பணம் செய்ய விரும்பு

அறம் செய்ய விரும்பு என்பதுதான் சரி. ஆனால் நல்லது செய்யவும் பணம் தேவையே? நமது சமூகத்தில் பொதுவாக ஏழைகளிடமும் நடுத்தர மக்களிடமும் பணக்காரர்கள் என்றால் ஏதோ கெட்டவர்கள் போலவும், பணம் இருந்தால் மன நிம்மதி போய்விடும் என்றும் சில எண்ணங்கள் உள்ளது. நல்ல வழியில் சம்பாதித்து நல்ல விஷயங்களுக்காக செலவிடப்படும் பணம் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும், அவனின் குடும்பத்துக்கும், அவன் சார்ந்த சமூகத்துக்கும் நல்லதே ஆகும்.
நாம் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்? வேறு எவரிடமும் கை ஏந்தாமல் நமது சொந்த தேவைகளையும் குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்துக்காக செலவிடவும் பணம் தேவை. இவ்வாறு ஒவ்வொருவரும் நல்ல முறையில் பணம் சம்பாதித்து சேமித்து வந்தால் அது அந்த நாட்டையே வளமாக்க உதவும்.

எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? சரி... இப்பொழுது நாம் ஒரு வேலைக்கு செல்கிறோம் அல்லது நாமே சொந்தமாக தொழில் செய்கிறோம். பணம் நமக்கு சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ மாதந்தோறும் வருகிறது. அவரவர் வேலைகளுக்கு தகுந்தவாறு மாதம் ரூ. 50,000 மோ, ரூ. 100,000 மோ, ரூ. 200,000 மோ சம்பாதிக்கலாம். யார் பணக்காரர்?.... ரூ. 100,000 வருமானம் பெறுபவரா?.... மாதம் ரூ. 200,000 வருமானம் பெறுபவர் ரூ. 250,000 செலவு செய்தால், அதேப்போல் ரூ. 50,000 வருமானம் பெறுபவர் ரூ. 25,000 மட்டுமே செலவு செய்தால், இப்பொழுது யார் பணக்காரர்?.

ரூ. 50,000 வருமானம் பெறுபவர், தான் செலவு செய்யும் பணம் போக மீதியை என்ன செய்கிறார் என்பதும் முக்கியம். ஒருவர் பணக்காரர் ஆவதை, அவர் சேமிப்பு என்று எதை நினைக்கிறார் என்பதையும், அவர் எவ்வாறு சேமிக்கிறார் என்பதையும் பொறுத்தே அமையும். ரூ. 50,000 வருமானம் பெறுபவர் சிறப்பாக திட்டமிட்டு சிறந்த முறையில் சேமித்தால், முதலீடு செய்தால், அவரே மாற்ற இருவரை விட குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகலாம்.

ஆகவே ஒருவர் பணக்காரர் ஆவதை தீர்மானிப்பது ஒருவரது வருமானம் மட்டும் அல்ல, அவரின் செலவிடும் பழக்கமும், அவரின் சேமிக்கும் பழக்கமுமே ஆகும்.

பங்குச்சந்தையில் பணத்தை இழப்பது ஏன்?

இந்த பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை ஏற்கனவே பெரும்பாலானவை முன்னைய பதிவுகளில் சொல்லப்பட்டவைதான்.



பணத்தை இழப்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம் என்றாலும் முக்கியமான மூன்று:-

1. பேராசை



2. நிதானமின்மை




3. அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்



பங்குச்சந்தையில் பல்வேறு முறைகளில் பங்குவர்த்தகம் செய்ய முடிந்தாலும்,எவை உங்களுக்கு நன்கு தெரியுமோ அவை மட்டுமே செய்ய வேண்டும்.

நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள்.



நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள். அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

சந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும்.

உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

வணிகராக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இதை படிக்கவும்

பவர் ஆப் அக்குமுலேசன் (Power of Accumulation)

இது ரொம்ப நாள் முன்பு இணையத்தில் படித்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்க முயற்சி.

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் அவனை புகழ்ந்து பாடிய புலவனிடம் பரிசில் என்ன வேண்டுமோ
கேள் என அரசன் அகங்காரத்துடன் சொன்னான். அதற்கு அந்த புலவர் அரசனின் அகம்பாவத்தை அழிக்கவேண்டும் என எண்ணி அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் சதுரங்க பலகை இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணி தாருங்கள் 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 2ம் கட்டத்தில் எவ்வளவு இருக்கிறதோ அதை அதே எண்ணால் பெருக்கினால் எவ்வளவு வருகிறதோ அத்தனை நெல்மணி தாருங்கள், 4வது கட்டத்தில் 3ம் கட்டத்தில் எத்தனை உள்ளதோ அதே எண்ணால் பெருக்க கிடக்கும் எண்ணிக்கை இது போன்று அந்த 64 கட்டத்தில் எவ்வளவு பிடிக்கிறதோ அது போதும் என சொன்னார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என சொல்லிவிட்டான் சதுரங்க பலகையும் வந்தது.

1வது கட்டம் = 1 நெல்மணி

2வது கட்டம் = 2 நெல்மணி

3வது கட்டம் = 4 நெல்மணி

4வது கட்டம் = 16 நெல்மணி

5வது கட்டம் = 256 நெல்மணி

6வது கட்டம் = 65636 நெல்மணி

7வது கட்டம் = 4294967296 நெல்மணி

8வது கட்டம் = 18446744073709551616 நெல்மணி

9வது கட்டம் = 18446744073709551616 X 18446744073709551616 நெல்மணி

சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்ன அரசன் இந்த 9 கட்டத்திற்குள்ளாகவே அவன் நாட்டில் இருந்த அனைத்து நெல் மணிகளும் காலியாகிவிட்டது.

அரசன் புலவரின் புத்தி சாதுரியத்தை மெச்சி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் என போகும் அந்த கதை.

சரி இந்த கதைக்கும் முதலீடு / பங்கு வர்த்தகம் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நம் முதலீடும் அப்படித்தான் எவ்வளவுக்கு எவ்வளவு சிறு வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பல்கி பெருகும் (வட்டி குட்டி போடும், அந்த குட்டியும் குட்டி போடும் அப்படி).

சரி இந்த கட்டுரை படித்த உங்களுக்கு சின்ன home work

9வது கட்டம் = ??
10வது கட்டம் = ??..
..
64வது கட்டம் = ??

சும்மா கணக்கு போட்டு பாருங்க........


to know the power of compounding click here

பங்கு வர்த்தகம் சூதாட்டமா?

பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது.
சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும் அல்லவா ? நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை
வாங்கி, விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செயவதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.

பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது. அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பது புரிபடும்.

சந்தை நிலவரம்

சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் கண்டு வருகிறது ஆனால் 5605,5650(50dma),5750(200 dma) என்ற புள்ளிகளை கடந்தால் மட்டுமே மேலும் வழுப்பெரும்

தற்போது நிஃப்டியில் , head and shoulder போன்றதொரு அமைப்பு உருவாகி வருகிறது