பங்குச்சந்தை மாபெரும் வீழ்ச்சி, பங்குசந்தைகள் திவாலாக போகின்றன


இன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டது. இன்று மதியத்திற்கு மேல் எந்த ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளும் துளியும் ஏற்றம் பெறவில்லை.

பங்குச்சந்தையில் மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 430.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 19692 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 126.80 புள்ளிகள் சரிந்து 5980 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் எந்த ஒரு நிறுவனத்தினுடைய பங்குகளும் ஏற்றம் பெற்று லாபமடையால் ஒட்டு மொத்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று ஐடிசி லிட், டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல், டாடா மோட்டார் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து நஷ்டமடைந்துள்ளன.



1.இன்றைய சரிவு technical  analyst பலரும் எதிர்பார்த்த  ஒன்றுதான்

2.பத்திரிக்கை செய்திகளை வைத்து வணிகம் செய்ய இயலாது

3.அம்புக்குறி   இடப்பட்ட  5970 ஒரு சப்போர்ட் லெவல்  ஆகும்

இந்திய பங்குசந்தைகள் பற்றிய மிக மிக முக்கியமான தொழில்நுட்ப குறிப்பு கீழே 


 Nifty Monthly Line Chart of Last 8 Years.

A CUP & HANDLE Chart Pattern on Monthly Chart.

Duration December 2007 to 2013 April.(65 Months)

if we assume in next 5-6 months Nifty get BREAKOUT of all time high on monthly closing basis then pattern duration will be aprox 70 months.

Target will be as per Depth of Breakout.

1st Target will be 7700-7800

Xpected Duration will be 12-22 Months after Monthly Breakout(Closing basis) 

2nd Target will be 9600-9700

Xpected Duration will be 23-44 Months after Monthly Breakout(Closing Basis).

THIS IS THE MINIMUM TARGET OF NIFTY AFTER BREAKOUT.

MAXIMUM Target will be Much more than This.

5600-5700 is Strong Support Zone on closing basis..

இந்தியாவின் ,நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.9 சதவீதமாக குறையும்


அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) படிப்படியாக குறையும். நடப்பு நிதியாண்டில் இது 3.9 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பர்கிலேஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும், இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை (CURRENT ACCOUNT DEFICIT-CAD) எனப்படுகிறது. 2010,11ம் நிதியாண்டு முதலே இந்தியாவின் சிஏடி அதிகரித்து வருகிறது.

2012,13ம் நிதியாண்டில் இது அதிகபட்ச அளவாக 4.9 சதவீதமாக இருந்தது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில், 6.7.(நமது பங்குசந்தைகளின் சரிவிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்) சதவீதமாக உச்சகட்டத்தில் இருந் தது. இது படிப்படியாக நடப்பு நிதியாண்டில் 3.9 சதவீதமாக குறையும்.  கச்சா எண்ணெய் விலை, தங்கம் இறக்குமதி ஆகியவை கடந்த 2 ஆண்டுகளாக சிஏடி அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தன. (இந்திய தன்னுடைய தேவைக்காக  தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் பெருமளவில்  இருக்குமதி செய்கிறது )

விரைவில் வர்த்தக பொருட்களின் மேலும்  விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும், பணவீக்கம் குறையும். கடந்த சில வாரங்களாக தங்கம், கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது. இது சிஏடி குறைய உதவும்.

முயற்சி


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.





வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

திருடனும் தெனாலி ராமனும்.


தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.

''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்

''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..

''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...

திருடன் பிடிபடுகிறான்....

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

விடியுமென்று விண்ணை நம்பும்போது, முடியுமென்று உன்னை நம்பு!


ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !