வாப்பா வா!! என்ன சுத்தியும் யாரையோ தேடிக்கிட்டு இருக்க?? " பலத்த வரவேற்புடன் கேட்டார் நாஸ்டாக் நாகராஜ்..
எங்க சார்!! உங்க நண்பர்கள் யாரையும் பக்கத்துல காணோம்!! இருக்கற கொஞ்ச பேரும் ரொம்ப வெரப்பா இருக்காங்க, ஏ சார் என்ன பிரச்சன?
'வேற என்ன மார்க்கெட் அடிச்சி இருக்கில்ல!! அதா ரொம்ப மும்மரம்மா நாளைக்கு எப்படி இருக்கும்னு கவலைப் பட்டுகிட்டு இருக்காங்க!!'
"இதுல கவல பட என்ன சார் இருக்கு?? அதா 6250 கீழ இருந்தா மார்க்கெட் WEAK ன்னு முன்னமே சொன்னது தான!! தவிர மார்க்கெட் ங்கறது UP & DOWN ரெண்டுமே தான சார் .. நம்ம ஷேர் மார்க்கெட்ல மட்டும் தா, இறங்கும் போதும் காசு பாக்க முடியும்.. வேற எந்த வியாபாரத்துல பொருள் இல்லாம விக்க முடியும் சொல்லுங்க??.. மார்க்கெட் மேல போனா வாங்க வேண்டியது.. கீழ வந்தா விக்க வேண்டியது.. அவ்வளவு தான சார்.. "
" நீ என்னமோ நம்ம TRADERS எல்லாம் OXFORD ல படிச்சுட்டு TRADE பண்ணற மாதிரி EASY யா சொல்லிட்ட!! நம்ம என்ன மார்கெட்ட தெரிஞ்சிகிட்டு வந்தா TRADE பண்ணறோம்!!! வந்து மார்க்கெட் னா என்னன்னு தெரிஞ்சிக்கிறோம்.. ஆனா எப்படி TRADE பண்ணுன்னுதா தெரிஞ்சுக்க மாட்டிங்கறோம்!!!
SERIOUS ஆகவே பேச ஆரம்பித்தார்.. "மார்க்கெட் நிக்காம போயிகிட்டே இருந்தா, நீல நிறமா SCREEN ல தெரிஞ்சா போதும்.. TUBE LIGHT அ பாத்த விட்டில் பூச்சி மாதிரி கொய்ய்ங்ங்ஞ்ஞன்ன்னு புரோக்கர் ஆபீஸ் ல மொய்க்கிறது... கொஞ்சமா சிவப்பு தெரிஞ்சா திராட்ச கிடைக்காத நரி மாதிரி முகத்த வச்சுக்க வேண்டியது!!" கஷ்டமாத்தா இருக்குப்பா இவங்கள பாத்தாலும்... என்னைக்கு தா புரிஞ்சி நடக்கப் போறங்களோ??" உண்மையான வருத்தத்துடனேயே மற்ற TRADERS ஐ பற்றி அலுத்துக்கொண்டார் நாஸ்டாக் நாகராஜ்.
"என்ன சார்!! எப்பவும் நக்கலும் நையாண்டியுமா இருப்பீங்க?? இன்னைக்கு வருத்த ரேகை தூக்கலா இருக்குதே..."
'நீ என்னமோ நான் TRADERS க்கு எதிரி மாதிரியே பேசுற ?? தப்பா TRADE பண்றாங்கலேன்னு கோவம் தா.. வேற என்ன எனக்கு!! சரி அவங்க என்ன பண்றாங்கன்னு சொல்லுற கேளு!!"

இவங்கள பொறுத்த வர FUTURE ல இருக்கற எல்லா LOT மே ஒண்ணுதா, STER LOT ம் சரி TATAMOTORS LOT ம் சரி.. ORDER போட்டா உடனே போகணும்.. ACCOUNT ல எவ்வளவு BALANCE இருக்கு, எந்தெந்த LOT க்கு எவ்வளவு MARGIN தேவை படும்.. இதெல்லாம் ENTER ஆகும்போது கேட்கறதே இல்ல, வாங்கி லாபத்துல வந்தா ஒண்ணும் பிரச்சனை இல்ல.. வாங்கி கீழ போனதுக்கப்புறம், MARGIN SHORT ஆகி POSITION ன கட் பண்ண சொன்னதுக்கப்புறம் கேட்கறது ? எவ்வளவு MARGIN ?? நாளைக்கு ஒரு நாள் வச்சி பாக்க முடியுமா ??
"இதுல சில பேர்க்கு FUTURE TRADE , SPAN MARGIN அப்படினெல்லாம் என்னனு கூட தெரியாது, ஏதோ புரோக்கர் காசு கேட்கறாங்க அப்படின்னு சொல்லுறது, நம்ம POSITION நாம தா பாக்கனும்னு எண்ணம் இல்லாம .."
"உதாரணமா STER ஒரு LOT SIZE ( 1000 * 180 = RS 180000 ); TATAMOTORS LOT SIZE ( 500 * 1100 = 550000 ) எந்த LOT அ எடுக்கணும்னாலும் நம்மக்கு குறைஞ்சது 20 % MARGIN வேணும்; அப்படி பார்த்தா STER க்கு 36000 ரூபா இருந்தா போதும், தாராளமா POSITION அ ரெண்டு நாள் கூட வச்சுக்கலாம்.. ஆனா TATAMOTORS னா 110000 ரூபா இருந்தா தா POSITION பத்தியே நினைக்கணும் "
அப்படி இல்லாம வெறும் 50000 ரூபா வச்சிக்கிட்டு TATAMOTORS ஒரு LOT எடுத்து 2 % விலை இறங்கினாலும் நம்ம INVESTMENT ல 22 % காணாம போயிரும்.. TATAMOTORS 2 % ங்கறது 22 ரூபா ( 1100 * 2 % ), ஆனா LOT ல 500 * 22 = 11000 ரூபா; நம்ம போட்ட 50000 ல 11000 ங்கறது 22 % .
இதுதா இந்த தொழிலோட அடிப்படை விஷயமே!! இத புரிஞ்சிக்கிட்டாத்தா பயமில்லாம TRADE பண்ணவே முடியும், அது இல்லாம நீ ஆயிரம் TECHNICAL சொல்லி குடுத்தாலும், அது ஓட்ட பானையில தண்ணி ஊத்தர மாதிரி.... சொர்ர்ரர்ர்ர் தான் போ !!!
பதில் ஏதும் சொல்ல தோனவில்லை. சிந்திக்க வேண்டிய விஷயமாகவே பட்டது...
மீண்டும் சிந்திப்போம் !!
0 comments:
Post a Comment