காப்பு கட்டுதலும் அதன் மருத்துவ பயனும்
Posted by
vista consultants
on 13 January 2018
Labels:
மருத்துவ குறிப்புகள்
0
comments
சிலை(மார்கழி) மாதத்தின் கடைசி நாள் போகி,அன்று பூளைப் பூ,வேப்பிலை, ஆவாரம் பூ மூன்றையும்,கோவில்,வீட்டு கூரைகளில் சொருகி வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்றால், இப்பருவத்தில் உள்ள பூளைப் பூ செடிகள் கோடையில் வறண்டுவிடும். மேலும் கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக நம் உடலில் நீர் வியர்வையாக வெளியேறுவதால் சிறுநீரகத்தில் கல்(கால்சியம் ஆக்ஸலேட்) உருவாக வாய்ப்புகள் உண்டு.
நாம் கூரையில் சொருகி வைக்கும் பூளைப் பூவை கோடையில் நீருடன் கலந்து பருகுவதால் சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் தீரும்.
ஆவாரம் பூ பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தும். இந்து மதத்தின் பழக்க வழக்கம் நம் உடல் நலத்துடன் தொடர்புடையது.
எனவே அவற்றை புறகணிக்காமல் பின்பற்றுவோம்
நாம் கூரையில் சொருகி வைக்கும் பூளைப் பூவை கோடையில் நீருடன் கலந்து பருகுவதால் சிறுநீரகம் தொடர்பான தொல்லைகள் தீரும்.
ஆவாரம் பூ பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தும். இந்து மதத்தின் பழக்க வழக்கம் நம் உடல் நலத்துடன் தொடர்புடையது.
எனவே அவற்றை புறகணிக்காமல் பின்பற்றுவோம்
வெற்றி பெற
Posted by
vista consultants
on 17 February 2017
எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது...
1. புத்தகங்களை துணை கொள்.
2. உடலுழைப்பை அதிகரி.
3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.
4. குளிர் நீரில் குளி.
5. கொஞ்சமாய் சாப்பிடு.
6. தியானம் கைகொள்.
7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.
8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.
9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.
10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.
11. ஆத்திரம் அகற்று.
12. கேலிக்கு புன்னகை தா.
13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.
14. நட்புக்கு நட்பு செய்.
15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.
16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.
17. அன்பு செய்தால் நன்றி சொல்.
18. இதமாகப் பேசு.
நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! !
வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.




