இந்திய பொருளாதாரம், வரும் நிதியாண்டில், 6 சதவீதமும், வருங்காலத்தில்
அதற்கு மேலும் வளர்ச்சி காணும் என, உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம்
தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள அவர், மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம்
பேசியதாவது:இந்தியாவின், 5 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏமாற்றம் அளிப்பதாக
உள்ளபோதிலும், இதுவரையிலான நிகழ்வும், இனி நடைபெற உள்ளதும் ஊக்கமளிக்கும்
வகையில் உள்ளன.
அவற்றின் அடிப்படையில், இந்தியா உயரிய வளர்ச்சி நிலையை எட்டும் என, நம்புகிறோம்.சர்வதேச சந்தை நிலவரங்கள் மேம்பட்டு வருகின்றன. ஏற்றுமதி சந்தை சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளது. அதனால், இந்தியாவும் சிறப்பாக வளர்ச்சி காணும்.கடந்த 2005ம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், சர்வதேச பொருளாதாரத்தில், இந்தியாவின் பங்களிப்பு, இரு மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை, நிதியமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு ஜிம் யங் கிம் தெரிவித்தார்.இதனிடையே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 4-5 ஆண்டுகளில், 7-8 சதவீதமாக உயரும் என, திட்டக் குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment