நாவல் பழம்

 மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழம்
நாவல் பழத்தை சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது.



ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள்.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.

மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.

மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.


நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்

சிரிச்சு பழகுங்க




 தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...

மகன்: ஃபெயிலாயிட்டா..?

தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
......................................................

 ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?

மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
...................................................

 ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?

சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
................................................

நண்பர் 1: ""அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''

நண்பர் 2: ""எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
...........................................

 ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!

மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
...............................................................

 ஆண்: என்னோட மனைவியைக் காணோம்....................ஒரு அஞ்சு
நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?

பெண்: எதுக்கு?

ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம்
பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
...............................................

 நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே

டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
...........................................................................

நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...

நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!