Showing posts with label சிரிச்சு பழகுங்க. Show all posts
Showing posts with label சிரிச்சு பழகுங்க. Show all posts
சிரிக்க மட்டுமே
Posted by
vista consultants
on 2 August 2014
Labels:
சிரிச்சு பழகுங்க
0
comments
1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...
3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...
4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.
5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..
6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்
7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று
8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை
9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்
10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
லேடியால் கெட்ட மனம்
11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு
12.போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக...
கணவன்,மனைவி
Posted by
vista consultants
on 27 January 2014
Labels:
சிரிச்சு பழகுங்க
1 comments
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?
மனைவி : “என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?”
கணவன் : “பேசாம தூங்கு, காலையில அவன் செத்து
கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்..”
மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!
கணவன் :-”உன்னோட இந்த காமெடிதான்”
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்
சண்டை
Posted by
vista consultants
on 4 January 2014
Labels:
சிரிச்சு பழகுங்க
0
comments
பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் *.
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.
கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..
ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும்.
அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் * செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!
சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த நபரிடம் கேட்க..
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்.!
ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!
ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.
கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார்.
முதலில் ஜன்னலை மூடுங்கள்..
ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும்.
அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் * செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!
சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த நபரிடம் கேட்க..
அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்.!
சிரிச்சு பழகுங்க
Posted by
vista consultants
on 7 September 2013
Labels:
சிரிச்சு பழகுங்க
2
comments
தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
......................................................
ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
...................................................
ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
................................................
நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
...........................................
ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
...............................................................
ஆண்: என்னோட மனைவியைக் காணோம்....................ஒரு அஞ்சுநிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண்: எதுக்கு?
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
...........................................................................
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
தமிழர்கள்
Posted by
vista consultants
on 12 March 2013
Labels:
சிரிச்சு பழகுங்க
0
comments
அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்
கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”
இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே
டெலிபோனை பயன்படுத்தியுள் ளார்கள்”
தமிழர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்
காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தியுள் ளார்கள்”
என்று....!





