வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மின் சக்தியின் தேவையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பாரம்பரிய முறைகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வரும் அனல் மின்சாரம், நீர் மின்சாரம் ஆகியவற்றை விட காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், செலவு குறைந்ததாகவும், அணு மின்சாரத்தைப் போல அல்லாமல் கொஞ்சமும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வழிமுறையாகவும் இருந்து வருகிறது.
இதனால் நிலப்பகுதிகள் குறைந்த நாடுகளில் கூட காற்றாலைகளை புதிய உத்திகளுடன் பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கடலில் மிதந்து கொண்டே அங்கு வீசும் காற்றின் இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலை மின்சாரத் தொழில்நுட்பம். உலக சமாதனதுக்காக உழைக்கும் நோர்வே நாட்டிலும், போச்சுக்கல் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளிலும் காற்றாலை மின்சாரம் பிரபலமடைந்து வருகிறது.
ஹைவிண்ட் (Hywind) என அழைக்கப்படும் 2.3 மெகா வாட் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் திறனுடன் கூடிய மிதக்கும் காற்றாலைகளை இந்த நாடுகளுக்கு 'சிம்மென்ஸ்'(siemens) நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது நோர்வே நாட்டின் கடற்கரையோரங்களில் சோதனை முறையில் இயக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட அளவில் மின் உற்பத்தி பெறப்பட்டுள்ளதால், இந்த மிதக்கும் காற்றாலைகளை வட அமெரிக்கக் கரையோரங்கள் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கடற்கரையோரங்களிலும் அமைப்பதற்கு பல பன்னாட்டு மரபுசாரா மின் உற்பத்தி நிறுவனங்கள் அனுமதி பெற்றுவிட்டன.
0 comments:
Post a Comment