பங்கு சந்தைகளில் அன்னிய முதலீடு


நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது என,"செபி' அமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை:மதிப்பீட்டு காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 17,544 கோடி ரூபாயை பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 12,750 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 4,794 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஜூலை மாதம், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகளில், 10,273 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. அதேசமயம், சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டன.


நடப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் 10ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், கடன் பத்திரங்களில் மேற்கொண்டிருந்த முதலீட்டிலிருந்து, 143 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன. இதே காலத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 321 புள்ளிகள் அல்லது 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடன் பத்திரங்கள்:நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், பங்கு சந்தைகளில், 57,060 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில், 24,109 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், "செபி' அமைப்பிடம், பதிவு செய்து கொண்ட, அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,767லிருந்து, 1,756 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், பதிவு செய்து கொள்ளப்பட்ட துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,278லிருந்து, 6,362 ஆக உயர்ந்துள்ளது.

0 comments: