சந்தை செய்திகள்

நாட்டின் நிதி பற்றாக்குறை:

 நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப்பற்றாக்குறை, 5.3 சதவீதமாக இருக்கும். இது, வரும் நிதியாண்டில், 4.8 சதவீதமாக குறைக்கப்படும்.

நடப்பாண்டு பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகரித்து வரும் மானியச் செலவுகளால், நிதிப்பற்றாக்குறை அதிகரித்து, 5.3 சதவீதமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


மத்திய அரசு, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதார தர குறியீடு குறைப்பு குறித்த, பன்னாட்டு நிறுவனங்களின் அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.வரும், 2016 - 17ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 3 சதவீதமாக குறையும்

பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை 


எதிர்வரும் 2013-14 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகளின் விற்பனை ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு குறையாது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அப்போது, "பொதுத்துறை நிறுவனங்களை தனியார்  மயமாக்கும்  திட்டம் எதுவுமில்லை. அரசுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறோம். வரும் நிதியாண்டிலும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளின் விற்பனை குறையாது என்பதில் அரசு நம்பிக்கையுடன் உள்ளது.


மேலும்  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 % சதவிகிதத்துக்கு குறையாது. அதோடு எதிர்வரும் நிதி ஆண்டில் 6 முதல் 7 சதவிகித வளர்ச்சி அடையும் வகையில் முன்னேற்றம் காணும்" என்றும் கூறியுள்ளார். கடந்த 2011-12 நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ரிசிர்வ் வங்கி வட்டி  விகிதம் 

வரும் செவ்வாய் அன்று நடைபெறவுள்ள ரிசிர்வ் வங்கி கூட்டத்தில் repo rate எனப்படும் வட்டி விகிதத்தை, இந்தியாவின் மத்திய வங்கி குறைத்து இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


இந்திய பங்குசந்தைகள் தற்போது bull run எனப்படும் காளையின் பிடியில்  உள்ளது ,அவை வரும் march மாதத்திற்குள் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது 

வியக்க வைக்கும் வெஸ்பா எஸ்எக்ஸ்125


நாற்பது வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே கம்பீரம், பிரமிப்பான செயல்
திறன் வித்தியாசமான மிடுக்கான கட்டமைப்பு அத்துடன் காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்ட சிற்சில மாற்றங்கள் தோற்றத்திலும் வசதிக்கான அம்சங்களிலும், தொழில்நுட்பங்களிலும், இதுவே இன்றைய எல்எம்எல் வெஸ்பாவின் சிறப்பான அடையாளங்கள்.

 தரம், நிறம், விலை என்று எதிலும் சமரசம் செய்துக் கொள்ளாமல் தனக்கான வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு
உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் ஆண், பெண் என்று அனைத்து தரப்பினரின் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடியதாய் உள்ளது. வெஸ்பா எல்எக்ஸ்125 சக்திவாய்ந்த 125சிசி, கார்ப்ரேட்டட், 3 வால்வு என்ஜினைக் கொண்டுள்ளது. இது 7500 ஆர்பிஎம்எமில் 10.06 bhp பவரையும், 6000ஆர்பிஎம்மில் 10.6 mn டார்க்கையும் வழங்குகிறது. ஒரு பட்டனைத்தட்டி இயக்கக்கூடிய என்ஜின் வழுவழுப்பான, உறுதியான, ஸ்திரமான நேரம் பாதுகாப்பான ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது.இந்த இந்தோ-இத்தாலிய மாடலான எல்எக்ஸ்125 ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கிள் சைடட் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வரும் பின்புறம் ஹைட்ராலிக் மோனோ ஷாக் அப்சர்வரும் இருப்பதால் மேடு பள்ளங்கள் நிறைந்த நகரச்சாலைகளிலும் சிறுசிறு திருப்பங்களிலும் சுலபமாக இயக்கும் வகையில் இருக்கிறது.

வெஸ்பாவின் உறுதியான, ஸ்திரமான நீடித்து உழைக்கும் நம்பகமான கட்டமைப்பிற்கான காரணம் இதன் மோனோகாக் ஸ்டீல் லோட்-பேரிங் பாடி ஆகும். அதாவது இதன் முக்கிய முன் மற்றும் பின்புற பாடி ஸ்டீலினாலானது மட்டுமின்றி எந்த இணைப்பும் இல்லாத ஒரே ஸ்டீல் தகடினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இது மிகவும் உறுதியாக இருப்பதுடன், மற்ற பாகங்கள் மட் கார்ட், ஹெட்லைட் ‌செட் போன்றவை பைபரினால் உருவாக்கப் பட்டு இதன் வடிவமைப்பு சீராக உள்ளதாலும் அதிக எடையின்றி பெண்களும் சுலபமாக இயக்கும் வண்ணமுமே உள்ளது.

இதன் அழகான கவர்ச்சியான தோற்றத்திற்கு காரணங்களாக கிரோம் கோர்ட்டிங் கொண்ட கிரில், ரியல் வியூ மிர்ரரின் வடிவம், சஸ்பென்ஷன் கவர், டெயில் லைட் செட், கிரிஸ்டல் ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர், ஹை-டெபனேஷன் (hd), பாடியின் பெயின்ட், ஆர்ட் லெதர் சீட்கள் மற்றும் 3ஸ்போக் சாடின், பினிஷ் கொண்ட அலாய் காம்பினேஷன் வீல் போன்றவைகள் உள்ளன. ஆறு அழகிய நிறங்களில் கிடைக்கும் வெஸ்பா எல்எக்ஸ்125 அழகிய வித்தியாசமான வடிவம், சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள், உறுதியான கட்டமைப்பு என்று ஸ்கூட்டர் செக்டாரில் தனக்கென ஒரு கம்பீரமான இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிறுவன பங்குகள் 8 ருபாய் என்ற அளவில் bse(500255)  இல் வணிகமாகி வருகிறது, நீண்டகால முதலீட்டாளர்கள் ,குறைந்த அளவில் வங்கி வைக்கலாம் 

சந்தை எங்கே செல்கிறது?

 இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிவந்தைதுள்ளது , அது பற்றிய ஒரு தொழில்நுட்ப பகுப்பாய்வு 

daily chart படி sensex 50 நாளைய சராசரியான 19135(its also previous swing low ) கீழே வர்த்தகம் முடிவடையும் வரை காளைகளின் பிடி ஓங்கியிருக்கும் 



weekly chart படி sensex இல்  சில bearish indications உள்ளது ,அதனை மேலே உள்ள வரைபடத்தில் சுட்டி உள்ளேன் 

முதலீட்டாளர்கள் 19135 புள்ளிகளை ,sensex உடைக்கும்வரை  buy  on  dips என்ற உத்தியை கையாளலாம் 


வாங்க வேண்டிய பங்குகள்

bse யில் பட்டியிலடப்பட்டுள்ள A GROUP பங்குகளில் காலாண்டு உச்சத்தை தொடும் பங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ,இவை technical ஆக மேலே உயரும்  வாய்ப்பு உள்ளது 


முதலீட்டாளர்கள் வாங்கி பயன் அடையலாம் 

தங்கத்திற்கு வரி?

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரிடையே தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் தங்கத்தில் தான் மிக அதிகமான பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், முடக்கப்படும் இந்த முதலீட்டால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதால் தங்கத்தில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தான் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரியைக் கூட மத்திய அரசு உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதை வாங்குவது குறையவில்லை. இந் நிலையில் இப்போது தங்கம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இறக்குமதியை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 நிருபர்களிடம் பேசிய அவர், தங்கத்தின் தேவை மிதமானதாக இருக்க வேண்டும். எனவே, தங்கம் இறக்குமதிக்கான செலவை அதிகரிக்கச் செய்வதை விட வேறு வழி இல்லை. இந்த யோசனை அரசின் பரிசீலனையில் இருக்கிறது. இறக்குமதி அதிகரிப்பால் நிதிப் பற்றாக்குறையின் அளவும் அதிகரிக்கிறது. தங்கம் அதிகமாக இறக்குமதி செய்தது மற்றும் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காரணங்களால், 2011-12ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.2 சதவீதமாக அதிகரித்து விட்டது. எனவே, தங்கத்தின் இறக்குமதியை பெருமளவில் குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இறக்குமதிக்கான வரியும் உயர்த்தப்படலாம். எனவே, பொதுமக்கள் தங்கத்தின் பயன்பாட்டை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


இறக்குமதி குறைந்தால் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகமாகும். இதனால் விலை தாறுமாறாக உயரவும் வாய்ப்புண்டு. 2011-2012ம் ஆண்டில் ரூ. 33,000 கோடியளவுக்கு தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.