sensex புதிய உச்சத்தை தொடும்
Posted by
vista consultants
on 20 November 2012
sensex புதிய உச்சத்தை தொடும் என்று உறுதியாக நாங்கள் கூறி வரும் வேளையில்,உலகின் இரு முன்னணி நிறுவனங்கள் ,இந்திய பற்றிய தங்களது ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளன
1.jp overweight on india in BRIC countries
2.morgan stanley sets sensex target 23000 by december 2013 and there-on 280000
1.jp overweight on india in BRIC countries
2.morgan stanley sets sensex target 23000 by december 2013 and there-on 280000
சூடு பிடிக்குமா பங்குச்சந்தை?
Posted by
vista consultants
on 4 November 2012
இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக நிச்சயமற்ற நிலையில் உள்ளது ,இந்நிலை விரைவில் மாறி காளையின் பிடிக்கு வரும் ஏன (bull market) எதிர்பார்க்கபடுகிறது
இந்திய அரசு எடுத்து வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வலுவடையும், இதன் பிரதிபலிப்பாக பங்குசந்தைகள் உயரும் வாய்ப்பு அதிகம் உள்ளது
நீண்ட கால நோக்கில் dlf,hdil,ibreal,ifci,crompton greaves, bhel,rcom,idbi,bharti airtel,brigade enterprises,pfs,sbin,reliance,போன்ற பங்குகளை வாங்கி ஆதாயம் அடையலாம்
ஒரு லட்சம் ஏ.டி.எம்.,கள் நிறுவ வங்கிகள் திட்டம்
Posted by
vista consultants
on 27 October 2012
அடுத்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சம், ஏ.டி.எம்.,களை அமைக்க, வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை, வங்கிகள் அறிமுகப்படுத்தின. இந்த வகையில், முதன் முதலாக, எச்.எஸ்.பி.சி., வங்கி மும்பையில், தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்.,) இயந்திரத்தை, 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அடுத்தடுத்து, ஏ.டி.எம்.,களை பெருமளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
கடந்த ஜூன் மாதம் வரையில், 99 ஆயிரத்து 218 ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த, 2016ம் ஆண்டுக்குள் ஏ.டி.எம்.,கள் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிதாக அமைக்கப்படும் ஏ.டி.எம்.,களுக்கு, 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரை, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
"இந்திய ஏ.டி.எம்., தொழிலும்; அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சியும்' என்ற தலைப்பில், ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் தொகையில், பெரும்பகுதியான மக்கள், வங்கி வசதி இல்லாத இடங்கள், மற்றும் குறைவான வங்கிகள் உள்ள இடங்களில்தான் வசிக்கின்றனர். வங்கிகள் பெரும்பாலும், நகர்ப்புறங்களில் தான், கிளைகளை அமைப்பதில், முக்கியத்துவம் காட்டுகின்றன. எனவே, வங்கிகள் இல்லாத இடங்களில், ஏ.டி.எம்., வசதிக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது.வங்கிகள், அடுத்த நான்கு ஆண்டுகளில், கிராமப் புறங்களிலும், நடுத்தர நகரங்களிலும், ஏ.டி.எம்.,களை விரிவுபடுத்த வேண்டும் என, இந்த ஆய்வில், வலியுறுத்தப்பட்டு உள்ளது.
"பிரிமியம்' வகை பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுத்தப்பட்டது
Posted by
vista consultants
on 16 October 2012
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், "பிரிமியம்' வகை பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, தெரிய வந்துள்ளது.சாதாரண வகை பெட்ரோல், டீசலை விட,"பிரிமியம்' வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், நுகர்வோர் எவரும் இவ்வகை பெட்ரோல், டீசலை வாங்குவதில்லை.இதன் காரணமாகவே, எண்ணெய் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, கூறப்படுகிறது.
சென்ற மாதம், மத்திய அரசு, சாதாரண வகை பெட்ரோல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 5.50 ரூபாய் குறைத்து, 9.28 ரூபாயாக நிர்ணயித்தது. அதேசமயம், உயர் வகை பெட்ரோல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் செய்யாமல், 15.96 ரூபாய் என்ற அளவிலேயே வைத்துள்ளது. இதேபோன்று, உயர் வகை டீசல் மீதான கலால் வரியும் குறைக்கப்படவில்லை.விலை உயர்வுக்கு பிறகு, டில்லியில், உயர் வகை டீசலின் விலை, லிட்டருக்கு, 43 சதவீதம் அதிகரித்து, 65.81 ஆகவும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 9 சதவீதம் உயர்ந்து, 77.58 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேசமயம், ஒரு லிட்டர் சாதாரண வகை, பெட்ரோலின் விலை, 67.90 ஆகவும், மானிய விலையில் விற்கப்படும், டீசல் விலை, 46.95 ரூபாயாகவும் உள்ளன.அதிக விலை வித்தியாசத்தால், உயர் வகை டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை முழுவதுமாக நின்று விட்டது. எனவே, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) மார்க்கண்ட் நீனி, தெரிவித்தார்.









