வர்த்தகத்திற்கும், நுகர்வோருக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தப்பின், பங்குச்சந்தையிலும், மற்ற முதலீட்டு வகைகளிலும் எப்படி நுகர்வு பண்பும், வர்த்தக பண்பும் இணைத்திருக்கின்றது என்பதைப் பார்ப்போம் . .
பங்குச்சந்தையுடன் ஒத்த மற்ற முதலீடுகள் - வங்கி வைப்பு, ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், அரசு மற்றும் தனியார் பாண்டுகள்; இங்கு பங்குச்சந்தை என நாம் பொருள் கொள்வது எல்லா வகை ஆன்லைன் வர்த்தககங்களையும் சேர்த்துத்தான் (பங்கு, கமாடிட்டி மற்றும் கரன்சி).
பங்குச்சந்தையில், பங்குமுதலீடு (நுகர்வோர் பண்பு) - பங்குவர்த்தகம் என இருப்பிரிவு உண்டு, பங்குமுதலீட்டுக்கான வருவாய் எனப் பார்க்கும்போது பங்கின் விலை ஏற்றம் ஒரு கூடுதல் பயனேயன்றி, அதுவே பிரதான நோக்கம் அல்ல. பங்குமுதலீட்டுக்கான வருவாய் என்பது - டிவிடென்ட், போனஸ் போன்ற பங்கின் fundamental basic ஐப் பொறுத்தது. முதலீடு என்பது நுகர்வோர் பண்பு - ஒரு நுகர்வோர் பொருளை வாங்குவது அதன் நீண்டக்கால பயனின் அடிப்படையில் தானே அன்றி, அதனை மறுவிநியோகம் அல்லது மறுவிற்பனை செய்ய அல்ல என்பதை நாம் முன்பே கண்டதை இங்கே மற்றுமொருமுறை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
பங்குவர்த்தகம் - பங்கின் விலை மாறுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஈடுபடும் எல்லா பிற பரிவர்த்தனைகளுமே (Day trading, Swing trading) பங்குவர்த்தகத்தின் கீழேதான் வரும்.(பங்குவர்த்தகர்களிடையேயான வேறுபாட்டை வேறுவொரு பதிவில் பார்ப்போம், அதுவரை short term, long term என எல்லா வகைகளையும் வர்த்தகர் என்றே கொள்வோம்)
இப்படி சொல்வதால் பங்குவர்த்தகத்தின் மேல் எந்தவிதமான பயமோ, நமக்கான தளம் இல்லையென்றோ நெகடிவாக முடிவேடுக்கவேண்டியதில்லை. ஒரு வியாபாரி எவ்வாறு அவரின் வணிகத்தை அன்றாடம் கையாளுகிறாரோ , அதன் அடிப்படையில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட பழக்கிக்கொண்டால் நாமும் பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம்.
பங்குச்சந்தையில் ஜெயிற்பதற்கு நாம் சிறந்த ஆய்வாளராக(analyst) இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பங்குகளை பற்றிய சிறந்த அறிவே பங்குச்சந்தையில் வெற்றிப்பெற உதவும் என்றால், முதலீட்டாளர்களை விட ஆய்வாளர்களே அதிகம் பணம் கண்டவராக இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் யார் லாபம் ஈட்டுகிறார்கள்?? இது மில்லியன் டாலர் கேள்வியா?? பதில் சொல்வது மிகவும் கடினமா? பங்குச்சந்தையில் பணம் செய்பவர் பெரிய பணமுதலீட்டாளர்ஒ, சிறந்த ஆய்வாளரோ அல்ல.. ஆனால் ஒரு நல்ல வர்த்தகர் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் விட லாபம் ஈட்டுபவராக இருப்பார்..
இங்கே நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டுவருவோம் - "பங்குச்சந்தையில் நாம் அனைவரும் செய்யும் அடிப்படை தவறு எது என்று?? நாம் அனைவரும் பங்கு - வர்த்தகத்தில் ஈடுபடுகிறோம் ஆனால் ஒரு நுகர்வோரின் மனநிலையோடு.. இப்போது நாம் புரிந்துக்கொள்வோம் ஏன் நமக்கு தனிமனித கட்டுப்பாடு போதனைகள் சந்தையில் கர்ப்பிக்கப்படுகின்றன என்று... முன்னரே சொன்னப்படி பங்குச்சந்தையில் நாம் வர்த்தகர்கள் (வியாபாரிகள்), எனவே நமக்கு வர்த்தகர்களுக்குத் தேவைப்படும் மனோநிலை, மனோப்பக்குவம் தேவைப்படுகிறது"
இப்போது நமக்கு வர்த்தகர் என்றால் யார் என்ற கேள்வியே வந்திருக்கும்? சில உதாரணங்களைப் பார்ப்போம் - விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒரு வர்த்தகர், விவசாயப்பொருளை நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம், மற்ற இருவரையும் விட லாபமடைகிறார். கணினி விற்பவருக்கு கணினியின் தொழில்நுட்ப அறிவு, ஒரு எஞ்சினியரைப் போல இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரியல் எஸ்டேட் பிசினசில் லாபம் சம்பாரிப்பவர் கூட சிறந்த வர்த்தகரே அன்றி சிறந்த கட்டுமாளர் அல்ல..
இங்கே பங்கு ஆய்வாளரின் அறிவு - விவசாயி மற்றும் எஞ்சினியர் போல தொழில்நுட்ப தொடர்புடையது.. நாம் சிறந்த வர்த்தகர்கள்எனில் ஆய்வாளர்களின் உதவியுடன் எப்படி சிறப்பாக வர்த்தகம் செய்வது என்பதைப் பற்றி யோசிப்போமே அன்றி, நாமும் ஆய்வில் ஈடுபட தேவையில்லை..
மற்ற வணிகங்களிருந்து பங்குச்சந்தை மாறுபட்டது என்பதை இங்கு மறுக்க இயலாது, ( நகை வியாபாரிகள் அனைவரும் ஆன்லைன் கமோடிட்டி வர்த்தகத்தில் ஜெயிப்பதில்லை).. நாம் இங்கே மீண்டும் வலியுறுத்துவது - வர்த்தககர்களின் சில முக்கிய பண்புகளை பின்ப்பற்றுவதேஅன்றி, நிகழ்கால வர்த்தகத்தை அப்படியே செயலாக்குவது அல்ல..
பொறுமை, நிதானம் தவிர ஒரு வர்த்தகரின் மற்றபிற பண்புகளை அலசுவதன் மூலம், பங்குச்சந்தைக்கு ஏற்ற வர்த்தகராக நாம் எவ்வாறு மாற முடியும் என்பதை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம். .
Rajesh V Ravanappan
0 comments:
Post a Comment