பங்குச்சந்தையில் ஈடுபட முனையும் ஒருவர் அவருக்கான நோக்கத்தையும், இலக்கையும் தெளிவாகக்கொண்டிருப்பது அவசியம், அது ஆயிரங்களை ஈட்டுவதாக இருக்கலாம் அல்லது ஆயிரம் போட்டு கோடிகளை அடைவதாக இருக்கலாம், ஆனால் அது அவரவருடைய ஆசையாகவும், நோக்கமாகவும் இருக்கவேண்டும். பங்குச்சந்தையில் எதுவும் சாத்தியம். . சந்தை நம் சிந்தனை சக்தியை விடப் பெரியது.. இதில் ஈடுப்பட்டு நோக்கத்தை அடைவது என்பது உங்கள் கையில்தான் உள்ளது.
உங்களின் நோக்கம் அல்லது லட்சியமே, பங்குச்சந்தை கற்பதிலும், ஈடுபடுத்திக்கொள்வதிலும் உங்களுக்கு தூண்டுகோலாகவும் துணையாகவும் நிற்கும். உங்களைப் பற்றி உங்களை விட வேறு யாரும் சரியாக அறிந்திருக்க மாட்டார்கள். உங்கள் பணநிலவரம், குடும்பசூழல், தனிப்பட்ட இயல்பு, ரிஸ்க் எடுக்கும் அளவு என உங்களைவிட மற்றவர் புரிந்திருக்கமாட்டார்.
உங்கள் கனவு உங்களுக்கு சுகம், மற்றவருக்கு அது சுமை.. எனவே உங்கள் நோக்கத்தை நீங்களே அடைய முயலுங்கள்.. உங்களுக்கான பாதையை நீங்களே தீர்மானியுங்கள்!!!!
உதாரணமாக, வாரன் பப்பெட் அவர்களால் கோகோ கோலா பங்கை வாங்கி 30 வருடங்கள் வைத்திருக்க முடியும், தற்போதும் அவர் 1980 களில் வாங்கிய பங்குகளை வைத்துள்ளார். இது அனைவருக்கும் சாத்தியமா??
இது அவரின் தியரி அவருக்கு சரி ஆனால் எனக்கு தவறு.. என் பார்வை அவருக்கு தவறாக இருக்கலாம் ஆனால் அது அவருக்கு 1500% வருவாயை ஈட்டுக்கொடுத்துள்ளது.
பங்குச்சந்தை வாரன் பப்புட், ஜார்ஜ் சோரஸ் மற்றும் பல சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது, இன்றும் பங்கு சந்தை மக்களே உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் கடந்த 100 ஆண்டுகாலமாக சிறந்த இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் மற்றவர்களின் பாதையில் பயணிக்கவில்லை, தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்தனர். ஒரு விளையாட்டு கோச் விளையாட்டின் நுணுக்கங்களை பற்றியும், சிறந்த விளையாட்டு யுக்திகளையும் சொல்லிக்கொடுப்பாறேயன்றி நமக்காக விளையாடமாட்டார்..
களம் உங்களுக்காக தயாராக உள்ளது, சிறிது சிறிதாக கற்போம்.. உங்கள் பாதை அமைய நங்கள் துணை நிற்கிறோம். ஆனால் பாதையை நீங்கள் தீர்மானியுங்கள்!!
வெற்றி கைக்குள்தான்.. சுவாசித்துப் பார்
3 comments:
நன்றி
வருகைக்கு நன்றி நண்பரே !! உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு எழுதுங்கள் !!
ok Mr.rajesh i ll watch your doji theory
Post a Comment