எங்க தல .. கவுண்டர் தான்........


அந்த சினிமாக்காரனுக தான் ஆனா ஊனா விழா கொண்டாடறானுக..

அட எதுவுமே கிடைக்கிலைன்னா பொறந்த நாள் கொண்டாடறானுக..

அதுவும் 34 வயசுக்கு மேல போறானுகளா ன்னு பாத்தா போகவே மாட்டேங்கறானுக..

இவங்கதான் நாட்டுல பொறந்தானுகளா.. நாமெல்லாம் பொறக்கவே இல்லையா !!

கூட நடிக்கிற ஹீரோவையே ஓட்டி தள்ளுற தைரியமுள்ள ஒரே 
 காமெடியன் .. 

என்றைக்கும் எங்க தல .. கவுண்டர் தான் ..

wiki

தெரிந்து கொள்வோம் வாங்க-..


வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்..

புதுப் பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணியைத் தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைப்படத்தை தபால் முத்திரையாகப் பயன்படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகளும் கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல் ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கைக்கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10 என்ற நேரம் புன்னகையைக் குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதியடையச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை அமைதியாக வைத்திருப்பதற்காகச் சுரக்கின்றது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.

2 - 6 வயதில் தான் வளர்கிறது.

வறுக்காத முந்திரிக் கொட்டை விஷத் தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.


விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம்.

தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.


தைரியசாலி

ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம்
ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது

செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!

ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல்
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..?
என்ன அசை போடுகிறாய் ...?

நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது
பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன்  என்று  உரத்த  தொனியில்  கூற
சிங்கம் ஓட்டம் பிடித்தது

தைரியம் இருந்தால் எந்த தருணத்திலும்  ஒருவன் மீளுவான் கோழைதான் சாவான்

பணவீக்கம் 6.84 சதவீதமாக உயர்வு


ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் கடந்த நான்கு மாதங்களாக குறைந்த வந்த பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரியில் 6.62 சதவீதமாக இருந்த பணவீக்கம் பிப்ரவரியில் 6.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை, வெங்காயம் மற்றும் பழவகைகளின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதேமாதத்தில் பணவீக்கம் 7.56 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




தமிழர்கள்


அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக் ­
கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே
டெலிபோனை பயன்படுத்தியுள் ளார்கள்”



தமிழர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்
காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தியுள் ளார்கள்”
என்று....!


இந்திய பொருளாதார வளர்ச்சி6 சதவீதத்தை தாண்டும்: உலக வங்கி

இந்திய பொருளாதாரம், வரும் நிதியாண்டில், 6 சதவீதமும், வருங்காலத்தில் அதற்கு மேலும் வளர்ச்சி காணும் என, உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள அவர், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:இந்தியாவின், 5 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏமாற்றம் அளிப்பதாக உள்ளபோதிலும், இதுவரையிலான நிகழ்வும், இனி நடைபெற உள்ளதும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன.

 அவற்றின் அடிப்படையில், இந்தியா உயரிய வளர்ச்சி நிலையை எட்டும் என, நம்புகிறோம்.சர்வதேச சந்தை நிலவரங்கள் மேம்பட்டு வருகின்றன. ஏற்றுமதி சந்தை சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது. அதனால், இந்தியாவும் சிறப்பாக வளர்ச்சி காணும்.கடந்த 2005ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், சர்வதேச பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்களிப்பு, இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, நிதியமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு ஜிம் யங் கிம் தெரிவித்தார்.இதனிடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 4-5 ஆண்டுகளில், 7-8 சதவீதமாக உயரும் என, திட்டக் குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களை கவர சிதம்பரம், வெளிநாடு செல்ல திட்டம்


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வரும் ஏப்ரல், மே மாதங்களில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மத்திய பட்ஜெட் குறித்து தொழிலகப் பிரதிநிதிகளுடன்  நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், "இந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 5.2 சதவீதமாக இருக்கும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதையும் விட குறைவாக இருக்கும் என்று இப்போது தெரிகிறது. அடுத்த நிதியாண்டில் பற்றாக்குறையை 4.8 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க முயற்சிப்போம். நிதி நிர்வாகத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவது இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைவிட, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாகும்.

 இதனை சீர் செய்ய ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதனை முன்வைத்து தீவிர நடவடிக்கைகள் வேண்டியுள்ளது. அதிக அளவில் முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்ல ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார் .

செபி தலைவர் யு.கே.சின்ஹா வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை கூடுதல் முதலீடு செய்ய அழைக்கும் விதமாக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச இருக்கிறார்.