சந்தை மந்திரமா? 1

நுகர்வோருக்கும், வர்த்தகருக்கும் வர்த்தகப்பொருளை அணுகுவதில் அடிப்படை வேறுபாடு உண்டு. ஆனால் முதலீட்டாளரும் நுகர்வோரும் ஒன்றா? காலையில் காய்கனி வாங்குவதும், தங்கம் வாங்குவதும் ஒத்த செயல்களா? இப்படி சில ஐயப்பாடுகள் நமக்கு வருவது நியாயம்தான்.

தங்கம் நுகர்வதும், காய்கனி நுகர்வதும் ஒன்றா என்றால் நமக்கு சந்தேகம் எழுகிறது. . ஆனால் இப்படிக் கேட்டுப்பாருங்கள் தங்கம் விற்பதும், காய்கனி விற்பதும் ஒத்த செயல்களா? கண்டிப்பாக ஒத்த செயல்களே. . இவ்விரு பொருட்கள் என்றில்லை அனைத்துவகையான பொருள் விற்போரும், கட்டண சேவை வழங்குவோரும் அவர் அவர்களின் வர்த்தகப்பொருட்களை ஒரே கண்ணோட்டத்துடனே அணுகுகின்றனர். அவர்களின் அடிப்படை நோக்கம் " தங்கள் பொருட்களுக்கு உற்பத்தி/ கொள்முதல் விலையை விட விற்பனை விலை கண்டிப்பாக அதிகமாக இருக்க வேண்டும்" - இதுவே எந்த ஒரு வர்த்தகரின் அடிப்படை தேவை, லாபம் இன்றி அவர் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை நாம் வர்த்தகர்கள் என்று சொல்வதில்லை.. டிரஸ்ட் வொர்க் என்று வகைப் படுத்துகிறோம். .

இப்போது சொல்லுங்கள் நாம் ஒவ்வொருவரும் பங்குச்சந்தையில் ஈடுபடும்போது மேற்குறிய எந்த வகையான மனோநிலையுடன் நாம் பங்குச்சந்தையை அணுகுகிறோம்? தங்கம் அல்லது காய்கனி வாங்குபவர் போல் அணுகுகிறோமா? ? அல்லது அவற்றை விற்பவர் (அ) வர்த்தகர் போல பங்குச்சந்தையை அணுகுகிறோமா? ? கண்டிப்பாக லாபம்ஈட்டுவதே என கூறிவிடலாம். .
ஆனால் மற்ற முதலீடுகளும் ( வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், தங்கம்) லாபம் ஈட்டுகின்டறனவே!!! ஆனால் அவற்றை நாம் வாங்கும்போது அல்லது முதலீடு செய்வதை வர்த்தகர் மனநிலையுடன் ஒப்பிட்டுபார்ப்பதில்லையே ? ஏன் பங்குச்சந்தை லாபமஈட்டுவது மட்டும் எப்படி வர்த்தக கண்ணோட்டமாகும்??
பங்குச்சந்தை மட்டுமே வர்த்தகக் கண்ணோட்டம் கொண்டதா? அல்ல மற்ற முதலீடுகள் நாம் மேற்கண்ட வர்த்தக மனோநிலை அற்றதா??
பதில் - மற்ற முதலீடுகளும் வர்த்தக மனோநிலை கொண்டவையே... பங்குச்சந்தையும் தங்கம் மற்றும் காய்கனி வாங்குவதைப் போல நுகர்வோர் பண்பை உள்ளடக்கியதே... இதன் அடிப்படை வேறுபாடு நாம் முதலிடுகளை அணுகுவதற்கான நோக்கத்தில்தான் உள்ளது..
நம் முதலீட்டின் நோக்கம் மறுவிநியோகம் இல்லையெனில் நாம் நுகர்வோர் என்ற வகையில் சேருவோம்.. அவ்வாறன்றி எந்த முதலீட்டையும் மறுவிநியோக நோக்கதினுடன் அணுகினால் நாம் வர்த்தகர்களாகிறோம். . ஒருவர் வர்த்தகத்தில் நுகர்வோராக ஈடுபடும் போதுஅவசியப்படாத சில விஷயங்கள், வர்த்தகராக - வியாபாரியாக ஈடுபடும்போது தேவைப்படுகிறது.. அதுவே நாம் நம் முன்னுரையில் கண்ட தனிமனிதக் கட்டுப்பாடுகள்!!!
அனேகமாக இப்போது நாம் தெளிவாக இருப்போம் என நம்புகிறேன், பங்குச்சந்தையில் நாம் அனைவரும் செய்யும் அடிப்படை தவறு எது என்று?? நாம் அனைவரும் பங்கு - வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம் ஆனால் ஒரு நுகர்வோரின் மனநிலையோடு.. இப்போது நாம் புரிந்துக்கொள்வோம் ஏன் நமக்கு தனிமனித கட்டுப்பாடு போதனைகள் சந்தையில் கர்ப்பிக்கப்படுகின்றன என்று... முன்னரே சொன்னப்படி பங்குச்சந்தையில் நாம் வர்த்தகர்கள் (வியாபாரிகள்), எனவே நமக்கு வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் மனோநிலை, மனோப்பக்குவம் தேவைப்படுகிறது.

வர்த்தகத்திற்கும், நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தப்பின், பங்குச்சந்தையிலும், மற்ற முதலீட்டு வகைகளிலும் எப்படி நுகர்வு பண்பும், வர்த்தக பண்பும் இணைத்திருக்கின்றது என்பதைப் பார்ப்பது அவசியமாகும் . .
ஒருவர் எவ்வாறு முதலீடு வகைகளில் (பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், வங்கி வைப்பு) நுகர்வோராகவும், வர்த்தகராகவும் செயல்பட வாய்ப்புள்ளது என அடுத்தப் பதிவில் பார்ப்போம்..

Rajesh V Ravanappan

0 comments: