தங்கத்திற்கு வரி?
Posted by
vista consultants
on 2 January 2013
இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரிடையே தங்கத்தில் முதலீடு செய்வதே
பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் தங்கத்தில் தான் மிக அதிகமான பணம்
முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், முடக்கப்படும் இந்த முதலீட்டால்
நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதால் தங்கத்தில் மக்கள் அதிக அளவில்
முதலீடு செய்வதை தவிர்க்க வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் தான் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரியைக் கூட மத்திய
அரசு உயர்த்தியது.
இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதை வாங்குவது குறையவில்லை. இந்
நிலையில் இப்போது
தங்கம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,
இறக்குமதியை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், தங்கத்தின் தேவை மிதமானதாக
இருக்க வேண்டும். எனவே, தங்கம் இறக்குமதிக்கான செலவை அதிகரிக்கச் செய்வதை
விட வேறு வழி இல்லை. இந்த யோசனை அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
இறக்குமதி அதிகரிப்பால் நிதிப் பற்றாக்குறையின் அளவும் அதிகரிக்கிறது.
தங்கம் அதிகமாக இறக்குமதி செய்தது மற்றும் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணை
விலை உயர்வு போன்ற காரணங்களால், 2011-12ம் ஆண்டில் நாட்டின் மொத்த
உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.2 சதவீதமாக அதிகரித்து விட்டது.
எனவே, தங்கத்தின் இறக்குமதியை பெருமளவில் குறைக்க அரசு ஆலோசனை நடத்தி
வருகிறது. இறக்குமதிக்கான வரியும் உயர்த்தப்படலாம். எனவே, பொதுமக்கள்
தங்கத்தின் பயன்பாட்டை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இறக்குமதி குறைந்தால் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகமாகும். இதனால் விலை தாறுமாறாக உயரவும் வாய்ப்புண்டு.
2011-2012ம் ஆண்டில் ரூ. 33,000 கோடியளவுக்கு தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை, சரிவு காத்திருக்கிறதா ?
Posted by
vista consultants
on 30 December 2012
இந்திய பங்குசந்தைகள் resistance zone என்று சொல்லக்கூடிய 5950 புள்ளிகளை தாண்ட முடியாமல் திணறி வருகின்றது. இதனை மேலே உள்ள படத்தில் காணலாம், இவை சென்ற வருடம் (2011) march மற்றும் april மாதங்களில் வந்த உச்ச புள்ளிகளாகும் (pivot high )
sensex மற்றும் nifty ஆகிய இரண்டுமே weekly மற்றும் daily சார்ட்டில் insideday pattern form ஆகி உள்ளது .nifty weekly level ஆன 5940-5820 , உடைக்கும் பக்கம் பங்குசந்தைகள் செல்லும் வாய்ப்பு அதிகம்
ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா;வருகிறார் சைரஸ் மிஸ்ட்ரி
Posted by
vista consultants
on 27 December 2012
பாரம்பரிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்த டாடா குழும நிறுவனத்தை நூறு பில்லியன் டாலர் அளவுக்கான உலகளாவிய வர்த்தக சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை கொண்டவர் ரத்தன் டாடா. நாட்டிலும் உலக அளவிலும் புகழ் மிக்க நிறுவனமாகத் திகழும் டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நாளை வெள்ளிக் கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் ரத்தன் டாடா. இந்தியாவின் மிகப் பழைமையான வர்த்தக சாம்ராஜ்யத்தில் அவருடைய 50 வருட தலைமை ஓட்டம் நாளையுடன் நிறைவை எட்டுகிறது.
தற்போது 75 வயதை எட்டும் ரத்தன் டாடா, தன்னுடைய பொறுப்புகளை 44 வயதான சைரஸ் மிஸ்ட்ரியிடம் ஒப்படைக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி சென்ற வருடம் தலைமைப் பொறுப்புக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடா 21 வருடங்கள் குழும தலைவராக இருந்துள்ளார். 1991ம் ஆண்டு ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தற்போது பொறுப்பேற்கும் மிஸ்ட்ரி, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் குடும்ப உறுப்பினர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% பங்குகளைக் கொண்டிருப்பவர்கள். இவர் ஐந்து நபர் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.
ரத்தன் டாடாவின் காலத்தில் டாடா குழுமம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நூறு பில்லியன் டாலர் அளவுக்கு (475,721 கோடி ரூபாய்) அளவுக்கு 2011-2012 கால கட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. 1991ல் இந்த நிறுவனத்தின் வருவாய் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது.
இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பட்டப் படிப்பை முடித்தார் ரத்தன் டாடா. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மையில் பட்டம் பெற்றார்.
டாடா குழுமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் உள்ளடக்கிய டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்துள்ளார் ரத்தன் டாடா. இவர் கடந்த 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். பல்வேறு சமூக சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

2013ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
Posted by
vista consultants
on 26 December 2012
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2013ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் கணித்துள்ளது.
இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.4 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 9 சதவீத வளர்ச்சியைத் தொட்ட இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக தடுமாறிக் கொண்டுள்ளது. இதற்கு உள்நாட்டுக் காரணங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்கமுமே காரணமாகக் கூறப்படுகின்றன.
சமீபத்தில் மத்திய அரசு எடுத்த சில அதிரடி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, இந்திய வளர்ச்சி அடுத்த ஆண்டு 6.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2014ம் ஆண்டில் இது 7.2 சதவீதமாக உயரும் என்று கோல்ட்மேன் சேக்ஸ் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சதவீத வளர்ச்சியும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் .
நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிப்பு:
இதற்கிடையே இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்த நிதியாண்டில் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும். நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5 சதவீதம் வரை இருந்தால் தாங்க முடியும். ஆனால், பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருப்பது கவலை தரும் விஷயமாகும்.

.png)