரு !!..." ரெண்டு பேர்த ஒரு தடவ பாத்துட்டு தொடர்ந்தார் நாஸ்டாக் நாகராஜ்..
" என்ன பொறுத்த வரைக்கும் REALITY ங்கறது ஒரு SECONDARY INDUSTRY , இது எப்பவும் தானா PERFORM பண்ணாது, உதாரணமா 2003 ல இருந்து 2008 வரைக்கும் மான REALITY வளர்ச்சிய எடுத்துக்கிட்டேன்னா, இதே கால கட்டத்துல IT INDUSTRY யும் அத வச்சி FINANCIAL SERVICE INDUSTRY யும் கண்ணா பின்னான்னு ஏறிச்சு.. SALARY வாங்கற பல பேர் வீடு வாங்கற PURCHASE POWER ரோட இருந்தாங்க.. REALITY COMPANY யும் புது புது SCHEME ஸா கொண்டு வந்திட்டு இருந்தாங்க.. ஆனா 2008 RESISTANCE க்கு அப்புறம் இன்னக்கு வரைக்கும் புது வீடு வாங்கற SALARY PERSON ரொம்ப கம்மி..."
"அதால இனி REALITY SECTOR ரே அவ்வளவு தானா??" கையில் இருக்கும்  HDIL ஐ நினைத்து இடைமறித்தார் சாந்தக்குமார்..
"அப்படி இல்லப்பா.. SALARY PERSON ன வச்சி ஒரு அபரிவிதமான வளர்ச்சி REALITY ல இருந்துச்சி அது இனி மறுபடியும் SHORT TERM ல வார்றதுக்கு CHANCE கம்மின்னு தோன்னுது.. நீ என்ன சொல்லுற ??" என்றவரிடம் 
" ஆனா சார், REALITY ங்கறது வெறும் வீடு கட்டி விக்கற INDUSTRY மட்டும் இல்ல சார், அவங்களோட மெயின் AIM , GOVERNMENT PROJECT தா, இன்னைக்கும் GOVERNMENT PROJECT கை நெறைய வச்சிருக்கற LT - LIFETIME HIGH போகுத்துல்ல.. ஆனாலும்  நீங்க சொன்ன மாதிரி மறுபடியும் SHARP HIGH எதிர்பாக்கறது கஷ்டம்தான்.. கூடவே RETAILERS அதிகமா PARTICIPATE பண்ணற ஒரு SECTOR இந்த REALITY SECTOR , SO RETAILERS மோகம் கொரயற வர கஷ்டம் தா .. ஆன்னா FII ஸ் அதிகமானா கண்டிப்பா REALITY மேல வரும்.. " என்றேன்
" நீயி ஏ டீலர் மாதிரியே பேசுற ??.. ஒண்ணா வரும்னு சொல்லு இல்ல வராதுன்னு சொல்லு.. பொறந்தா பொண்ணு தப்புனா பையன் ன்னு ஜோசியக்கார அடிச்சு சொல்லுற மாதிரி சொல்லுற.."
 "நீ எப்படியோ போப்பா!! என்ன பொறுத்த வர REALITY பெருசா மேல வரணும்னா, அதுக்கு ஒரே வழிதா இருக்கு!!!" என்று புதிர் போட்டவரிடம் ," என்ன என்ன .. ன்னு ரொம்ப ஆவலா கேட்டார் சாந்தகுமார் ..
" நீயி போயி ரெண்டு LOT SHORT அடிச்சா போதும் உடனே அது மேலதா", என்று நக்கலுடன் பீடாவை வாயில் போட போனார் நாஸ்டாக் நாகராஜ்.

"சார், சார்.. இந்த சரத்குமார் ராசின்னு ஏதோ சொன்னிங்களே.. அது ??" விடாமல் வினவினேன்.

ஒ அதுவா!!! நம்ம நாட்டமையோட 10 வருஷ அரசியல்  வாழ்க்க எதிர் கட்சியாவே போயிருச்சி பாவம்!! 5 வருஷம் எதிர்கட்சியா இருந்து ஆளும் கட்சிக்கு மனுஷன் மாறுனாருணா போதும்.. ஆளும் கட்சி வர்ர எலேச்சன்ல கண்டிப்பா எதிர் கட்சிதா... " 

உதிரி தகவல கொடுத்துட்டு, தீர்ப்பு சொல்லி துண்டு ஒதரற சின்ன கவுண்டர் மாதிரி  வாய்ல பீடாவ போட்டு சபைய கலைத்தார் நம்ம நாஸ்டாக் நாகராஜ்!!! 

மீண்டும் சிந்திப்போம் !!