ஒரு லட்சம் ஏ.டி.எம்.,கள் நிறுவ வங்கிகள் திட்டம்


அடுத்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சம், ஏ.டி.எம்.,களை அமைக்க, வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை, வங்கிகள் அறிமுகப்படுத்தின. இந்த வகையில், முதன் முதலாக, எச்.எஸ்.பி.சி., வங்கி மும்பையில், தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்.,) இயந்திரத்தை, 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அடுத்தடுத்து, ஏ.டி.எம்.,களை பெருமளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் வரையில், 99 ஆயிரத்து 218 ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த, 2016ம் ஆண்டுக்குள் ஏ.டி.எம்.,கள் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிதாக அமைக்கப்படும் ஏ.டி.எம்.,களுக்கு, 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரை, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

"இந்திய ஏ.டி.எம்., தொழிலும்; அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சியும்' என்ற தலைப்பில், ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் தொகையில், பெரும்பகுதியான மக்கள், வங்கி வசதி இல்லாத இடங்கள், மற்றும் குறைவான வங்கிகள் உள்ள இடங்களில்தான் வசிக்கின்றனர். வங்கிகள் பெரும்பாலும், நகர்ப்புறங்களில் தான், கிளைகளை அமைப்பதில், முக்கியத்துவம் காட்டுகின்றன. எனவே, வங்கிகள் இல்லாத இடங்களில், ஏ.டி.எம்., வசதிக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது.வங்கிகள், அடுத்த நான்கு ஆண்டுகளில், கிராமப் புறங்களிலும், நடுத்தர நகரங்களிலும், ஏ.டி.எம்.,களை விரிவுபடுத்த வேண்டும் என, இந்த ஆய்வில், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

"பிரிமியம்' வகை பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுத்தப்பட்டது


பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், "பிரிமியம்' வகை பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, தெரிய வந்துள்ளது.சாதாரண வகை பெட்ரோல், டீசலை விட,"பிரிமியம்' வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், நுகர்வோர் எவரும் இவ்வகை பெட்ரோல், டீசலை வாங்குவதில்லை.இதன் காரணமாகவே, எண்ணெய் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, கூறப்படுகிறது.

 சென்ற மாதம், மத்திய அரசு, சாதாரண வகை பெட்ரோல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 5.50 ரூபாய் குறைத்து, 9.28 ரூபாயாக நிர்ணயித்தது. அதேசமயம், உயர் வகை பெட்ரோல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் செய்யாமல், 15.96 ரூபாய் என்ற அளவிலேயே வைத்துள்ளது. இதேபோன்று, உயர் வகை டீசல் மீதான கலால் வரியும் குறைக்கப்படவில்லை.விலை உயர்வுக்கு பிறகு, டில்லியில், உயர் வகை டீசலின் விலை, லிட்டருக்கு, 43 சதவீதம் அதிகரித்து, 65.81 ஆகவும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 9 சதவீதம் உயர்ந்து, 77.58 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேசமயம், ஒரு லிட்டர் சாதாரண வகை, பெட்ரோலின் விலை, 67.90 ஆகவும், மானிய விலையில் விற்கப்படும், டீசல் விலை, 46.95 ரூபாயாகவும் உள்ளன.அதிக விலை வித்தியாசத்தால், உயர் வகை டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை முழுவதுமாக நின்று விட்டது. எனவே, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) மார்க்கண்ட் நீனி,  தெரிவித்தார்.

வங்கிகளின் நிகர வசூலாகாத கடன்ரூ.2 லட்சம் கோடியை தாண்டும்


 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு முழு நிதியாண்டில், இந்திய வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.கடன் ஒதுக்கீடு அதிகரிப்பு, சொத்து மதிப்பில் ஏற்படும் மாறுதல், மூலதனம் திரட்டுவதில் உள்ள சவால்கள் போன்றவற்றால், வங்கித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, நடப்பு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையின் தாக்கத்தையும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம், வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இது போன்ற காரணங்களால், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்து, அவற்றின் நிகர லாபமும் குறைந்துள்ளது.

மின்சாரம், விமானச் சேவை, நெடுஞ்சாலை, நுண் கடன் நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் இருந்து, வங்கிகளுக்கு கடன் தொகை முழுமையாக திரும்ப வராத நிலை உள்ளது.இதன் விளைவாக, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலத்தில், வங்கிகளின் வசூலாகாத கடன், 2.94 சதவீதம் அதாவது, 1.57 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள முழு நிதியாண்டில், 3.75 சதவீதம் அதாவது, 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

பொன்மொழிகள்


ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. -யாலப் தாம்சன்.


தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது. -பங்.


முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது. -தாகூர்.


கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை. -மர்பி.


அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள். -டிரைடன்.


வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும் -பீசீசர்.


நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது. -எலினார் ரூஸ்வெல்ட்.


நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள். - இங்கர்சால்.


மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள். - செர்வாண்டில்.


ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை. - ஜீந்தொஃபோன்தேன்.


ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது. -ஜப்பான்.


பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். -வேல்ஸ்.


தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான். -கொரியா.


உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும். -சீனா.


தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன். -செக்கோஸ்லோவேகியா.


பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது. -டென்மார்க்.


வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது. -துருக்கி.


உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது. - நைஜீரியா.


நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய். - பல்கேரியா.


பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும். - பிரான்ஸ்.


இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது. - பின்லாந்து.


மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது. - பெல்ஜியம்.


இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது. -ருமேனியா.

சீர்திருத்த நடவடிக்கைகளால் அன்னிய நிறுவனங்கள் ரூ.88,000 கோடி பங்கு முதலீடு


மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்திய பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 1,600 கோடி டாலர் (88 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொண்டுள்ளன.இது குறித்த புள்ளி விவரத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ளது. ஆசிய நாடுகள்:அதில், நடப்பு ஆண்டு, செப்., 28ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில்,1,611 கோடி டாலர் (ரூ.88,605 கோடி) அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு செப்டம்பர் மாதம் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், 382 கோடி டாலர் (21,010 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.


இந்தவகையில், நடப்பாண்டில், ஆசிய நாடுகளிலேயே, இந்திய பங்குச் சந்தைகளில் தான், அதிக அளவில் அன்னிய முதலீடு குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திடீர் எழுச்சிக்கு, உள்நாட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்களும், வெளிநாட்டு மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளால், சர்வதேச பணப்புழக்கம் உயர்ந்துள்ளதுமே காரணம் என, பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்."சென்செக்ஸ்' :நடப்பு ஆண்டில், ஆசிய அளவில், இந்திய பங்குச் சந்தையின், "சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின், "நிப்டி' குறியீட்டு எண்களின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.நடப்பாண்டு, பிப்ரவரி மாதம், மிக அதிக அளவாக, 500 கோடி டாலருக்கும் அதிகமாக, இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு குவிந்தது.

இது, மார்ச் மாதம் 150 கோடி டாலராக குறைந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து, முறையே 10.30 கோடி டாலர் மற்றும் 27.30 கோடி டாலர் அளவிற்கு, முதலீடுகளை திரும்பப் பெற்றன.இந்த நிலையில், ஜூலை மாதம், மீண்டும் அன்னிய முதலீடு அதிகரித்தது. அன்னிய முதலீட்டாளர்கள் 200 கோடி டாலருக்கும் அதிகமாக இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தனர்.நடப்பாண்டில், பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளை பொறுத்தவரையில், சீனா நீங்கலான ஆசிய நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து, தென்கொரியா, 1,309 கோடி டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான்:இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், தலா 200 - 400 கோடி டாலர் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.வழக்கமாக, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை, அதிக அளவில் ஈர்க்கும் ஜப்பான் நாட்டின் பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை 369 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே அன்னிய முதலீடு குவிந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையின் அண்மைக்கால எழுச்சி காரணமாக, பல ஆய்வு நிறுவனங்கள், "சென்செக்ஸ்' குறியீடு குறித்த இலக்கை உயர்த்தியுள்ளன.மார்கன் ஸ்டேன்லி நிறுவனம், 2013ம் ஆண்டு டிசம்பருக்குள், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 23,069 புள்ளிகளை எட்டும் என, மதிப்பீடு செய்துள்ளது. இது, இதுவரை எட்டாத நிலையாகும்.கடைசியாக, கடந்த 2008ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி,"சென்செக்ஸ்' 21,206.77 புள்ளிகளை எட்டியிருந்தது. இதுவே, அதிகபட்ச அளவாகும். வரும் ஆண்டு, இதை விட அதிகமாக உயரும் என,மார்கன் ஸ்டேன்லி மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூடு பிடிக்கும் வர்த்தகம்:அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகளின் தினசரி வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில், அன்றாடம் சராசரியாக 14,150 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற பிப்ரவரியில், மிகவும் அதிகபட்சமாக 19,887 கோடி ரூபாயாக இருந்தது.மே - ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்களில், தினசரி வர்த்தகம், சராசரியாக 12,000 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே நடைபெற்றது.