பணக்காரன்


ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :

அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......, நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்...., நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் ......., நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....

தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!

அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குகளில் ரூ.3,000 கோடி முதலீடு




கடந்த இரு வாரங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,) இந்திய பங்குச் சந்தைகளில், 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதையடுத்து, நடப்பு ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் செய்துள்ள முதலீடு, 65,954 கோடி ரூபாயை எட்டியுள்ளது.


பன்முக சில்லரை வர்த்தகத்தில், 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி மற்றும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களில், 49 சதவீத அளவிற்கு, வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள், பங்குகளை வாங்க ஒப்புதல் ஆகியவற்றிற்கு மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக, வரும் மாதங்களில், அன்னிய முதலீடு மேலும் சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது 

நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம்



நடப்பு 2012-13ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள், ஒரு நிதியாண்டிற்கு, நான்கு தவணைகளில், முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன.இவ்வகையில், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் 15ம் தேதிக்குள் (இரண்டாவது தவணை), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளது.

பெரும்பான்மையான நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் செலுத்திய வரி நல்ல அளவில் உயர்ந்துள்ளது."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்' என்பது போல, இதுவரை முன்கூட்டிய வரி செலுத்தியுள்ள நிறுவனங்களுள், எல்.ஐ.சி., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, 1,300 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 1,165 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 2.38 சதவீதம் அதிகரித்து, 800 கோடி ரூபாயிலிருந்து, 1,100 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 4.97 சதவீதம் வளர்ச்சிகண்டு, 650 கோடி
ரூபாயிலிருந்து, 815 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பொதுத் துறையை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா செலுத்திய வரி, 600 கோடி ரூபாயிலிருந்து, 620 கோடி ரூபாயாகவும், தேனா பேங்க் செலுத்திய வரி, 77 கோடி ரூபாயிலிருந்து, 180 கோடி ரூபாயாகவும் அதிகரித்துஉள்ளன. வெளிநாட்டு வங்கியான சிட்டி பேங்க் செலுத்திய வரி, 100 கோடி ரூபாயிலிருந்து, 400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 190 கோடி ரூபாயிலிருந்து, 300 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் செலுத்திய வரி, 95 கோடியிலிருந்து, 160 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.


மோட்டார் வாகனத் துறையை சேர்ந்த மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், செலுத்திய முன்கூட்டிய வரி, 176 கோடி ரூபாயிலிருந்து, 200 கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிறுவனம், செலுத்தும் முன்கூட்டிய வரியை வைத்து, அக்காலாண்டில், அந்நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது, குறிப்பிட்ட காலாண்டில், ஒரு நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் நல்ல அளவில் உயர்ந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

பார்த்தேன் ரசித்தேன்


விவசாயி......


தங்கம் உற்பத்தி 2 டன் இறக்குமதி 900 டன்

உள்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, இரண்டு டன் தங்கம் உற்பத்தி ஆகிறது. அதேசமயம், இதன் இறக்குமதி ஆண்டுக்கு, 900 டன் என்ற அளவில் உள்ளது


வெளிநாடுகளில், குறைந்தபட்சம் ஆறு மாதம் தங்கி, தாய் நாடு திரும்பும் ஒருவர், உரிய சுங்க வரி செலுத்தி, ஒரு கிலோ தங்கம் கொண்டு வர அனுமதி உள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தங்க இறக்குமதி, 1,067 டன்னாக இருந்தது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 969 டன்னாகவும், 2009-10ம் நிதியாண்டில், 850 டன்னாகவும் இருந்தது.


வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான வரி விகிதங்களை உயர்த்தியது. இதனால், நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, தங்க இறக்குமதி, 204 டன் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது

கம்ப்யூட்டர் விற்பனை 15 சதவீதம் வளர்ச்சி


:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 1.24 கோடியாக அதிகரிக்கும். இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (1.18 கோடி கம்ப்யூட்டர்கள்) 15 சதவீதம் அதிகமாகும் என, தகவல் தொழில்நுட்ப சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கம்ப்யூட்டர் விற்பனை மந்தமடைந்துள்ளது.

சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில், 1.18 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (93 லட்சம் கம்ப்யூட்டர்கள்) 16 சதவீதம் அதிகமாகும்.
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், "ஹார்ட் டிஸ்க்' சாதனத்திற்கு அதிக தட்டுப்பாடு காணப்பட்டது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில், கம்ப்யூட்டர் விற்பனை குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது.