கம்ப்யூட்டர் விற்பனை 15 சதவீதம் வளர்ச்சி


:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 1.24 கோடியாக அதிகரிக்கும். இது, முந்தைய நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (1.18 கோடி கம்ப்யூட்டர்கள்) 15 சதவீதம் அதிகமாகும் என, தகவல் தொழில்நுட்ப சாதன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மந்த நிலையால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கம்ப்யூட்டர் விற்பனை மந்தமடைந்துள்ளது.

சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவில், 1.18 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இது, முந்தைய நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, (93 லட்சம் கம்ப்யூட்டர்கள்) 16 சதவீதம் அதிகமாகும்.
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், "ஹார்ட் டிஸ்க்' சாதனத்திற்கு அதிக தட்டுப்பாடு காணப்பட்டது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு போன்ற காரணங்களால், சென்ற நிதியாண்டில், கம்ப்யூட்டர் விற்பனை குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது.

0 comments: