பார்த்து ரசிக்க
Posted by
vista consultants
on 27 April 2014
Labels:
பார்த்தேன் ரசித்தேன்
0
comments
மோடி, குஜராத், வளர்ச்சி
Posted by
vista consultants
on 24 April 2014
Labels:
செய்தி
0
comments
வரலாற்றில் வித்தியாசமான தேர்தல்
இந்திய வரலாறு மிக வித்தியாசமான ஒரு தேர்தலை எதிர்கொள்கிறது. இதுவரையிலான 15 மக்களவைத் தேர்தல்களும், இந்திய மக்கள் முன் எத்தனையோ பேசுபொருள்களை முன்னிறுத்தியிருக்கின்றன. சாதனைகளும் வாக்குறுதிகளும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், மரணங்களும் தியாகங்களும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், தனிக்கட்சி ஆட்சியும் நிலையான அரசும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள், கூட்டாட்சியும் அனைவருக்குமான வளர்ச்சியும் முன்னிறுத்தப்பட்ட தேர்தல்கள்... எல்லாத் தேர்தல்களிலுமே குறைந்தபட்சம் மக்கள் முன் இரு தேர்வுகள் முன்னிறுத்தப்பட்டது உண்டு: இந்தக் கட்சியா, அந்தக் கட்சியா அல்லது இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா?
முதல்முறையாக மக்களவைத் தேர்தலை அதிபர் தேர்தல்போல எதிர்கொள்கிறது இந்தியா. பிரச்சாரத்தில் கட்சிகளின் பெயர்கள் அடிவாங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு மனிதரும் அவர் முன்னிறுத்தும் முழக்கமும்தான் இன்றைய இந்தியாவின், இந்தத் தேர்தலின் பேசுபொருள்: மோடி - குஜராத் - வளர்ச்சி.
நாட்டின் மிகப் பெரிய கட்சியான காங்கிரஸ் மோடிக்குப் பதில் அளிப்பதை மட்டுமே தேர்தல் பணியாகக் கொண்டிருக்க… ஏனைய கட்சிகளோ, மோடியை நோக்கிக் கேள்வி எழுப்புவதையே தேர்தல் பணியாகக் கொண்டிருக்கின்றன. ஆக, வாக்காளர்கள் முன் ஒரேயொரு கேள்விதான் எங்கும் தொக்கிநிற்கிறது: மோடி - குஜராத் - வளர்ச்சி வேண்டுமா; வேண்டாமா?
மக்களிடம் இப்படி ஒரு கேள்வி தொக்கிநிற்கிறது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊடகங்களிலும் இப்போது இதுதான் முக்கியமான விவாதம் - குஜராத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா? அது உண்மையாகவே ஒரு நல்ல முன்மாதிரிதானா, இல்லையா? மக்கள் உண்மையாகவே எப்படி இருக்கிறார்கள்? எது குஜராத்தில் மீண்டும் மீண்டும் மோடியைப் பதவியில் அமர்த்துகிறது?
மோடி செய்ததும் செய்யாததும்
இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்த மாபெரும் கேள்விக்கும் விவாதத்துக்கும் நானும் பதில் தேடினேன். குஜராத் அரசுத் தரப்பினர் சாதனைகளாகச் சொன்ன - அவர்கள் நிறைவேற்றியிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பார்க்க அலைந்தேன். அந்தத் திட்டங்கள் நன்மை - தீமைகளை அளவிட ஏகப்பட்ட குறிப்புகள், புள்ளிவிவரங்களைச் சேகரித்தேன். ஏராளமான மக்களிடம் கருத்துகள் கேட்டேன். சரி, உண்மை நிலவரம் என்ன?
குஜராத்தில் மோடி முன்னோடியான திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறாரா? நிச்சயமாகக் கொண்டுவந்திருக்கிறார் - எப்படி கேரளத்திலும் தமிழகத்திலும் பிஹாரிலும் சில முன்னோடியான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனவோ அப்படியே குஜராத்திலும் முன்னோடியான சில திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், குஜராத்துக்கு வெளியே அவை ஊதிப் பெருக்கப்படுகின்றன. பல விஷயங்களில் துளியும் உண்மை இல்லாமல் மோடி கொண்டாடப்படுகிறார். ஒரு உதாரணம்: குஜராத் மதுவிலக்கு மாநிலமாக இருப்பதற்கு மோடி கொண்டாடப்படுவது. உண்மை என்னவென்றால், குஜராத் தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட 1960 முதலே அது மதுவிலக்கு மாநிலம். இதைச் செய்தது காங்கிரஸ் அரசாங்கம். உண்மையில் மோடி ஆட்சியில் மது கள்ளச் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. இரட்டை விலையில் விற்கிறார்கள். சமீபத்திய உதாரணம், நாட்டில் அதிக அளவில் ரூ.12.57 கோடி மதிப்புடைய மது, தேர்தல் ஆணையத்தால் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது. இப்படி நிறைய அடுக்கலாம். ஆனால், வெற்றிகரமாக அந்த மாயையை நிறுவியிருக்கிறார்கள்.
சரி, இது மாயை என்றால், உள்ளூரில் எடுபடாதே? பின் எப்படி குஜராத்தில் மோடி தொடர்ந்து வெல்கிறார்? குஜராத்திலிருந்து புறப்படும்போது எடுத்த ஒரு புகைப்படம் அந்த உண்மையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
உண்மையின் கதவுகள்
ஊரெல்லாம் சுற்றிவிட்டு, அகமதாபாத் திரும்பியபோதுதான் அதைக் கவனித்தேன். சில வீதிகளின் நுழைவாயில்களில் பெரிய பெரிய இரும்புக் கதவுகளை அமைத்திருந்தார்கள். அந்த வீதிகளின் புழுதி மண் சாலைகள் நாம் வெளியில் கேட்கும் குஜராத்தின் வளர்ச்சி கோஷங்களோடு எந்த வகையிலும் பொருந்தாதவை. மனதில் வித்தியாசமாகப் படவும், ஓரிடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அகமதாபாதின் மையத்தை ஒட்டியிருக்கும் அந்தப் பகுதியின் பெயர் சோனி கே சால். மோடியின் தொகுதியான மணிநகருக்கு மிக அருகில் இருக்கும் பகுதி. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. “வீதியின் நுழைவாயிலில் ஏன் இரும்புக் கதவுகளை அமைத்திருக்கிறார்கள்?” என்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த அதிரவைக்கும் பதில் இது: “பழங்கால முறைதான். கலவரம் ஏற்பட்டால் கதவைப் பூட்டிவிட்டுப் பதுங்க.”
அருகருகே இருந்த வீதிகளில் நுழைந்து சென்றபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. பெரும்பாலான வீடுகளில் நிலை, கதவுகள், ஜன்னல்கள் யாவும் இரும்பாலேயே அமைக்கப்பட்டிருந்தன. “ஏன் மரங்களைப் பயன்படுத்துவது இல்லையா?” என்ற என் அடுத்த கேள்விக்குக் கிடைத்த பதில் நிலைகுலையச் செய்தது. “கலவரத்தின்போது தீயை இது கொஞ்சமாவது தாக்குப்பிடிக்கும் இல்லையா? இங்கே கலவரங்களின்போது தீப்பந்தங்கள்தான் வீட்டுக்குள் முதலில் வரும். அப்புறம் என்ன வெட்டினாலும் கூறுபோட்டாலும் சரி… எரித்தால்தான் அவர்களுக்கு வெறி அடங்கும்.”
எனக்கு கோத்ராவும் நரோடா பாட்டியாவும் மாறி மாறி நினைவுக்கு வந்தன. கோத்ராவில் ரயில் பயணிகளைத் துடிக்கத் துடிக்கத் தீ வைத்துதான் அழித்தார்கள். நரோடா பாட்டியாவில் ஒன்பது மாதக் கர்ப்பிணியான கௌஸர் பானுவின் வயிற்றை வாளால் கிழித்து அந்தச் சிசுவை வெளியே எடுத்தவர்கள் தரையில் போட்டு அதை மிதித்தார்கள்; அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அதன் மீது எண்ணெயை ஊற்றி எரித்தார்கள்.
அங்கிருந்து வெளியே வந்தேன். கார் ஓட்டுநர் ஒரு இந்து. “சார்… இந்துக்களுக்கும் பயம் உண்டு சார். முஸ்லிம்கள் சுற்றி அதிகமாக வாழும் இடங்களில் இந்துக்களும் இப்படிப் பாதுகாப்புக்கு வீதி நுழைவாயிலில் இரும்புக் கதவுகள் போட்டுக்கொள்வது உண்டு” என்று சொல்லி ஓர் இடத்தைக் காட்டினார். பின்னர் சொன்னார்: “இந்த பயம்தான் சார் உண்மையில் குஜராத்தை ஆட்சி செய்கிறது. இரு தரப்பையும் வெவ்வேறு வகைகளில்.”
கார் அகலமான ஒரு சாலையில் பாய்ந்து செல்ல ஆரம்பித்தபோது, எனக்கு நடிகை நந்திதா தாஸ் ஒரு பேட்டியில் ‘மோடி - வளர்ச்சி - குஜராத்' தொடர்பான கேள்விக்கு அளித்திருந்த பதில் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பேட்டியில் நந்திதா தாஸ் இப்படிக் கூறியிருப்பார்: “ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் ஹிட்லர் ஆட்சியில் அமைக்கப்பட்டவை. ஜெர்மனியின் மிகச்சிறந்த மருத்துவ மனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஆனால், ஹிட்லரை நாம் யாரும் வளர்ச்சிக்காக நினைவுகூர்வதில்லை!”
From: the hindu-tamil
பிச்சைக்காரன்
Posted by
vista consultants
on 12 April 2014
Labels:
தன்னம்பிக்கை
0
comments
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.
அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, “அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.
“அன்பரே.. நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்.” அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.
கணவான், “எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா?”. என்று கேட்டார்
கோட் சூட் வாலிபன் சொன்னான், “நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்”.
“எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்”.
“அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.
என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். “நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா”, என்றான்.
அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன் பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம்!
அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, “அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.
“அன்பரே.. நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்.” அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.
கணவான், “எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா?”. என்று கேட்டார்
கோட் சூட் வாலிபன் சொன்னான், “நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள்”.
“எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்”.
“அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.
என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். “நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா”, என்றான்.
அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன் பயன்படுத்தினால் வாழ்கையில் முன்னேறலாம்!
கொழுப்பை குறைக்க..! எடையைக் குறைக்க சுலபமான வழி !!!
Posted by
vista consultants
on 11 April 2014
Labels:
உடல் நலம்,
மருத்துவ குறிப்புகள்
0
comments
கொழுப்பை குறைக்க..!
பூண்டு: ‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.
கொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை:கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
மிளகு:வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சாம்பார் வெங்காயம்:சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
கோடாம்புளி: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகம் – அதிமதுரம்:தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.
ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.
செம்பருத்தி,ரோஜா இதழ்கள்: செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி – ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!
——–
எடையைக் குறைக்க சுலபமான வழி !!!
எடையைக் குறைக்க சுலபமான வழி – ஜெனரல் மோட்டார்ஸ் டயட் .
மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது.
அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும்.
1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
1. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
2. இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது.
3. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
4. நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.
ஐந்தாம் நாள் சிறிதளவு(ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர்(மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.
5. ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம்.
6. ஏழாவது நாள் ஒரு கப் சாதம் – காய்கறிகளுடன், பழ ஜுஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜுஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது.
7. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.
இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.
முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.
3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும்.
நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது.
5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது.
அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது ஜெனரல் மோட்டார்ஸ் டயட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணம்! - ரகசியமாக திரும்புகிறது?
Posted by
vista consultants
on 3 April 2014
Labels:
பொருளாதாரம்
0
comments
மக்களவைத் தேர்தலையொட்டி வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 23
லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் நாடு திரும்பிவிட்டது என்று மும்பையில்
உள்ள நிதி நிர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருப்புப் பணம் இந்தியாவுக்குள் திரும்பி வருகிறது என்பதற்கு என்ன ஆதாரம்
என்று அந்த வட்டாரங்களிடம் கேட்டபோது, பங்குச் சந்தையில் ஏற்படும் அர்த்தம்
புரியாத எழுச்சி, ஹவாலா சந்தைகளில் காணப்படும் சுறுசுறுப்பு, தங்கக்
கடத்தல் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள
திடீர் சுறுசுறுப்பு ஆகியவைதான் என்கின்றனர்.
பங்குச் சந்தையில் திடீரென புள்ளிகள் உயர்ந்து வருகின்றன. ஆனால்
தொழில்துறையில் பெரிய அளவில் மீட்சி ஏற்பட்டுவிடவில்லை. உற்பத்தியும்
பெருகவில்லை. மின்சார சப்ளையைக் கண்காணித்து வருவோர் கடந்த சில நாட்களாக
மின்பற்றாக்குறை குறைந்து வருகிறது என்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் 3
முக்கிய காரணங்கள், மின்உற்பத்தி அதிகரித்து வருகிறது. மின்உற்பத்தி
நிறுவனங்கள் ஏற்கெனவே தயாரித்ததைவிட அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.
பெரிய தொழிற்சாலைகள் முழு வீச்சில் வேலை செய்யாததால் மின் நுகர்வு
குறைந்திருக்கிறது என்பதாகும்.
கருப்புப் பணம் எவ்வளவு?
நம் நாட்டில் திரளும் கருப்புப் பணம் எவ்வளவு என்று எவருக்கும் தெரியாது.
அரசிடம் புள்ளிவிவரம் கிடையாது. சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம்
என்று சொல்கிறார்கள். இதன் ஒரு பகுதி உள்நாட்டிலும் பெரும்பகுதி
வெளிநாட்டிலும் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
நரேந்திர மோடிதான் பிரதமராக வருவார் என்று தொழில், வர்த்தக வட்டாரங்கள்
நம்புகின்றன. ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்பதுதான் முதல் வேலை
என்று மோடி பேசியிருக்கிறார். அதற்கு அஞ்சியல்ல, அவர் வந்து பார்க்கும்போது
எதுவும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்தப் பணம் திரும்பப்
பெறப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
சுவாமி சொன்னது என்ன?
இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகள் உள்பட
வெளிநாடுகளில் இருக்கிறதா? யார் சொன்னது? எல்லாம் இந்தியா திரும்பிவிட்டது
என்று சுப்பிரமணியன் சுவாமி சில மாதங்களுக்கு முன்பு கூறினார்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே கருப்புப் பணம் சிறிதுசிறிதாக திரும்பிக்
கொண்டிருக்கிறது என்று ஒரு தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுநீல்
பச்சிசியா தெரிவிக்கிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ரூ.1,500
கோடியிலிருந்து ரூ.5,000 கோடி வரை திரும்பியிருக்கிறதாம். இந்த கருப்புப்
பணம் வியாபாரத்திலிருந்து மட்டுமல்ல, ஊழல் பரிமாற்றங்களிலும்
கிடைத்திருக்கலாம் என்கிறார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்கள், சரக்குச் சந்தையில் நடந்த மொத்த
விற்றுமுதல்கள், பங்குச் சந்தையில் புரண்ட விற்றுமுதல்கள், தங்கம் –
வெள்ளியாக வாங்க செலவிடப்பட்ட தொகை, தரகர்களுக்குக் கிடைத்த தொகை, கணக்கில்
வராத – அதிகாரபூர்வமற்ற சந்தைகளில் வெளியான சில வியாபாரத் தகவல்கள்
ஆகியவற்றையெல்லாம் அலசிப்பார்த்து கருப்புப் பண அளவு மொத்தம் 23 லட்சம்
கோடி ரூபாய் என்கிறார் விஜய் ஜாதவ். இவர் கணக்குத் தணிக்கையாளர். அத்துடன்
கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
8000 டன் தங்கம்
வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டுவர திட்டமிடுவதாக மத்திய
அரசு 2000-ம் ஆண்டில் கூறியபோதே விழிப்படைந்த கருப்புப்பண உரிமையாளர்கள்
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் படிப்படியாக அந்தப் பணத்தை இந்தியாவுக்குள்
கொண்டுவரத் தொடங்கிவிட்டனர். பணமாகக் கொண்டுவர முடியாது என்பதால் தங்கமாக
வாங்கிக் கொண்டுவந்தார்கள். 7,000 முதல் 8,000 டன்கள் வரை தங்கம்
இந்தியாவுக்குள் இப்படி வந்திருக்கிறது.
2003 அக்டோபர் 3-ம் தேதி எம்.சி.எக்ஸ். என்ற பரிவர்த்தனை நிலையத்தைத்
தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஒருவர், “இந்தியா ஆண்டுதோறும் 800 டன்
தங்கத்தையும் 3,500 டன் வெள்ளியையும் நுகர்கிறது, இந்தத் துறையில்
உள்ளவர்கள் அன்றாடம் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்” என்றார். ஆனால்
அவர் சொன்ன புள்ளி விவரம் தவறு. அது உலக அளவிலான நுகர்வு. இந்தியாவில்
2002-ல் 467 டன்னும் 2003-ல் 367 டன்னும் தங்கம்
விற்பனையானது.
அப்படியானால் அமைச்சர் கூறிய 800 டன்
என்ன கணக்கு? வெளிநாடுகளில் தங்கம் எந்தப் பயனும் இல்லாமல் பாதுகாப்பு அறைகளில்
தூங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பணக்காரர்களோ பணத்தை வெளிநாடுகளில்
சும்மா பதுக்கி வைத்திருக்கின்றனர். எனவே அந்தப் பணத்தைக் கொடுத்து
தங்கத்தை வாங்கிவிட்டனர் என்கிறார் ஜாதவ்.
பங்குச் சந்தையிலும் கருப்புப் பணம்
பங்குச் சந்தையில் தனியார்கள், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி
முதலீட்டு நிறுவனங்கள் என்று 3 தரப்பினர் முதலீடு செய்கின்றனர். சில
நாட்கள் திடீரென பங்குச் சந்தை புள்ளிகள் உயரும். கேட்டால் வெளிநாட்டு
நேரடி முதலீடு அதிகரித்தது என்பார்கள். இப்படி வந்த பணத்தைக் கொண்டுதான் பல
நிறுவனங்கள் புதிய தொழில் திட்டங்களையும், வீட்டுமனை, அடுக்கு வீடு
தொழிலையும், வணிக வளாகங்களையும் நிறுவி வருகின்றன.
தங்கக் கடத்தல் அதிகரிப்பு
உள்நாட்டில் தங்க நுகர்வு அதிகமாக இருப்பதால்தான் விலை அதிகரிக்கிறது என்று
தங்கத்துக்கு சில கட்டுப்பாடுகளை நிதியமைச்சகம் கொண்டுவந்தது. அதனால் தங்க
நகை செய்வோர், தங்க நகைகளை ஏற்றுமதி செய்வோர்தான் பாதிப்படைந்தனர். அதே
வேளையில், அரசின் நோக்கத்துக்கு மாறாக தங்கக் கடத்தல் அதிகமானது.
ஹவாலாவும் பெருகியது
ரிசர்வ் வங்கியின் வட்டி வீதத்தைவிட சுமார் ஒன்றரை அல்லது இரண்டு சதவீதம்
அதிகம் வைத்துத்தான் ஹவாலா வியாபாரிகள் கட்டணம் வசூலிக்கின்றனர். சீனா,
சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் கருப்புப் பணத்தைப் பெற்று
இந்தியாவுக்குக் கடத்துவது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்று அந்த
வட்டாரங்களிடம் பேசியதில் தெரியவருகிறது.
ரிசர்வ் வங்கி தரும் தகவல்
2000 முதல் 2014 வரையில் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்பாக ரிசர்வ்
வங்கி தரும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தாலே கருப்புப்பண நடமாட்டம் புலப்படும்
என்கிறார் ஜாதவ். ஆனால் ஜாதவ் கூறுவதை வருவாய்ப் புலனாய்வு வட்டாரங்கள்
மறுக்கின்றன. அவருடைய புள்ளிவிவரங்களும் தகவல்களும் நம்ப முடியாதவை
என்கின்றன.
தேர்தலுக்கான விளம்பரச் செலவு, போக்குவரத்துச் செலவு, வாக்காளர்களை
பொதுக்கூட்டங்களுக்கு ‘அழைத்து வர’ ஆகும் செலவு ஆகியவற்றைப் பார்க்கும்போது
கருப்புப்பணம் வெளியே வந்துவிட்டதை உணரவே முடிகிறது.
ஒசாமா பின்லேடன்
Posted by
vista consultants
on 2 April 2014
Labels:
செய்தி
0
comments
"பின்லேடன்" என்ற பெயரைக் கேட்டதுமே அவன், மிகப் பெரிய தீவிரவாதி என்பது அனைவரின் மனதிலும் தோன்றிவிடும். அவன் ஏன் தீவிரவாதியாக மாறினான்? எப்படி மாறினான்? என்பது தொடர்பாக பல மாறுபட்ட தகவல்கள் உள்ளன. அவனைப் போலவே அந்த தகவல்களும் புரியாத புதிர்களாகவே உள்ளன. பின்லேடனின் முழுப் பெயர் ஓசாமா பின்முகம்மது பின் ஆவாட் பின்லேடன்.
1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பிறந்தான். பின்லேடனின் தந்தை பெயர் முகம்மது பின்லேடன். சவூதி அரேபியாவில் கட்டுமானத் தொழிலில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். கோடீசுவரரான இவருக்கு 22 மனைவிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
22 மனைவிகள் மூலம் முகம்மது பின்லேடனுக்கு 55 குழந்தைகள் பிறந்தனர். ஆனால் சிலர் 70 குழந்தைகளுக்கு மேல் உள்ளனர் என்று சொல்கிறார்கள். இதுவரை அந்த கணக்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய சட்டத்துக்கு பயந்து முகம்மது பின்லேடன் 4 மனைவிகளை மட்டுமே கணக்கில் காட்டி இருந்தார். மற்ற மனைவியர் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்து வந்தனர்.
அத்தகைய மனைவிகளில் ஒருவர் அமிதியா அல் அட்டாஸ். இவர் முகம்மது பின்லேடனின் 10-வது மனைவி என்று பட்டியலிடப்பட்டுள்ளது. முகம்மது பின்லேடன்- அமிதியா அல் அட்டாஸ் தம்பதியருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தான். அவன் தான் ஒசாமா பின்லேடன். தந்தையின் வழியில் ஒசாமாவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டான். கோடி, கோடியாக பணம் சம்பாதித்தான்.
ஒசாமா பின்லேடனுக்கு சிறு வயதில் இருந்தே இஸ்லாமியக் கோட்பாடுகளில் அதிக பற்று ஏற்பட்டது. சில கணிப்புகளின்படி, ஒசாமா அவரது தந்தைக்கு 7-வது மகன் ஆவான். இதனால் சிறு வயதிலேயே ஒசாமா பின்லேடன் செல்வ செழிப்பில் மிதந்தான். என்றாலும் இஸ்லாமிய நெறிமுறைகளை ஒரு போதும் அவன் மீறியதே இல்லை. படிக்கும் வயதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டான்.
இஸ்லாமிய நாடுகளின் மீது வல்லரசு நாடுகள் செலுத்திய ஆதிக்கம் இவனது இளம் வயதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 1979-ம் ஆண்டு தன் 22-வது வயதில் பின்லேடன் சொகுசு வாழ்க்கையைத் துறந்து இஸ்லாமிய மக்களுக்காக போராட முன்வந்தான். முதலில் அவனது எதிர்ப்பு போராட்டங்கள் சாத்வீகமாகத் தான் இருந்தது.
ஆனால், சில போராளி குழுக்கள் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட பிறகு அவனது போராட்டக்களம் மாறி விட்டது. நாளடைவில் அவன் தீவிரவாதியாக மாறினான். 1988-ம் ஆண்டு அல் கொய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை ஒசாமா பின்லேடன் தோற்றுவித்தான்.
இஸ்லாமிய நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளை ஒழித்து கட்டுவதும், அதன் பிறகு, முகம்மது நபி வாழ்ந்த காலத்தைப் போல், ஒரு தலைவருக்குக் கீழ் உலகளாவிய இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். இந்த இரண்டும் தான் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய கொள்கைகளாக இருந்தன.
இந்நிலையில், 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. இதையடுத்து, அந்த நாட்டை அல்-கொய்தா தீவிரவாதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தலிபான்களின் ஆட்சியை ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் சுதந்திரமாக ஆயுதப் பயிற்சிகள் பெற வாய்ப்பும் வசதியும் கிடைத்தன.
ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் முகாம்கள் உருவாக்கி அல்-கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி எடுத்தனர். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் ஏராளமான உதவிகளை செய்தது. தீவிரவாத இயக்கத்தை பலப்படுத்திக் கொண்ட பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒசாமா பின்லேடன் சவால் விட தொடங்கினான்.
ஜிகாத் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று முதன் முதலாக 1996-ம் ஆண்டு ஒசாமா பின்லேடன் 'பட்வா' வெளியிட்டான். அமெரிக்க மக்களையும், அமெரிக்க ராணுவ வீரர்களையும் பழிக்கு பழி வாங்க கொல்லப் போவதாக அறிவித்தான்.
பின்லேடனை சுண்டைக்காய் பயல் என்று அமெரிக்கா விமர்சித்தது. ஆனால் இது பற்றி கவலைப்படாத ஒசாமா பின்லேடன் இஸ்லாமிய நாடுகளில் தன் படைகளை பலப்படுத்தினான். 1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தான். இஸ்லாமியர்களை கொன்றால், அமெரிக்க மக்களுக்கு எதிராக புனிதப்போர் நடத்தப்படும் என்றான்.
பின்லேடனின் 2-வது எச்சரிக்கையையும் அமெரிக்கா அலட்சியம் செய்தது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் 1998-ல் இரண்டு நகரங்களில் அமெரிக்க தூதரகங்களில் குண்டுகள் வெடித்தது. 2000-ம் ஆண்டு ஏதென் துறைமுகத்தில் நின்ற அமெரிக்க கடற்படை கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவங்களுக்கு பிறகே பின்லேடன் பற்றி அமெரிக்கா கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது. அல்-கொய்தா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. சபையும் அல்-கொய்தா அமைப்புக்கு தடை விதித்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், ஆலந்து, ரஷியா, சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் அல்-கொய்தாவுக்கு தடை விதித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் அல்கொய்தாவை உலகின் அதி பயங்கரமான தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த காலக் கட்டத்தில் அல்-கொய்தா அமைப்பில் இருந்து தனித்து இயங்கும் சிறு, சிறு குழுக்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்கொலை தாக்குதல்களை நடத்தின.
அந்த சிறு குழுக்களின் மூலத்தை கண்டு பிடிக்க முடியாதபடி இருந்தது. உலகம் முழுவதும் அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்கா மீது அல்-கொய்தா நடத்திய பயங்கரமான தற்கொலை தாக்குதல்கள் சம்பவத்துக்கு பிறகு தான் பின்லேடன் பற்றி உலக மக்களுக்கு பரபரப்பு தகவல்கள் தெரியத் தொடங்கின.
2001-ம் ஆண்டு அமெரிக்க மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை அல்-கொய்தா நடத்தப் போவதாக சுமார் 52 நாடுகளின் உளவுத்துறை அமெரிக்காவை எச்சரித்து உஷார்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, எதையும் கண்டுகொள்ளவில்லை.
அதிநவீன படைகளை வைத்துள்ள அமெரிக்கா, எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் தங்களை நெருங்க கூட முடியாது என்ற இறுமாப்புடன் இருந்தது. அந்த இறுமாப்பை 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் தவிடு பொடிஆக்கி விட்டனர். அன்றைய தினம் அமெரிக்கர்களுக்கு துக்க தினமாக விடிந்தது.
அதிகாலை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்ட 4 பெரிய விமானங்களை ஒரே சமயத்தில் 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் கடத்தினார்கள். விமானிகளை துரத்தி விட்டு, விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் அந்த 4 விமானத்தையும் ஓட்டினார்கள்.
அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான, "பென்டகன்" மீது முதல் விமானம் மோதியது. இதில் பென்டகனின் ஒரு பகுதி அழிந்தது. இந்த அதிரடி தாக்குதலால் அமெரிக்கா நிலை குலைந்தது. அமெரிக்காவின் முப்படைகளும் மிரண்டு போயின.
அவர்கள் சுதாரித்து பதிலடி தாக்குதல் நடத்துவதற்குள் இரண்டு விமானங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது மோத செய்து, தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். இரட்டை கோபுர தாக்குதலை அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்தது.
உலகம் முழுவதும் அந்த தற்கொலை தாக்குதலை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போனர்கள். 110 மாடிகளுடன் கம்பீரமாக நின்ற இரட்டை கோபுரம் சில நிமிடங்களில் இடிந்து, தகர்ந்து தரை மட்டமானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் பிணமானார்கள்.
இந்த தாக்குதலுக்கு காரணமான ஒசாமாவை பழி தீர்க்க வேண்டும் என்ற தீராக்கோபம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே அந்த நாட்டின் மீது அமெரிக்கா விமானத்தாக்குதல் நடத்தியது. இதில் தலீபான்கள் ஆட்சியை இழந்தனர். பின்லேடனும் ஓடி ஒளிந்தான். அவன் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது.
இதை நன்கு அறிந்து இருந்த பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப், சண்டையில் பின்லேடன் இறந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைகுன்றுகளில் அவன் பதுங்கி இருக்கலாம் என்று பொய்க்கதைகளை பரப்பினார்.
அமெரிக்காவின் உளவுத்துறையும் மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களும் அவன் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கின. சில நாடுகள் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததால், அவன் எங்கிருக்கிறான்? என்பதை கண்டுபிடிப்பதில் உளவு அமைப்புகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
எனினும் அமெரிக்காவும், நேசநாடுகளும் முயற்சியை கைவிடவில்லை. இறுதியில், அவன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது உறுதியானது. பாகிஸ்தானில் பின்லேடன் மறைவிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத் துறை ஒரு யுக்தியை கையாண்டது.
அந்நாட்டு டாக்டர்கள் உதவியுடன் போலியான மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது. இந்த குழுவில் உள்ளவர்கள் கணக்கெடுப்பதுபோல், வீடு வீடாகச் சென்று, யார்... யார் இருக்கிறார்கள்? என்று ரகசியமாக நோட்டமிட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அபோதாபாத் என்ற ஊரில், ஆடம்பரமான பங்களாவில் அவன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா அவசர அவசரமாக அந்த பங்களாவில் இருந்து சற்று தள்ளி, ராணுவ முகாமை ஏற்படுத்தியது.
குண்டுவீச்சு மற்றும் அதிரடி தாக்குதலில் நன்கு தேர்ச்சி பெற்ற கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்தபடியே பின்லேடன் பதுங்கி இருந்த பங்களாவை கண்காணித்தனர். மேலும், அந்த பங்களா சுற்றுச்சுவரின் உள்பகுதியில் ரகசிய கேமராக்களை ஒட்ட வைத்து, உள்ளே இருப்பவர்களின் நடமாட்டத்தையும், பின்லேடன்கூட யார்...யார் இருக்கிறார்கள்? என்றும் கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில், அந்த பங்களாவில் அதிரடியாக புகுந்து, தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் யுக்திகளை வகுத்தனர். அந்த யுக்தியை செயல்படுத்த 'சீல்ஸ்' அதிரடிப்படை வீரர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்த படையினர் 2.5.2011 அன்று, அதிரடியாக பின்லேடன் பங்களாவுக்குள் புகுந்து சோதனை போட்டனர். ஒரு அறையில் பதுங்கி இருந்த பின்லேடனையும், அவனது மகனையும், ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த அதிரடித் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் நேரில் பார்த்தனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின்லேடன் கொலை சம்பவத்தை வீடியோ திரையில் பார்த்தபடி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பரபரப்பான முகங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அங்கு மற்ற அறைகளில் இருந்த பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்லேடன் உடலை யு.எஸ்.எஸ்- கார்ல் விஷன் என்ற அதிநவீன கப்பலில் ஏற்றிச் சென்று கடலுக்கு அடியில் ராணுவம் புதைத்து விட்டது. பூமியில் புதைத்தால், அவனது ஆதரவாளர்கள் அவனுக்கு அங்கு நினைவிடம் எழுப்பினாலும் எழுப்பி விடுவார்கள் என்றே, யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.