சிரிச்சு பழகுங்க




 தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
......................................................

 ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?

மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
...................................................

 ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
................................................

நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
...........................................

 ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
...............................................................

 ஆண்: என்னோட மனைவியைக் காணோம்....................ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
...............................................

 நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே

டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
...........................................................................

நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...

நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!

பங்குச்சந்தை: sensex 30000 புள்ளிகளை நோக்கி செல்கிறது


sensex 9 ஆண்டுகளுக்கு பிறகு bullish hammer எனும் pattern ஐ வாரந்திர chart இல் உருவாக்கி உள்ளது ........இது 9 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி உள்ளது



21/5/2004 அன்று sensex bullish hammer உடன் 4961.57 வாரந்திர முடிவாக இருந்து அடுத்த முன்றரை  ஆண்டுகளில் 21206.801 புள்ளிகள் வரை சென்றது

அதே போல் இப்போது sensex 18519.44 வாரந்திர முடிவாக உள்ளது வரும் சில நாட்களில் புதிய உச்சத்தை தொடும் ........பின் சில ஆண்டுகளுக்குள்  30000 புள்ளிகளும் அதற்கு மேலும் செல்லும் 

காலர் டூயுன் எப்படி deactivate பண்ணுவது ?

பரங்கி மலை பக்கத்துல இருக்க பாழடைஞ்ச பங்களாவுக்கு போனிங்கன்னா அங்க ஒரு சூனியக்கார கிழவி துஸ்ட தேவதைகளுக்கு பூஜை பண்ணிக்கிட்டு இருப்பா.

அவ கிட்ட ஒரு பறக்கும் பாய் இருக்கு.

அவ ஒரு பசுமாடு வளக்கிரா , அந்த பசுமாடு சாப்ப்டிடுற புல்லுல மயக்க மருந்த கலந்து குடித்துட்டிங்கனா , அவ அதோட பாலகுடிச்சு மயக்கம் ஆகிடுவா,

அப்போ அவளுக்கு தெரியாம நைஸா அத எடுத்துக்கிட்டு மேற்கு திசைல ஏழு கடல் ஏழு மலை தாண்டி போங்க .....

போற வழில மூணாவது கடல்ல நம்ம சிந்துபாத் கப்பல்ல போயிக்கிட்டு இருப்பாரு , அவர் கிட்ட ரிகுஸ்ட் பண்ணி அவரோட கத்திய வாங்கிக்கங்க....... அப்புறம்

எட்டாவது கடல் தாண்டி எட்டாவது மலைல ஒரு குகை இருக்கும் அந்த குகைய ஒரு ஒற்றைக்கண் ராட்சசன் காவல் காத்துக்கிட்டு இருப்பான் ,அவன் கூட சண்டை போட்டு நம்ம சிந்துபாத் குடுத்த கத்திய வச்சு அவன் ஒத்தை கண்ணுல குத்தினா அவன் செத்துடுவான்,

அப்புறம் குகைக்குள்ள போனா அங்க ஒரு மந்திர கூடு இருக்கும் , அத ஒரு 7 தலை நாகம் காவல் காத்துக்கிட்டு இருக்கும் அத எப்படியாவது கொன்னுட்டு

அந்த கூண்ட திறந்திங்கன்னா அதுக்குள்ளே ஒரு கிளி இருக்கும், அந்த கிளியோட மொபைல் போனுல ஒரு சிம் கார்டு இருக்கும் , அந்த கார்ட எடுத்து ஒரே வெட்டுல 4 துண்டா வெட்டி போட்டிங்கன்னா உங்க போன் காலர் டியூன் டி-ஆக்டிவேட் ஆகிடும்.

@ அடங்கொன்னியா விளங்கிடும் .....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஆணியே புடுங்க வேண்டாம் ,

ஆட்டோமேட்டிக்கா ஒரு பாட்டு காலர் டியுனா வந்திருச்சு அத எப்படி டி-ஆக்டிவேட் பண்றதுன்னு கஸ்டமர் கேருக்கு போன் பண்ணினா அதுக்கு இவ்ளோ கத சொல்றானுக ..............

பேரிச்சம் பழத்தால் உண்டாகும் நன்மைகள்

நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் 1 பேரிச்சம் பழத்தில் 23 கலோரிகள் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் இல்லாமல் இருக்கிறது.
அதிலும் இந்த பழத்தை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த இனிப்பான பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். சரி இப்போது அந்த பழத்தின் வேறு நன்மைகளைப் பார்போம்

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், இரவில் படுக்கும் போது பேரிச்சம் பழத்தை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை சாப்பிட்டால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.
ஏனெனில் இந்த பழத்தில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சரிசெய்துவிடும்.

பார்வை கோளாறு:

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆகவே கண் பார்வைக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், மாலைக்கண் நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு உகந்தது:

கர்ப்பிணிகளின் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினீயம் போன்றவை அதிகமாக உள்ளன.
இவை அனைத்து கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள். மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.
ஆகவே கர்ப்பமாக இருக்கும் போது, இதனை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.

மூட்டு வலி:

இன்றைய காலத்தில் மக்கள் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் கால்சியம் குறைபாடேயாகும்.
ஆகவே தினமும் சிறிது பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதோடு, மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை சரிசெய்யலாம்.

குடல் கோளாறு :

பேரிச்சம் பழத்தில் கால்சியம், வைட்டமின் பி5, நார்ச்சத்து, வைட்டமின் பி3, பாஸ்பரஸ், கொழுப்பு, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே அத்தகைய பேரிச்சம் பழத்தை, தினமும் சாப்பிட்டு வந்தால், குடலில் ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் சரியாகிவிடும்.

பற்சொத்தை:

நிறைய பேர் பல் சொத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்களில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.ஏனெனில் இதில் ஃப்ளோரின் என்னும் சத்து அதிகம் உள்ளது. எனவே பற்களில் ஆரோக்கியத்திற்கு இந்த சத்து மிகவும் இன்றியமையாதது.

அறிவுரை


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன.்