விடியுமென்று விண்ணை நம்பும்போது, முடியுமென்று உன்னை நம்பு!


ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

புத்தாண்டு வாழ்த்துக்கள்

சர்தார்ஜி ஜோக்ஸ்

ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி

புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”
@@@@@@ 

...................................................................................................................................................................

அமெரிக்காவில் சர்தார்ஜி :

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. 

சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். 

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'
@@@@@@


எங்க தல .. கவுண்டர் தான்........


அந்த சினிமாக்காரனுக தான் ஆனா ஊனா விழா கொண்டாடறானுக..

அட எதுவுமே கிடைக்கிலைன்னா பொறந்த நாள் கொண்டாடறானுக..

அதுவும் 34 வயசுக்கு மேல போறானுகளா ன்னு பாத்தா போகவே மாட்டேங்கறானுக..

இவங்கதான் நாட்டுல பொறந்தானுகளா.. நாமெல்லாம் பொறக்கவே இல்லையா !!

கூட நடிக்கிற ஹீரோவையே ஓட்டி தள்ளுற தைரியமுள்ள ஒரே 
 காமெடியன் .. 

என்றைக்கும் எங்க தல .. கவுண்டர் தான் ..

wiki

தெரிந்து கொள்வோம் வாங்க-..


வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்..

புதுப் பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணியைத் தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைப்படத்தை தபால் முத்திரையாகப் பயன்படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகளும் கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல் ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கைக்கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10 என்ற நேரம் புன்னகையைக் குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதியடையச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை அமைதியாக வைத்திருப்பதற்காகச் சுரக்கின்றது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.

2 - 6 வயதில் தான் வளர்கிறது.

வறுக்காத முந்திரிக் கொட்டை விஷத் தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.


விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம்.

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.