உச்சக்கட்டம் நெருங்குகிறதா?? - ஒரு ஜாலி அலசல்

ரமணா படத்தில் ஒரு காட்சி- ரமணா யாரென்று ஊர் ஊராக போலீசார் விசாரித்துக்கொண்டிருப்பர், ஆனால் யாருமே சொல்ல  மாட்டர்; அப்போது ஒரு போலீஸ் சொல்வார், " ஒரு பயலும் வாயே திறக்கமாட்டேங்கறாங்க!! திருநெல்வேலி போலீசார் ரொம்ப ஸ்ரிட்டு!! அடிக்கிற அடியில கக்கிருவானுக" என்று சொல்லிட்டே திருநெல்வேலி போலிசுக்கு போன் செஞ்சா, அவர் சொல்லுவார். " எங்கலே பேசரானுவ, குச்சிதா உடையுது!! ஒண்ணும் சொல்லு மாட்டேங்கிராணுவ... ???????###@@@@^^!!!!***"

பங்குசந்தை தற்போதைய நிலவரமும் அப்படிதான், நமக்கு தா fund டைட்டு அதா ஒண்ணும் பண்ண முடியல .. ஆனா ஹரிக்கு பிரச்னை இல்ல, ஏன்னா துபாய்ல இருக்கான், கோடி ரூவா fund handle பண்ணறான், average பண்ண முடியும், அவன் பணம் பண்ணிருப்பான்னு  நினச்சா!!! அவன் என்கிட்டே கேட்கிறான்," Have you earned anything from this rally?, I missed buddy!!!" - ஒரு முதலீட்டாளரின் ஏக்கம்!!

ஏன் இப்படி? இதோ இப்பொ வந்துரும், ம்ம் ம்ம் கண்டிப்பா வந்துரும், இது தா கடைசி இப்போ வரும் பாருன்னு காத்துக்கிட்டு இருந்தா........ வரவே இல்ல.. போய்கிட்டே இருக்கே.. சந்தை இறக்கமே (இரக்கம்) இல்லாம ஏறுது!!! அதா அதான் அதே தான்.. இறக்கத்த எதிர் பார்த்துட்டே பாதி பேர் ஈடுபடாமலே இருந்துட்டாங்க..

சரி கிட்டத்தட்ட 700 புள்ளி ஏறுடிச்சி.. இது தா கடைசியா.. சந்தை உச்சத்துக்கு வந்துருச்சா?? ஏன் எல்லாருமே இந்த கேள்வி கேட்கிறாங்க ?? ஏன் எல்லாரும் உச்சத்தின் முடிவுக்கு காத்திருக்காங்க?? ஏன்னா உச்சக்கட்டம் வந்தாதான காட்சி முடியும்?? இந்த show miss பண்ணியாச்சு, so அடுத்த show க்கு wait பண்ணறோம்..

ஆன்னா சந்தையோ இது ட்ரைலர் தாம்மா, இனிமே தா மெயின் பிச்சரே ன்னு சொல்லுதா???


Wait and See!!!

indian stock marktes

இன்றைய இந்திய பங்குச்சந்தை நீர்க்குமிழி நிலையில் உள்ளது நிப்டி(close 6009 ) pe ratio 25 .37 ஆகும் .

கடந்த 20 நாட்களில் உள்ள ஏற்றம் ஆனது மிக அபரிமிதமானது ஆகும் , எனவே முதலிட்டாளர்கள்
தங்களிடம் உள்ள பங்குகளுக்கு tight stoploss வைக்கவும். புதிய முதலிட்டாளர்கள் trading உடன்
நிறுத்தி கொள்ளவும் .

பங்குச்சந்தை குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன