மொட்டை
Posted by
vista consultants
on 29 September 2010
அடுத்த இரு நாட்களக்கு நான் எனது இரண்டு வயது மகன் ஆதித்யாவிற்கு மொட்டை அடிக்க திருப்பதி செல்ல இருப்பதால் மார்க்கெட் பற்றி எதுவும் எழுத முடியாது
இருப்பினும் மார்க்கெட் இப்போது மிக முக்கியமான திருப்பத்தில் இருப்பதாக உணர்கிறேன்
be extremely cautious @ tops
இது வரை எங்களது பதிவை படித்துள்ள 394(sep18 to sep 29) தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி
அன்புடன்
ராஜாமணி
நிதி மேலாண்மை
Posted by
vista consultants
on 28 September 2010
பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய விஷயம் "நிதி மேலாண்மை" (FUND MANAGEMENT & MONEY MANAGEMENT ), இது பங்கு சந்தைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் தேவை. "Money Makes Money" (M^3) - இதுவே பங்குச்சந்தையின் தாரகமந்திரம்.
பணம் உள்ள ஒருவர் என்ன விலை கொடுத்து வேண்டுமானாலும் கார் வாங்கமுடியும், ஆனால் கார் ஓட்டுவது என்பது கலை. அதற்காக அவர் ஓர் ஓட்டுனரை பணிஅமர்த்தவேண்டும், இல்லையெனில் அவரின் சில பல முயற்சிகள் அவரை சிறந்த ஓட்டுனராக மாற்றக்கூடும்.
பங்குச்சந்தையும் அதுப்போலவே: இங்கு வெற்றிக்கு காரணி நிதி மேலாண்மை 95 சதவிகிதம், பங்கு தொழில்நுட்பம் 5 சதவிகிதம். நீங்களே நிதி நிர்வாகியாகவும் TA ஆகவும் செயல்படலாம். அல்லது சிறு தொகைக் கொடுத்து TA ஒருவரை அமர்த்திக் கொள்ளலாம்.
பணபலத்துடன் சேர்ந்த தொழில்நுட்பமே இங்கு தேவை; ஆகையால் வாழ்க்கையிலும் பங்குச்சந்தையிலும் வெற்றிப் பெற நல்ல நிதி நிர்வாகியாக இருப்பது அவசியம்.
எதை வாங்குவது
Posted by
vista consultants
on 27 September 2010
எனது கடந்த பதிவில் நான் மூன்று வீடியோ கோப்புகளை இணைத்து இருந்தேன். அவற்றின் உதவியால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியுமா ??? பதில் - இல்லை என்பதே .. !!
இன்று சிறுமுதலிட்டாளர்கள் எதிர்பார்ப்பது எந்த பங்கை எப்போது வாங்க வேண்டும் என்றும், அதை விட முக்கியமாக எங்கே விற்பது என்பதும் தான்.
சிறுமுதலிட்டாளர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் எங்களுடைய மென்பொருள் trading system உட்கொண்டுள்ளது.
எங்களுடைய 10 ஆண்டுகால அனுபவத்தின் வாயிலாக FUNDAMENTALLY GOOD STOCKS ஐ , எங்களது TRADING SYSTEM மூலம் அலசி எங்கள் CLIENTS க்கு வழங்குகிறோம்.
இது பற்றிய விளக்கமான பதிவுகள் - எங்கள் மற்றுமொரு ப்ளாக் - stoxtrends.blogspot.com இல் கொடுத்துள்ளோம்.
சிறுமுதலிட்டாளர்கள் தங்களது கருத்துக்களை எவ்வித தயக்கமும் இன்றி எங்களுக்கு தெரிவிக்கலாம்.
பெட்டிக்கடை - "சின்ன கல்லு, பெத்த லாபம்"
Posted by
Rajesh V Ravanappan
on 25 September 2010
ஒரே பரபரப்பா இருந்தது, நாஸ்டாக் நாகராஜ் கிட்ட போன்ல பேசின, "சார், உங்க அனுபவத்த எங்ககிட்ட பகிர்ந்துக்கணும், மக்கள் எதிர் பாக்கறாங்க'ன்னு சொன்னேன் . அதுக்கு அவரு," அனுபவத்தன்னா, எந்த அனுபவம்? டாஸ்மாக் ல சரக்கடிகறது கூடதா அனுபவம், ஊருக்கு போனா அனுபவம், வந்தா அனுபவம், உட்காந்தா, நின்னா, படுத்தா எல்லா அனுபவம் தா.... நீ எத பத்தி கேட்கிற தம்பி??". குபீர்னு வேர்த்துச்சு.. மறுபடியும் தெளிவா கேட்டேன், ' சார்..., உங்க பங்கு சந்தை அனுபவம் பத்தி கேட்டேன் சார்",, "ஓ!! அப்படியா! தெளிவா சொல்லன்னும்மில்ல!! படிச்ச புள்ள.. எதையும் வெவரம பேசணும்" அப்படின்னு சொல்லி என்ன அவினாசி ரோடு பெட்டிக்கடைக்கு வரசொல்லிட்டாறு.
நாஸ்டாக் நாகராஜ் சார எனக்கு முன்னாடியே தெரியும், நா கோயமுத்துர்ல வொர்க் பண்ணினபோ அவரு என்னோட client , trade ஏதும் பெருசா பண்ண மாட்டார், ஆனா அட்வைஸ் நெறையா பண்ணுவார். ரொம்ப நாள் ஆயிடுச்சி இடையில.. எப்படி மாறியிருப்பரோ?, என்னனென்ன சொல்லுவாரோ, என்கிட்டே ஏதாவது கேட்பாரோ?? பல கேள்விகள் மனசுக்குள்ள.. திட படுத்திக்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நா திருப்பூர் க்கு வந்து 5 வருஷம் ஆயிட்டதால கோயமுத்தூர் கொஞ்சம் புதுசாவே தெரிஞ்சது. கௌதம் சென்டர் ல வொர்க் பண்ணினது கண்ணுக்கு வந்து போச்சு.. யோசிச்சிகிட்டே இடத்த நெருங்கிட்டேன்.. அதே பெட்டிக்கடை.. ரோட்ட விரிவாக்கனதுள்ள கொஞ்சம் எடம் மாறிருக்கு. மத்தபடி அதே பையன்.. சுத்தி tea குடிச்சிட்டும், புக விட்டுட்டும் நம்ம clients ..
கொஞ்ச நேரம் கழிச்சி வந்தார்.. அதே கெட்-அப், கொஞ்சமும் மாற்றமில்ல.. அதே MGR மீச.. DYE அடிச்ச தலைமுடி, TIGHT ஷர்ட், பான்ட்.. அதே பீடா மோகம்.. தூரத்திலேயே பார்த்துட்டார், அரசியல்வாதி மாதிரி ஒத்த கைய தூக்கி கும்பிடு போட்டுட்டே வந்தார்.. "என்ன பா ராஜேசு!! எப்படி இருக்க!! ரொம்ப நாள் ஆச்சில்ல.. ஆளு உடம்பு போட்டுட.. கல்யாணம் பண்ணிட்டியா??", கேள்வி கேட்டுகிட்டே போனவர மறிச்சி, ' உங்க கிட்ட சொல்லாமலா சார்.. இன்னியும் ஆகல!" பேசிக்கிட்டே சைகைல பீடா ஆர்டர் பண்ணிட்டார், பீடா போட்டுட்டு அவரு பேசுறது.... ஸ்டைலுனு இப்ப சொல்லிக்கிலாம்.
அவரே ஆரம்பிச்சார்," வெள்ளிகிழம கூப்பிடுர ?? !! வாரம் புல்லா (full ) ப்ரோகருக்கு சம்பாரிச்சு குடுத்துட்டோம், பாவம் அரசாங்கம் நஷ்ட்டத்துல இருக்குல.. அதா நேத்து சாயங்காலம் டாஸ்மாக் போயிட்டேன்", என்ன சொல்லணும் ஷேர் மார்க்கெட் பத்தி?? நா என்னப்பா சொல்ல போறேன்.." சுத்தியும் அப்படியே காட்டினவரு, " பாரு எல்லாத்தையும், ஏதோ வெட்டி முறிகிற மாதிரி இன்னைக்கும் ஆபீஸ் பக்கம் சுத்திக்கிட்டு இருக்காங்க!! இவங்களுக்கெல்லாம் வீடே இருக்காதா?? எப்ப பாத்தாலும் இங்கயே குப்ப கொட்டுறாங்க.. அவங்க கிட்ட கேளு!! உதய் முகர்ஜி தோத்தான் போ.. அவ்வளோ பேசுவாங்க.."
"ஆனா நீயும் கரட்டான இடத்துக்குதா வந்திருக்க.. இந்த பெட்டிகடையில வச்சி தெரிஞ்சுக்கிற விஷயம் வேற எங்கயும் காசு குடுத்தாலும் கத்துக்க முடியாது.. என்னோட ஒருத்தனோட அனுபவம் அப்படிங்கறது விட.. இது ஒரு அனுபவ கூடம். ப்ரோக்கர்கிட்ட விட்ட காசெல்லாம் இங்க பேசியே தீர்ப்பாங்க!!".
சரி வெள்ளி கிழமன்னு சொல்லி சனி கிழமைதா வர்றோம்.. ரொம்ப பேச வேண்டாம்.. அடுத்த வாரம் மார்கெட்ட பத்தி கிழி கிழின்னு கிழிச்சரலாம்.. சரியா.."
பீடா வாய்ல நொம்பீடுச்சி, துப்ப புடிக்காம பேச்ச முடிக்கிர்றாரு, .. சரி வேறென்ன பண்ணன்னு மனசுக்குல நெனச்சுக்கிட்டேன். "சார்.. வந்ததுக்கு எதாவது கருத்து சொன்னிங்கன்னா.. நல்லாஇருக்கும்..." இழுத்தேன்!!
சரி எழுதிக்கோ," ஷேர் மார்க்கெட் மட்டும் தா உலகத்துலேயே, சின்ன முதலீட்டுல நெறைய காசு பாக்க முடியும், அதுதா எல்லாத்தையும் காந்தம் மாதிரி இழுக்குது.. ஆனா நம்ம சரியா பண்ணினோம்னா காசு பாக்கலாம்.. அப்படி இல்லேன்னா ப்ரோக்கர வாழ வைக்கிலாம். எந்திரன் படத்த மொத நாள் பாக்க ஆச படாம இருக்கற ஒரே department இந்த client department தா .. ஏன்னா இங்கதா, " சின்ன கல்லு... பெத்த PROFIT "
விடை பெற்றார்.. மீண்டும் சிந்திப்போம் ..
கருத்து
Posted by
vista consultants
on 24 September 2010
மூன்று வீடியோ காட்ச்சிகளை கடந்த பதிவுகளில் உள்ளன
இது போன்ற வீடியோ youtube இல் லட்சகணக்கில் உள்ளன
அவற்றால் பந்குஸந்தைஐ புரிநிது கொள்ள முடியமா
இது பற்றிய கருத்துகள்
வரவேர்கபடுகினரென
இது போன்ற வீடியோ youtube இல் லட்சகணக்கில் உள்ளன
அவற்றால் பந்குஸந்தைஐ புரிநிது கொள்ள முடியமா
இது பற்றிய கருத்துகள்
வரவேர்கபடுகினரென
Understanding Stock Trading Technical Analysis Tutorial w/ the Zecco Zirens
Posted by
vista consultants
பங்கு ஆராய்ச்சி
Posted by
rajamani
on 23 September 2010
பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள பலருக்கு பங்குகளை அலசி ஆராயத் தெரிவதில்லை.
பங்குகளை இரண்டு விதமாக ஆராயலாம்:
1 . FUNDAMENTAL ANALYSIS - நீண்டகால முதலிட்டலருக்காக ( 5 முதல் 7 வருடங்கள் ) இதனை பயன்படுத்த வேண்டும். (நிலம் வாங்குவது போல)
2 . TECHNICAL ANALYSIS - குறுகியகால முதலீட்டுக்காக ( 3 மாதத்திற்கு குறைவாக)
இதில் trading என்று வந்துவிட்டால் உலகளவில் 2 வது வகையே நடைமுறையில் உள்ளது.
இதற்காக CANDLESTICK CHARTS அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
(1) CANDLE PATTERNS -
http://www.candlesticker.com/
(2) CHART PATTERNS
http://thepatternsite.com/chartpatterns.ஹ்த்ம்ல்
http://www.onlinetradingconcepts.com/TechnicalAnalysis/ClassicCharting/DoubleBottom.html
(3) SUPPORTS AND RESISTANCES USING TRENDLINES
(4) MOVING AVERAGES
in an uptrending markets generally 50 sma is good support
(5) MARKET SENTIMENT READINGS
put-call ratio, advance declines etc
இந்த 5 பிரிவுகளிலும் உட்பிரிவுகள் பல உள்ளன. இதனை எல்லாம் தெரிந்து கொள்வதேர்கே குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்
மேலும் இதனை எல்லாம் நமது மனதில் வைத்து trade செய்வது என்பது சிறிய முதளிட்டாலர்களுக்கு கடினமான காரியம்.
அதனாலேயே, Automatic / Robotic / Mechanical Trading System - மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் trading செய்யும் போது நமது லாப விகிதம் மிக அதிகம் ஆகும் .
techincal analysis பற்றி பல்லாயிரம் கணக்கில் புத்தகங்கள் / இணையத்தள முகவரிகளும் உள்ளன. ஆகையால் அதனை எல்லாம் ஒரே பதிவில் தருவது இயலாத காரியம்.
கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது..
பெட்டிக்கடை
Posted by
Rajesh V Ravanappan
on 22 September 2010
பங்குச்சந்தை நிகழ்வுகள் எந்த அளவுக்கு CNBC யில் அலசப்படுகிறதோ அதைவிட மிக ஆழமாக, அழுத்தமாக, சுவாரசியமாக அலசி ஆராயும் இடம் நம்ம "பெட்டிக்கடை". அது எங்க இருக்குனெல்லாம் கேட்கக்கூடாது, மும்பை தலால் வீதியிலிருந்து, கோவை அவினாஷி ரோடு வரை எல்லா ஊர்லயும் முதலீட்டாளர்கள் கூடும் இடம் இந்த "பெட்டிக்கடை"..
நம்ம பெட்டிகடையில பேச போறவரு - நாஸ்டாக் நாகராஜ் (Nasdaq Nagaraj ) அவர்கள்.. வாரம் தோறுமான சந்தை நிகழ்வுகளை அவருக்கே உரிய பாணியில் அலச போகிறார்..
காத்திருங்கள்.. !! வெள்ளி தோறும்...!!!
பணம்(பயம்) தரும் பங்குச்சந்தை
Posted by
rajamani
பங்கு சந்தை என்றாலே பலருக்கும் பயம்தான். காரணம் முறையான தொழில்நுட்ப அறிவும், வியாபார முறைகளும் (trading system) இல்லாமையுமே இதற்கு காரணம்.
தமிழர்களில் பங்குச்சந்தையில் ஈடுப்பட்டுள்ளோர்களும் மிகவும் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலரும் பங்கு சந்தையில் ஈடுபட்டுள்ளனர்.
உலகின் மிக நவீன trading system ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்!!
பங்குகளை வாங்கி வைத்தாலே போதும் லாபம் பெற்றுவிடலாம் என்று பலரும் நினைப்பதாலேயே, நாம் நஷ்டத்தை சந்திக்கிறோம். முறையான தொழில்நுட்ப பகுத்தாய்வு இருந்தால் மட்டுமே இத்துறையில் வெற்றி அடைய முடியும்
read more from http://stoxtrends.blogspot.com/2010/02/traders-essentials.html
உச்சக்கட்டம் நெருங்குகிறதா?? - ஒரு ஜாலி அலசல்
Posted by
Rajesh V Ravanappan
on 21 September 2010
ரமணா படத்தில் ஒரு காட்சி- ரமணா யாரென்று ஊர் ஊராக போலீசார் விசாரித்துக்கொண்டிருப்பர், ஆனால் யாருமே சொல்ல மாட்டர்; அப்போது ஒரு போலீஸ் சொல்வார், " ஒரு பயலும் வாயே திறக்கமாட்டேங்கறாங்க!! திருநெல்வேலி போலீசார் ரொம்ப ஸ்ரிட்டு!! அடிக்கிற அடியில கக்கிருவானுக" என்று சொல்லிட்டே திருநெல்வேலி போலிசுக்கு போன் செஞ்சா, அவர் சொல்லுவார். " எங்கலே பேசரானுவ, குச்சிதா உடையுது!! ஒண்ணும் சொல்லு மாட்டேங்கிராணுவ... ???????###@@@@^^!!!!***"
பங்குசந்தை தற்போதைய நிலவரமும் அப்படிதான், நமக்கு தா fund டைட்டு அதா ஒண்ணும் பண்ண முடியல .. ஆனா ஹரிக்கு பிரச்னை இல்ல, ஏன்னா துபாய்ல இருக்கான், கோடி ரூவா fund handle பண்ணறான், average பண்ண முடியும், அவன் பணம் பண்ணிருப்பான்னு நினச்சா!!! அவன் என்கிட்டே கேட்கிறான்," Have you earned anything from this rally?, I missed buddy!!!" - ஒரு முதலீட்டாளரின் ஏக்கம்!!
ஏன் இப்படி? இதோ இப்பொ வந்துரும், ம்ம் ம்ம் கண்டிப்பா வந்துரும், இது தா கடைசி இப்போ வரும் பாருன்னு காத்துக்கிட்டு இருந்தா........ வரவே இல்ல.. போய்கிட்டே இருக்கே.. சந்தை இறக்கமே (இரக்கம்) இல்லாம ஏறுது!!! அதா அதான் அதே தான்.. இறக்கத்த எதிர் பார்த்துட்டே பாதி பேர் ஈடுபடாமலே இருந்துட்டாங்க..
சரி கிட்டத்தட்ட 700 புள்ளி ஏறுடிச்சி.. இது தா கடைசியா.. சந்தை உச்சத்துக்கு வந்துருச்சா?? ஏன் எல்லாருமே இந்த கேள்வி கேட்கிறாங்க ?? ஏன் எல்லாரும் உச்சத்தின் முடிவுக்கு காத்திருக்காங்க?? ஏன்னா உச்சக்கட்டம் வந்தாதான காட்சி முடியும்?? இந்த show miss பண்ணியாச்சு, so அடுத்த show க்கு wait பண்ணறோம்..
ஆன்னா சந்தையோ இது ட்ரைலர் தாம்மா, இனிமே தா மெயின் பிச்சரே ன்னு சொல்லுதா???
Wait and See!!!
indian stock marktes
Posted by
rajamani
இன்றைய இந்திய பங்குச்சந்தை நீர்க்குமிழி நிலையில் உள்ளது நிப்டி(close 6009 ) pe ratio 25 .37 ஆகும் .
கடந்த 20 நாட்களில் உள்ள ஏற்றம் ஆனது மிக அபரிமிதமானது ஆகும் , எனவே முதலிட்டாளர்கள்
தங்களிடம் உள்ள பங்குகளுக்கு tight stoploss வைக்கவும். புதிய முதலிட்டாளர்கள் trading உடன்
நிறுத்தி கொள்ளவும் .
பங்குச்சந்தை குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
கடந்த 20 நாட்களில் உள்ள ஏற்றம் ஆனது மிக அபரிமிதமானது ஆகும் , எனவே முதலிட்டாளர்கள்
தங்களிடம் உள்ள பங்குகளுக்கு tight stoploss வைக்கவும். புதிய முதலிட்டாளர்கள் trading உடன்
நிறுத்தி கொள்ளவும் .
பங்குச்சந்தை குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன